சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
மனிதனின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து முகவடிவமைப்பை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள நிலையில் மத்திய அரசின் தொல்லியல் துறை கீழடி குறித்து ஆய்வறிக்கையை வெளியிடுமா என தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார் அவரது எக்ஸ்வலைதளப் பக்கத்தில் : "கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!" என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு 10ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்தன. அதன் மூலம் கீழடியில் நகர நாகரிகம் நிலவியதாக தொல்லியல் சான்றுகள் மூலம் கிடைத்தது எனத் தெரிவித்தது
அதேவேளையில் பொது 6 ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழர் சமூகம் விளங்கியது என்பதையும் ஏசுகிறிஸ்து பிறப்புக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த இரு மனிதர்களின் மண்டை ஓடு கிடைத்ததாகவும் அதற்கு பிறகு கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? என வினவும் நிலையில் கீழடி ஆராய்ச்சி
முதன்முதலில் வெளியான கீழடி தமிழர்களின் முகம்! என இரண்டு மண்டை ஓடுகள் மூலம்
மனித முகம் வடிவமைப்பு செய்த நிலையில்
அதை வைத்து புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடியில் வாழ்ந்த மனிதர்களின் முகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டன. கொந்தகை அருகே கண்டறியப்பட்ட மண்டை ஓடு எலும்புகளில் இருந்து டிஎன்ஏ ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இது பழங்கால தமிழர்களின் வழித் தோன்றல்களைக் கண்டறிய உதவும் எனத் தெரிகிறது. கீழடி. வெறும் வரலாறு அல்ல,
முதன்முறையாக, 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழர்களின் முகங்கள், கொந்தகையில் தோண்டியெடுக்கப்பட்டதாக தெரிகிறது. கீழடி மற்றும் கொந்தகை கிராம ஆண்களின் முகங்கள் வெளிப்படுத்தப்பட்டன, இங்கிலாந்து ஆய்வகம் 2500 ஆண்டுகள் பழமையான புதைகுழியான கொந்தகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகளின் 3D மறுகட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.
கீழடியில் ஏழாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்ட முதல் டெரகோட்டா வளைய கிணறு. கீழடி வளைய கிணறுகளும் கட்டமைப்புகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை நிரூபிக்கின்றன. ஆந்த்ரோபயாலஜி மூலம் முகாமில்லா மண்டை ஓடு மூலம் முக வடிவமைப்பைக் காட்டுகிறது.
தமிழர்கள் நீக்ராய்த் மரபினத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் கீழே கொடுக்கப் பட்டுள்ள, முதல் வரை படம் மட்டும்தான் தமிழர்களின் முக அமைப்போடு பொருந்திப் போகிறது.(அதுவும் முழுமையாக அல்ல)
இரண்டாவதாக வட்டமிட்டுக் காட்டியிருக்கும் படம், மங்கோலிய மற்றும் காகேசிய கலப்பினத்தைக் குறிப்பிடுவதைப் போல் முக அமைப்பு உள்ளது.
இந்த வரலாற்றுத் திரிபை, இந்த வரலாற்று மோசடி என பாஜகவியன் பலரும் கூறும் நிலையில் நாம் ஒரு போதும் ஏற்க முடியாது என்பது மட்டு மல்ல, அதை மத்திய தொல்லியல் துறை உண்மை கண்டறியும் நடவடிக்கைகள் நடந்த வேண்டியது அவசியம்.
கருத்துகள்