கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் கடன் வழங்கும் தவறான அணுகுமுறை பாதிக்கப்பட்ட
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் சேர்ந்த நபர் தொழிலதிபர் மு.கேசவபாண்டியனின் சட்டப்போராட்டத்தின் விளைவு, கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிளை மேலாளர் உள்ளிட்ட உயர் வங்கி அலுவலர்கள் வரை ஆறு நபர்களுக்கு எதிராக நாமக்கல் மாவட்டக் காவல் துறைக் குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை. குற்ற எண்:14/2020 பதிவான நிலையில், செக் மோசடி, போலியான கையெழுத்துப் போட்டு கோயம்புத்தூர் DRT கடன் வசூல் தீர்ப்பாயத்தில் போர்ஜரி ஆவணங்களை சமர்ப்பித்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோயம்புத்தூர் நகரக் குற்றப்பிரிவில் அடுத்து ஒரு முதல் தகவல் அறிக்கை குற்ற எண்:74/2024 ம் பதிவானது.
அடுத்தடுத்து கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக இரண்டு FIR பதிவான நிலையில், அதற்கு எதிரான விசாரணைக்கு கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடையும் பெற்றது.
மேற்படி, வழக்கின் தொடர் விசாரணை ஜனவரி மாதம் 22 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 06 ஆம் தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்ச நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தடை விதிக்க முகாந்திரமில்லை என்பதை பதிவு செய்ததோடு, மேற்படி தடைகளை நீக்கியும், மூன்று மாத காலத்தில் விசாரணையை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டார் வாய்மொழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க கடன் வழங்கியதாக சொல்கிறார்கள்;
என்.பி.ஏ. கணக்கில் சேர்ந்தால் வங்கிக்கு சிக்கல் என்பதால் அவர்களாகவே லோன் கொடுத்து அதிலிருந்து வட்டியைப் பிடித்தம் செய்கிறார்கள்;
இப்போது வரையில் அவரது கையில் அசல் செக் லீப் இருக்கும் போது, அதே செக்கைப் பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்; அவரது கையெழுத்து மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் போலியாக அவர்களே போட்டு கோயம்புத்தூர் கடன் தீர்ப்பாயத்தில் மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள்;
அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் கடன் வழங்கும் போது அவர்களே மதிப்பிட்ட 5.85 கோடி மதிப்பிலான சொத்துக்களை, வெறும் 1.40 கோடிக்கு ஏலம் விட்டு அவரை நஷ்டப்படுத்தி விட்டார்கள். நிதித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களையும் மீறி மோசடியான முறையில் அவரது கணக்கை என்.பி.ஏ. கணக்காக காட்டியிருக்கிறார்கள் .
என்பதாக, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக, கேசவபாண்டியன் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே கடுமையான வகையில் அமைந்திருந்த பின்னணியில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுதந்திரமான முறையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்த சமயத்தில், காவல் துறை விசாரணைக்கு மீண்டும் தடை ஏற்படும் வகையில், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மார்ச் மாதம் 05 ஆம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை நிர்வாகியான காமகோட்டி உள்ளிட்ட வங்கி CEO உள்ளிட்ட அலுவலர்களுக்கு எதிராக நாமக்கல் மாவட்டக் காவல் துறை குற்றப்பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் அந்த FIR ஐ ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதன் படி கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி கோரக்கைக்கு ஆதரவாக விசாரணைக்கு மீண்டும் இடைக்கால தடை விதித்ததோடு, எஃப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்து முடிவெடுக்க கேசவபாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார், நீதிபதி ஜி.கே.இளந்திரையன். இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுஇதற்கிடையில், நீதியரசர் பி.வேல்முருகன் ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில், நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை குற்ற எண்:14/2020 ன் படி, பதிவு செய்யப்பட்ட FIR லிருந்து கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை செயல் அலுவலர் காமகோட்டி மற்றும் மோகன் ஆகியோர்களது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கியது முறைகேடானது என கேசவபாண்டியன் முன்வைத்திருக்கும் புகார் குறித்து மூன்று மாத காலத்தில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார் ஆனால் சிவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என என்ற ஹாஸ்யம் போல, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளரை ஏமாற்றுமா? என்று புரியாமல் காவல்துறையினர் கேள்வி கேட்டிருந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து பின்வாசல் வழியாக, காமகோட்டி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில்,. இந்த முறையாவது, நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையினர் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், நியாயமான விசாரணையை நடத்த மூன்று மாதங்களைக் கடந்த நிலையிலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிய விசாரணையைத் தொடங்காத நிலையில், காவல் துறையினருக்கு நினைவூட்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் கேசவபாண்டியன். அவரது தொடர் முயற்சிகளையடுத்து, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் காமகோட்டி மற்றும் மோகன் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும்; நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருதரப்பினரையும் ஆஜர்படுத்தி விசாரிக்கும் வகையில், ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதியன்று இருதரப்பையும் நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் வழங்கியிருக்கிறார்கள். கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கிக்கு எதிரான நீதிமன்ற வழக்கும், நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணையும் ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதியான இன்று ஒரே நாளில் விசாரணைக்கு வந்திருக்கின்றன. மிக முக்கியமாக, இந்த வழக்கில் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோட்டி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதும் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த செய்தி
காவல்துறையினர் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்பதே அவரது வழக்கறிஞர் எதிர்பார்ப்பு” என்கிறார், மனுதாரர் கேசவபாண்டியன் ஆனால் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் சார்ந்த காமகோட்டி மற்றும் மோகன் ஆகியோர் காஞ்சிபுரம் சங்கர மடம் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் என்பது தான் இதில் சிறப்பு ஆனால் சிவபெருமான் தான் எதிராக வந்துள்ளது என்பதை அறிந்து நக்கீரன் குற்றம் குற்றமே என வாதாடியது தான் நமது நினைவுக்கு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா, அதிரடிகளுக்கு பெயர் போனவர் தான். அன்றாடம் அவர் அலுவல் விசயமாக செல்லும் இடங்களை ஊடகங்களும் பின்தொடர்வார்கள்.
ஒழுங்காக பணியாற்றாத அலுவலர்களை அந்த இடத்திலேயே கண்டித்து நடுரோட்டில் வண்டியை நிறுத்தி தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வரை அறிவுரை வழங்கினார் அவரது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அலுவலகம் ஒன்றில் தான் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநருக்கு எதிரான விசாரணையும் நடைபெறுகிறது. அவரும் நேரில் ஆஜராக இருக்கிறார். என்ற நிலையில். ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண்பாரா என்பது பொதுமக்கள் முன் எழும் சந்தேகம். வங்கி நிர்வாகம் சார்ந்தவர்கள் அரசியல் பலம் ஆன்மீக பலம் பணபலம் பொருந்திய நபர்கள் ஆகவே ஆட்சியர் மற்றும் காவல்துறை இதில் நடவடிக்கைகள் எடுக்காமல் சமாளிப்பார்களா என்பதை மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை. இதில் பொது நீதி யாதெனில் மிகவும் தொய்வில் இருந்த கு சி யூ வங்கி பாஜக ஆட்சி அமைந்த நிலையில் மற்ற வங்கிகளை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவதற்கு ஒரு நூல் இடைவெளி தான் காரணம் யாமிருக்க பயம் ஏன் நிலையில். இது தெரியாமல் K7 இப்போது K9 ஆனது தான் மிச்சம். கும்பகோணம் சில சித்தர்களின் ஊர் என்றாலும் பேச்சு வழக்கில் இன்னும் எத்தர்களின் ஊர் தான்.
கருத்துகள்