காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சன்யாச ஸ்வீகர மஹோத்ஸவம்- சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜியின் சந்யாச ஸ்வீகார மஹோத்ஸவம்.
சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்!
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார்.
பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். அட்சய திருதியை என்பது ஹிந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாள். சித்திரைத் திங்கள் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளாகிறது.
முதல் யுகமான கிருத யுகத்தில் உலகம் தோற்றுவித்த நாள். அட்சய திருதியை துறவறத்துடன் நேரடியாகத் தொடர்புடையது அல்ல,இன்றைய தினத்தோடு கணேஷ சர்மா டிராவிட் என்ற நாமம் போய் விடும். இன்றோடு கணேஷ சர்மா மற்றவர்களுக்கு நமஸ்காரம் செய்வது போய் விடும், இன்றோடு இல்லத்திலிருக்கும் சொந்த, பந்தம் போய் விடும், இன்றோடு இவரை பெயர் சொல்லி அழைத்தவர்களால் இனி அழைக்க முடியாது,
அனுதினமும் அதிகாலை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கும், பிருந்தாவனத்தில் இருக்கும் இரண்டு பெரியவாளுக்கும் நமஸ்காரம் செய்திடல் வேண்டும். இனி உலகமே உங்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். ஆனால் நீங்கள் உங்கள் குருநாதருக்கு மட்டுமே நமஸ்காரம் செய்ய முடியும்..
இனி பெத்த அம்மாவைப் பார்க்க முடியாது. ஆனால் அப்பா மட்டுமே பார்க்கலாம். இருந்தும் நாளை முதல் தந்தை பார்த்தாலும் தந்தை தான் ஜகத் குருவிற்கு நமஸ்காரம் செய்திட வேண்டும். இந்தப் பீடத்தை ஆளும் சக்தி உங்களின் கைகளில் நாடாளும் மன்னரே வந்தாலும் உங்களுக்கு வணங்கி உள்ளது. சிறப்பாக பீடத்தை ஆட்சி செய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். இன்றே செய்வாய், நன்றே செய்வாய், நல்லதையே செய்வாய்..... ஜெய் சங்கரா தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வாரிசுகளை இந்தியா முழுவதும் உருவாக்க இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும் அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என அதிகார மமதையை போலியான மனிதர் பலரும் விரும்பும் நாட்டில் சன்னியாச வாழ்வுக்கு , இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை என உறவறுத்து அனுப்புவதெல்லாம் எல்லாராலும் முடியாத செயல்
தன் பிள்ளைதான் தனக்கான அடையாளம், குல அடையாளம், தன் வம்சத்தைப் பெருக்கி தன்னை கடைசி காலத்தில் விழுது போல் காக்கும் அடைக்கலம் என்பதையெல்லாம் தாண்டி வாழவேண்டிய வயதில் அவனை கடும் சன்னியாசம் அனுப்புவதெல்லாம் எல்லாப் பெற்றோராலும் செய்ய முடியாத செயல். -விளம்பரம்-
-விளம்பரம்- அது ஒரு வலி, ஒருவகை தானம், அழவேண்டிய இடமும் அதுதான் ஆனால் சொட்டு கண்ணீர் வரக்கூடாத இடமும் அதுதான்அந்த வலி ஆதிசங்கர் பெற்றோர்க்கு உண்டு, பட்டினத்தாரின் தாய்க்கு உண்டு, ஸ்ரீ ரமணர் மகாபெரியவரின் பெற்றோரின் வலியும் இன்னும் பல மகான்களை பெற்றவர்களின் வலியும் அதுதான்
விவேகானந்தர் குடும்பத்தார் நிலையும் அதுதான்
கோசலைக்காவது தன் மகனை ஸ்ரீ ராமனை மணகோலத்தில் கண்டுவிட்ட நிறைவிருந்தது 14 வருடத்தில் வனவாசம் முடிந்து அவன் மீண்டு இல்லம் திரும்புவான் எனும் நம்பிக்கை இருந்தது
ஆனால் இங்கே?
அந்தப் பெற்றோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து, காலமெல்லாம் இச்சமூகம் உங்களை காக்கும் எனும் நம்பிக்கையினைக் கொடுக்க வேண்டிய தருணமிது
இது அந்தணர்கள் மற்றும் சைவப் பிள்ளைகள், ஆண்டிப்பண்டாரங்களில் மற்றும் சமணர்களிடம் வைணவ நெறிகளில் மட்டுமே காண முடியும் -விளம்பரம்-
-விளம்பரம்-ஆதிசங்கரர் தன் தாயிடம் அழுத ஸ்லோகம் ஒன்றுண்டு
"குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம"
என் தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்தாய், வந்து உன் கனவில் நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படியான உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்
சங்கரமடத்தில் அந்த புதிய சன்னியாசி தீட்சை பெறும் நேரம் காதில் ஒலிக்கும் ஸ்லோகம் அதுதான் அந்த தாயின் மனநிலையும் அதுதான்
கருத்துகள்