உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பிற மாநில ஐபிஎஸ் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கரூருக்கு வந்த நிலையில்
இந்த குழுவில் ADSP முகேஷ்குமார் மற்றும் DSP ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய ஆவணங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை யும் நேரில் சந்திக்க உள்ளனர்.
விசாரணை நாளை தொடங்கப்படலாம் எனத் தகவல். இச் சம்பவத்திற்கான விசாரணை முதலில் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் தொடங்கப்பட்டது. அவர் தலைமையிலான ஆரம்ப நிலை விசாரணையில் 680 பக்கங்கள் கொண்ட முக்கியமான ஆவணங்கள் தொகுக்கப்பட்டது பின் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, வழக்கை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் வழங்கிய கோப்புகளைப் பெற்று, விரிவான விசாரணையை மேற்கொண்டதில் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பிரேதப் பரிசோதனை அடங்கிய மருத்துவ அறிக்கைகள் மற்றும் கூட்டம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அலுவலர்கள் எனப் பலரிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டன. விசாரணையின் போது மொத்தம் 1,316 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சிபிஐ விசாரணை ஐபிஎஸ் உயர் அலுவலர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினருடன் ஏடிஎஸ்பி முகேஷ் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு கரூர் சென்றது. இந்தக் குழுவினர் தான்தோன்றி மலை அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி முகாமிட்டுள்ளனர். அங்கு சிறப்பு புலனாய்வு குழுவின் வசத்தில் இருந்த 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை கோப்புகள் சிபிஐ சிறப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், சில மீதமுள்ள ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு தீயிட்டும் எரித்துள்ளதாகவும். அந்த ஆவணங்களில் ஒரு பென் டிரைவ் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, ஐபிஎஸ் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழு ,சம்பவம் நடைபெற்ற இடங்களையும், சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் மீண்டும் நேரில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான உண்மைக் காரணங்கள், கூட்டம் நடைபெறுவதற்கான சரியான அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்கின்றனர்.


கருத்துகள்