காவல்துறை சித்ரவதைப் படுகொலை குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்கள் எழுப்பிய நிலையில் சிபிசிஐடி விசாரணை
எந்த வழக்கிலும் காவல் துறை அடித்து விசாரிப்பது என்கிற போக்கும் உடனே நீதி வேண்டும் என்கிற போக்கும் மாற வேண்டும் ; நமது எதிரியாகவே இருந்தாலும் அடித்து விசாரிப்பதை ஆதரிக்கக் கூடாது. போலீஸ் சித்திரவதையில் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ள வைப்பது கொடூரமானது. இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டியம்மாள் உயிரோடு வந்த கதை நாம் அறிந்தது தான்.இதே காவல் நிலையத்தில் கடந்த காலத்தில் வெள்ளைக் கண்ணு மகன் ஜெகன் என்ற நபர் இதேபோல் கொல்லப்பட்ட சம்பவம் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய வரலாறு உண்டு"மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்."- என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கேள்விதிருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொலை : சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை கிடைக...