திருவள்ளூர் மாவட்டம், வீரகநல்லுார், பெரியார் சமத்துவபுரத்தில் வசிக்கும் 25 பேர், பட்டா இல்லாததால்,
கடனுதவி மற்றும் அரசு சார்பில் வீடுகள் பழுது பார்க்க முடியாத நிலையில் , பட்டா வழங்கக்கோரி, திருத்தணி தாலுகா வீரகநல்லுார் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரி, (வயது 47),யை அணுகி உள்ளனர். அவர் அவர்களை அலைய வைத்து கேலி பேசியததாகக் கூறப்படுகிறது.
சமத்துவபுரம் பகுதி வசிக்கும் பலதரப்பட்ட வாசிகள் தரப்பில், வீரகநல்லுார் தி.மு.க., பிரமுகர் மதுசூதனன், (வயது 57), என்பவர், கோட்டீஸ்வரியிடம் பட்டா வழங்கக் கோரிக்கை வைத்தார். அதற்கு, ஒவ்வொரு பயனாளியும், தலா 3,000 ரூபாய் தந்தால் தான், கணினி பட்டா நகல் தருவதாகக் கூறியுள்ளார். அது குறித்து, மதுசூதனன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் புகார் அளித்தார்.
நேற்று மதியம் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் தமிழரசி மற்றும் குழுவினர், வீரகநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அவர்களின் கண்காணிப்பில், மதுசூதனன் கொண்டுவந்து அலுவலகத்தில் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய 75,000 ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரியிடம் கொடுத்தார். அதை கோட்டீஸ்வரி வாங்கவும், அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர், பணம் பெறும் கையுடன் அவரைக் கைது செய்து, பின்னர் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்ந்தனர்.
கருத்துகள்