கிராமசபைக் கூட்டம் விதிமுறைகளை மீறிய துறையூர், முசிறி வட்டாச்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பகளவாடி கிராமம் சமூக ஆர்வலர் குருநாதன் (வயது 45).
தமிழ்நாட்டில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நடத்தப்படுவதில்லை எனவும், அரசின் கிராமசபைக் கூட்டங்களை முறையாக நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ததை விசாரணை செய்த நீதிபதிகள் சசிதரன், ஆதி கேசவலு ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் கூட்டம் நடைபெறும் இடம், நேரம், நாள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு முறையாகத் தெரியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் அளிக்கும்
தீர்மானங்களை முறையாக தீர்மானப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், கிராமசபைக் கூட்டம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய்துறை வட்டாட்சியர்கள் முறையாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு,கிராம சபைக் கூட்டங்களை முறையாக கண்காணித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு,
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அரசு முதன்மைச் செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனைக் கண்காணிக்க வேண்டுமென உத்தர விட்டனர். ஆனால் அரசு அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்தாததால், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா மேரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி வந்த விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப் பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதனைப் பரிசீலனை செய்த நீதிமன்றம் துறையூர் மற்றும் முசிறி ஆகிய இரு வருவாய் வட்டங்களைச் சேர்ந்த வட்டாட்சியர்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பான அரசின் விதிமுறைகளை முறையாக செயல்படுத்தவில்லை எனக் கூறி, துறையூர் மற்றும் முசிறி ஆகிய இரு வருவாய் வட்டாட்சி யர்களை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.








கருத்துகள்