கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வு நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,
ஹேமாமாலினி MP தலைமையில் கரூர் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நலன் குறித்துக்கேட்டு அறிந்தனர்.
அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை , மாநிலப் பொதுச் செயலாளர் A P முருகானந்தம், கரூர் மாவட்டத் தலைவர் V V செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வு குழுவில் அனுராக் தாக்கூர் எம்.பி, தேஜஸ்வி சூர்யா எம்.பி, பிராஜ்லால் எம்பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி, அப்ரஜ்த சரங்கி எம்.பி, ரேகா ஷர்மா எம்.பி,, புட்டா மகேஷ்குமார் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். இன்று கோயமுத்தூர் வந்தடைந்தது.
விமான நிலையத்தில் பாஜகவின் நிர்வாகிகள் வரவேற்று, கரூரில் ஆய்வு செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் , கோயமுத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துரை உள்ளிட்ட பலரும் சென்றனர். டில்லியிலிருந்து, என்.டி.ஏ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கரூருக்கு வந்தது முதலில் மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்த்து விட்டு, சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கும் போய் பொதுமக்களிடம் பேசியது,
அது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூகவலை தளங்களில் காணக் கிடைக்கிறது. ஊடகங்களிடம் பேசும்போது, "41 பேர் இறப்பு குறித்து தமிழ்நாட்டு அரசு உயர் அலுவலர்களிடமும் விசாரணை நடத்துவோம்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தால், காவல்துறை, மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகத் துறை என; பல துறைகள், இந்தக் குழுவால் விசாரிக்கப்படும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இப்படிச் சொல்லியிருப்பது, மத்திய அரசால், அரசு நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட, குழு அல்ல. அவை, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்களின் குழு மட்டுமே.
பேரிடர் காலங்களில் மத்தியஅரசின் சார்பில், உயர் அலுவலர்களோடு இணைந்து நாடளுமன்ற உறப்பினர்கள் குழு, அந்தந்த 'பேரிடர்' மாநிலங்களில் ஆய்வு நடத்தி; விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பது தான் வழக்கம். சில மாநிலங்களில் உயர் அலுவலர்கள் மட்டுமே ஆய்வு நடத்தி அதன் மீதான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
இந்தக்குழு வந்திருப்பது, அப்படிப்பட்ட பேரிடர் குறித்த விசாரணையை நடத்தி; அறிக்கை கொடுப்பதற்காக அல்ல.
தமிழ்நாட்டு அலுவவர்களில், இந்தியக் குடிமைப்பணி உயர் அலுவலர்களும் உள்ளனர்; நீதித்துறையினரும் உள்ளனர்; தமிழ் நாட்டு காவல்பணி உயர் அலுவலர்களும் உள்ளனர்; யாரை விசாரிக்கப்போகிறது என்டிஏ குழு? அதுவும் மத்திய அரசால் தெரிவு செய்யப்படாத தே ஐ கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு?
தமிழ்நாடு ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும், கரூர் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு தருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில்; எங்கிருந்து வந்தது என்.டி.ஏ. குழு? என ஆளும் ஆதரவு கட்சி வினா எழுப்பிய நிலையில்
தமிழ்நாடு அரசை மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அச்சுறுத்தும் போக்காகவே இதை அவர்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது என கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து கூறும் நிலையில் தமிழ்நாட்டை ஆளும் திமுகவின் சட்ட வல்லுநர் குழு இப்போது சுதாரித்துள்ளது.
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில், இதுபோன்ற அசாதாரண சம்பவக் காலங்களில், என்டிஏ குழு போய், இப்படி ஆய்வு ஏதாவது நடத்தி முன் உதாரணம் இருக்கிறதா? உயர் அலுவலர்களை விசாரித்திருக்கிறதா என்பதே இப்போது மாநில ஆளும் கட்சிக் கூட்டணி எழுப்பும் வினா? அதற்கு மாநில அரசு தரப்பில் விளக்கம் இரவோடு இரவாக ஏன்? காரணம் தெரியவில்லை இருக்கிற இடமே தெரியாமல் பணியாற்றுபவர். ஒரு உயர் அலுவலரான இவரைப் பேச வைத்திருக்கிறார்கள். அவர் கூறிய போது
114 மருத்துவர்கள், செவிலியர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது எனவும்
மக்கள் கொந்தளித்து பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதற்காகவே விரைவாக உடற்கூராய்வு நடந்ததாகவும்
கரூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல்கள் ஒப்படைப்பு - எனவும் சுகாதாரத்துறை உயர் அலுவலர் பதில் கேள்வி: சம்பவம் நடந்த இரவே பிரேதப் பரிசோதனை செய்யப்படக் காரணம் என்ன?
சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறந்தவர்களின் உடல்களை உடனடியாக தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தாமதப்படுத்தாமல் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து அன்று இரவே பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டோம். பதற்றத்தைத் தடுக்கவே இவ்வாறு செய்தோம்.
(கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் தரப்பட்ட விளக்கம்) வந்த நிலையில். கரூரில் ஆய்வு நடத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஹேமாமாலினி MP தலைமையில் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தைக் குறித்து கேட்டறிந்தனர்
அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர்,A P முருகானந்தம், கரூர் மாவட்ட தலைவர். V V செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வுக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே அவர்களும், அப்ரஜ்த சாரங்கி, ரேகா ஷர்மா, புட்டா மகேஷ்குமார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் சென்று ஆய்வு நடத்தினர். அதில் சிலர் கூறிய போது
நடிகரும் தவெக தலைவருமான விஜய் செந்தில் பாலாஜி பற்றி பேசும்போதெல்லாம் கற்கள் செருப்புகள் கொண்டு வீசினார்கள் அது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அதிலும் விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபா பாடல் பாடிய போது கெட்ட வார்த்தைகளில் விஜயை திட்டினார்கள்.
அவர்கள் யார் என்று கண்டுபிடித்தால் உண்மை விளங்கிவிடும் என சிலர் கூறினார். இந்த நிலையில் “நாங்கள் எழுப்பும் கேள்விகளையே தவெக தலைவர் விஜயும் கேட்டுள்ளார்"
காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லை; நாங்கள் எழுப்பும் கேள்விகளையே தவெக தலைவர் விஜயும் காணொளி வழியாக கேட்டுள்ளார்; இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை பரிந்துரைப்போம்
கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க தே.ஜ. கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர் எம்.பி. பேட்டியில் தகவல்."சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை”
கரூர் கூட்டநெரிசல் வழக்கு குறித்த விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடக்க வேண்டும். காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து மாநில ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மாவட்ட நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த வார இறுதிக்குள் விசாரணை அறிக்கையை பாஜக தலைமையிடம் அளிப்போம் என அனுராக் தாக்கூர், பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்.
"கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை"
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை, அதில் சந்தேகம் உள்ளதாக குழு தலைவர் ஹேமமாலினி கருத்து
பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் அனுமதி கொடுத்தது நியாயமில்லை.
கரூரில் என்.டி.ஏ. எம்பிக்கள் குழு ஆய்வு செய்த நிலையில் பேட்டி இது குறித்து பேசியவய்கள் பேச்சுடன் விடாமல் சரியான தரவுகளும் தந்து அறிக்கையைத் தாருங்கள் என்பதே பலரது கருத்து.கரூர் சம்பவம் தொடர்பாக யூடியூபில் வதந்தி பரப்பியதாய் யூடியூப் நடத்தும் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது. செய்யப்பட்டுள்ளார்
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக 25 பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது என காவல்துறையின் வேகமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு பக்கம் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு நபர் விசாரணை கமிஷன்.
இன்னொரு பக்கம் பலவிதமான FIRகள்..
இதற்கு மத்தியில் நீதிமன்றங்களில் தாக்கலாகும் மனுக்கள். தசரா விடுமுறை என்பதால் விசாரணை தாமதம் ஆகிறது.
"பல மரம் கண்ட தச்சன் ,ஒரு மரமும் வெட்டான்.."என்பது போல சில வேளலையத்த ஊடகங்கள்பரபரப்புகளை துரத்திக் கொண்டு நாள்தோரும் அலைய, நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்
கொள்கிறார்கள் மக்கள் வெறுபபில் உள்ளனர் விரைந்து நடவடிக்கை வராத வரை உண்மை வெளிவருவது சந்தேகம் தான் இந்த நிலையில் இன்று தவெக தலைவர் பேசிய https://x.com/TVKVijayHQ/status/1972965812618297612 காணொளி வந்துள்ளது.


































கருத்துகள்