முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் இலங்கை பயணம் வெற்றிகரமாக முடித்து இராம நவமியில் தமிழ்நாடு வருகை

இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம்,  சிறையிலிருந்த


தமிழ்நாடு மீனவர்கள் 11  நபர்களை நேற்று நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட்டது.


ஊர்க்காவல் துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் 11 நபரையும் எந்தவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.         



      பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மீனவர்கள் 11 நபர்கள் தண்டனை மற்றும் அபராதமின்றி விடுதலை செய்திருப்பதாக தெரியவந்தது.                            இந்தியா இலங்கை இடையே கையெழுத்திடப்பட்ட 7 உடன்படிக்கைகள் விபரம்:-
மின்சார இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HTVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீதனபால மற்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் செயலாளர் எச்.எஸ். சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை,



சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இலங்கை கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.               




                   இந்த நிலையில் 
இராம நவமி நாளில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து, இராமேஸ்வரம் தீவு பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார்

தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில்வே, சாலைத் திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்




இராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் போக்குவரத்து சேவையை கொடியசைத்துத் துவங்கி வைக்கிறார்

பிரதமர்   நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும் புதிய கப்பலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.


அதன் பின் மதியம் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு இராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.




புதிய பாம்பன்  இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, இராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலிருந்து தொடங்கப்பட்டது.





ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இது 550 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும்  கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயரும். இது கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது. துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்ட இந்தப் பாலம் அதிகரித்த ஆயுளையும் குறைந்த பராமரிப்புத் தேவைகளையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு, ரயில் பாலத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது கடுமையான கடல் சூழலில் ரயில் பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.






தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.



இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும்.    பிரதமர் வருகையையொட்டி மத்திய சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஹெலிபேடு தளம், மண்டபம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.




பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முதல் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.

பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


 நிகழ்ச்சிகளை முடித்து, மதியம் 3.50 மணிக்கு இராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

இந்தநிலையில், பிரதமரின் வருகையையொட்டி, அவரது தனிப்பிரிவு பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல்துறை ஆணையர் லோகநாதன், காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்த், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில், மதுரையில் விமான நிலையத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு பிரதமர் டெல்லி செல்லும் வரை இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் அன்றைய தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படும்.



இதுபோல், மதுரை விமான நிலையத்தில் யார்? பிரதமரை சந்திக்க உள்ளார்களோ அவர்களை வரிசைப்படுத்தி உரிய அனுமதி சீட்டுடன் அவரைச் சந்திக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்து விட்டு பிரதமர் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைவார் என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையில் பிரதமர் நிகழ்வு குறித்து உள்ள பதிவுகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன்



இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், நுவரேலியா புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும்.              இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் நேற்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற விருது பிரதமருக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும். இந்த உயரிய கௌரவம் பிரதமருக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்ட நிலையில். சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்துக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  இந்தியாவை தெரிவு செய்திருந்தார்.  தற்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை இந்திய பிரதமரைச் சார்ந்துள்ளது. இந்திய இலங்கை உறவுகளுக்காகவும்  இரு நாடுகளிடையிலும் காணப்படும் பிரிக்க முடியாத பிணைப்புக்காகவும் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறுதிப்பாட்டினை இது பிரதிபலிக்கின்றது. என பிரதமர் தரப்பில் தகவல்.      

இராமேசுவரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நாளை  திங்கட்கிழமை மதியம் 2.50 மணிக்கு விரைவு இரயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் புறப்படும் விரைவு இரயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.





அது போல், இராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு இரயில் புறப்படுகிறது. மேலும், கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் இரயில்  8-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு இராமேசுவரத்துக்கு வருகிறது. இராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூரு க்கு 9-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு இரயில் புறப்பட்டுச் செல்கிறது. இராமேசுவரம்-மதுரை பயணிகள் இரயில் நாளை ராமேசுவரத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் இரயில் காலை 10.45 மணிக்கு இராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. மொத்தம் 28 ரயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே இராமேசுவரத்துக்கு இயக்கப்படும்.           




                    பாம்பன் புதிய ரயில் மற்றும் கப்பல் கடக்க உருவான பாலத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் "என் அன்பு தமிழ் சொந்தங்களே. இந்தப் புண்ணிய இராமேஸ்வரம் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கு இராமநவமி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சில மணி நேரத்திற்கு முன், அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில், பாலராமருக்கு சூரிய கதிர்கள் திலகம் வைத்த நிகழ்வு நடந்தது.   கோஷமிட்டனர் பகவான் ஶ்ரீ ராமரின் வாழ்க்கை, அவரது சிறப்பான ஆட்சியில் நமக்குக் கிடைக்கும் உத்வேகம் தேசத்தைகா கட்டமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இன்று இராமநவமி என்பதால், என்னோடு சேர்ந்து சொல்லுங்கள். ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம். உடன், மக்களும் கோஷமிட்டனர்.கோவிலில் வழிபட்டதை, எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இன்று சிறப்பான நாள். 8,300 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது சாலை, ரயில் திட்டங்கள்; தமிழகத்தின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். இது, அப்துல் கலாம் பிறந்த மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்குக் கற்பித்துள்ளது. அது போல, இராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாக இணைத்திருக்கிறோம் இப்பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு பாலம். பெரிய கப்பல்களும் இதன் கீழ் செல்ல முடியும். ரயில் வேகத்தோடு செல்லும். பல ஆண்டுகளாக இப்பாலத்தை அமைக்க கோரிக்கை இருந்தது. மக்கள் ஆசியுடன் இப்பணியை முடிக்கும் பெருமையை நாங்கள் பெற்றோம். பாம்பன் பாலம் எளிமையான வணிகத்தையும், போக்குவரத்தையும் ஊக்குவிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை தாக்கத்தை இப்பாலம் ஏற்படுத்தும். புதிய இரயில் சேவை, இராமேஸ்வரம் -- சென்னை மற்றும் நாடு முழுவதும் இரயில் சேவையை மேம்படுத்தும். தமிழ்நாடு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு இது பெரும் பலனளிக்கும். இளைஞர்களுக்கு புதிய தொழில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன." என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...