நாடாளுமன்ற மாநிலங்களவைத்த் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படி மக்கள் நீதி மைய்யத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் சந்திரசேகரன், மதிமுக சார்பில் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த சூழலில் தமிழ்நாட்டிலிருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆளும் திமுக நான்கு இடங்களுக்கும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிட உரிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் திமுக சார்பில் ஓரிடம் கூட்டணிக் கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கும் திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய மூவர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.பி.வில்சன்
மூத்த வழக்கறிஞர் திமுகவுக்கும், தமிழ்நாட்டுக்காகவும் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வெற்றியை தேடித்தந்தவர். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்றவரை, அவர் ‘வின்சன்’ என அழைக்கும் அளவுக்கு நன்மதிப்பை பெற்றவர். புஷ்பநாதன் என்ற வில்சன் என்பது முழுப்பெயர். 1966, ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆசான் மெமோரியல் கல்லூரியில் பள்ளிப்படிப்பும், லயோலா கல்லூரி பட்டப்படிப்பும், பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த வில்சன், 2009-ஆம் ஆண்டு 43 ஆவது வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரானார்.
2008-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் 2012-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2014-ஆம் ஆண்டு வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார். சமச்சீர் கல்வி, விஷ்ணுபிரியா வழக்கு, மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடம் தொடர்பான வழக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், ஓமந்தூரார் எஸ்டேட் வழக்குகள், துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வாதாடி வெற்றியைப் பெற்றவர். அதற்காக 2019 ஆம் ஆண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினரான வில்சன், மீண்டும் இம்முறையும் போட்டியிடுகிறார். அதேபோல்
எஸ்ஆர் சிவலிங்கம்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1991, மற்றும் 2001 சட்டமன்ற தேர்தல்களில் பனமரத்துப்பட்டியில் தோல்வி, 2011 ஆம் ஆண்டில் சேலம் தெற்கில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். நீண்ட காலமாக திமுகவில் இருப்பதால் இவருக்கு இப்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்துள்ளது. அதேபோல் ரொக்கியா பேகம் என்ற ராஜாத்தி சல்மா என்பவர் 1968 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த தமிழ் இஸ்லாமியக் குடும்பப் பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். ராஜாத்தி சல்மா 1968 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியில் சம்சுதீன், சர்புன்னிசா வின் மகளாகப் பிறந்தார். 13 ஆம் வயதில் தனது தோழிகளுடன் திரையரங்கு சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை தொடர்ந்து பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. திராவிடப் பாரம்பரியம் கொண்ட அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் கவிதைகள் ,கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதத் தொடங்கினார்.
சல்மாவின் 17ஆம் வயதில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக அவரது முதல் கவிதைத் தொகுப்பான ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வெளியானது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், பொன்னம்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராஜாத்தி பேகம் என்கிற ரொக்கையா, திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
கருத்துகள்