கென்யா கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் ஒட்டியனோவின் இந்தியப் பயணம்
கென்யா கடற்படை தளபதி மேஜர் ஜெனரல் பால் ஓவர் ஒட்டியனோ இந்தியாவில் 2025 செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவருடைய பயணம் அமைந்துள்ளது.
புதுதில்லியில் 2025 செப்டம்பர் 29 அன்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி அவரை வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. செயல்படுத்துதல், பயிற்சி, இருநாடுகளுக்கிடையேயான கடற்படை பயிற்சி உட்பட கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
தேசிய போர் நினைவிடத்தில் மறைந்த வீர்ர்களுக்கு மேஜர் ஜெனரல் ஒட்டியனோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். குருகிராமில் உள்ள இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் இணைவு மையத்திற்கு மேஜர் ஜெனரல் ஒட்டியனோ செல்ல உள்ளார். பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்மண்டல கடற்படை கட்டளையகத்தின் பயிற்சி அமைப்பையும் அவர் பார்வையிட உள்ளார்.
VV5Z.jpeg)
VZ14.jpeg)
FDC5.jpeg)
FBS4.jpeg)
2CBX.jpeg)
GUQU.jpeg)
YPO9.jpeg)
கருத்துகள்