திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பாஸ்கர் மனைவி விஜயா.
இவர் தனது மாமனார் அய்யங்கண்ணுவின் நிலத்தை, கணவர் பாஸ்கர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதற்காக காலம் கடத்தி வந்த கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் ரூபாய்.30 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டார். பின்னர் ரூபாய்.25 ஆயிரமாக குறைத்தும் டிமாண்ட் செய்து கேட்டுள்ளார். இதனைத் தர விரும்பாத விஜயா, திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன்படி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப் படி நேற்று முன்தினம் கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மறைமுகமாக கண்காணித்த நிலையில் அப்போது விஜயா அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த ரூபாய்.25 ஆயிரத்தை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனை (வயது 44) பணம் பெற்ற, கையுடன் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக கூடங்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். அவரது வீட்டிலும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச் ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.





கருத்துகள்