ஆண்டு முழுவதும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் 30 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வாழும் ஹிந்து மக்கள்.
அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, சபரி மலையில் 5 ஏக்கர் நிலம் கேராளா மாநில அரசிடம் கேட்டுள்ளோம். அவர்கள், பழனியில் இடம் தந்தால் பதிலுக்கு பரிமாற்ற நிலம் தருவதாகக் கூறியுளதாகவும். பழனியில் இடம் தர தயாராக உள்ளதாகவும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெரிவித்துள்ளதாகவும் அதேபோல் குமுளி அருகில் மங்கலதேவி முதல் நூறாண்டுக் கோவில் கண்ணகி கோட்டத்தை புதுப்பித்துக் கட்டவும், கோவிலுக்குச் செல்லும் மலை வழிப் பாதையை
செப்பனிடவும் அனுமதியளிக்க வேண்டுமெென, கேரளா மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விழாக் காலங்களில், தமிழ்நாட்டில் இருந்து செல்வோருக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில், இருவரை நியமித்துள்ளோம். அவர்களுக்கு அறை, உணவு வழங்கப்படுகிறது. தொடர்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பி. கே.சேகர்பாபு தெரிவித்தார் .இதில் ஒரு பொது நீதி உண்டு :
அதாவது
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கேரளா மாநில பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக இன்றளவும் சட்டவிரோதமாக இருக்கும் 44 ஏக்கர் நிலம்
மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள பெரியபிள்ளை வலசை பஞ்சாயத்து அருகே கேரளா மாநில வனத்துறைக்குச் சொந்தமாக இருக்கும் 18 ஏக்கர் நிலம்...மற்றும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா மாநில அரசின் கைவசம் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை
கூடுதலாக மலையாளம் பேசும் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் செய்திருக்கும் முதலீடு, வாங்கி குவித்திருக்கும் நிலம், பல்லாயிரம் ஏக்கர் இருக்கும். அதேபோல அடமானம் பிடித்து ஏலம் விட்டு உறுக்கிய நகைகள் கொண்ட போலியான கேரள வங்கிகள்
ஆனாலும் சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் தமிழ்நாடு பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக, ஐந்து ஏக்கர் நிலம் கேட்டால்,
பழனியில் எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தந்தால் தான் தருகிறோம் என்கிற கேரளா தேவசம்போர்டு அமைச்சர் வி. என். வாசவனின் அறிவிப்பு... எதேச்சதிகாரமானது, என்பதே பலரது கருத்து.
எல்லாவற்றிலும் கேரளாவிற்கு விட்டுக் கொடுப்போம் என்கிற மனநிலையில் இருந்து நமது அரசு முதலில் வெளியே வர வேண்டும்.
50 ஆண்டுகளாக நான் சபரிமலைக்கு வருகிறேன் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் வி என் வாசனனுடன் பேட்டி கொடுத்த நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விட்டுக்கொடுத்தது சரியா என்பதே எழு வினா?
முதலில் தமிழ்நாட்டில் கேரளா மாநில அரசிற்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை கணக்கெடுப்பு செய்வதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சார்பில் உத்தரவிட வேண்டும்.
தொடர்ந்து டிஜிட்டல் ரீ சர்வே, கனிமவள கடத்தல்கள், பல்லாயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் வாங்கிக் குவிக்கப்படும் நிலங்கள், என கடந்த 10 ஆண்டுகளில் நாம் இழந்தது அதிகம், பெற்றது பூஜியம்











கருத்துகள்