சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஸ்பான்சர்ஸ் இணைந்து நடந்திய ஓடடம் ஓடத் தயாராகுங்கள்! டைம்ஸ் மராத்தான் 2026
- உங்கள் உடற்தகுதி ஓட்டம் என மாரத்தான் போட்டிகள் சிறப்பாக நடந்தது அதில்
CPCL மற்றும் சுகாதாரப் பங்குதாரர் டாக்டர். காமாக்ஷி மெமோரியல் மருத்துவமனைகள். சார்பில் இணைந்து நடத்தியதில்
21K, 10K, 5K, 1K உள்ளடக்கிய ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை, 22 பிப்ரவரி 2026, காலை 5 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகில் சிவானந்தாசாலையிலிருந்து ஓமந்தூரார் மைதானம் வரை
ஒரு நகரம். ஒரு ரன். ஒரு நோக்கம்! எனற நோக்கில் டைம்ஸ் மாரத்தான் 2026 சென்னையின் காலைப் பொழுதை உடற்பயிற்சி மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த கொண்டாட்டமாகவே மாற்றியது. 21K ஓடடச் சவாலில் இருந்து ஊக்கமளிக்கும் 1K உள்ளடக்கிய ஓட்டம் வரை, ஒவ்வொரு அடியும் உறுதியையும் சமூக வலிமையையும் எதிரொலித்தது.
ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் வலுவான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் CPCL இணைந்து நடத்தி பெருமை சேர்த்தது
நல்ல உடல் நலன் சுவாசிக்கவும், டைம்ஸின் ஆற்றலை உணரவும் இது வாய்ப்பு வழங்கி
மாரத்தான் 2026 பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை சென்னை, சிவானந்தாசாலையில் - காலை 5:00 முதல் காலை 9:00 மணி வரை நடைபெற்றது
அதில் 21K, 10K, 5K அல்லது 1K உள்ளடங்கிய தூரத்தைத் தேர்வுசெய்து, உடற்பயிற்சி மற்றும் ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட காலை நேரத்தில் நகரத்தில் சிறப்பாக அணைவரது ஒத்துழைப்பாக நடத்தியது
நூற்றுக் கணக்கான நபர்கள் கலந்து கொணட நிகழ்வை மாநில சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார் காவல்துறை பாதுகாப்பு சிறப்பாக செய்திருந்தனர். போட்டியில் ஓடி முழுமையாக நிளைவு செய்தவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படடது, காலை உணவும் விழாவும் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அமைந்துள்ள பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர், மேடையில் மேடடுக்குடி மக்களின் நாட்டியம் ஆடி விழாவில் கலந்து கொண்டு மகிழ்வை வெளிப்படுத்தினர் இந்த மாரத்தான் போட்டி குறித்து கடந்த கால ஒரு வரலாற்றுப் பார்வையில்:- மாரத்தான் ஏசுகிருஷ்து
பிறப்புக்கு முன். 490- ஆம் ஆண்டில் மராத்தான் போர்க்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு வெற்றிச் செய்தியை அறிவிக்க ஓடிய கிரேக்க வீரர் ஃபைடிப்பிடிஸின் கதை அடிப்படையாக மாரத்தான் ஓட்டம் உருவானது. 1896-ஆம் ஆண்டில் முதல் நவீன ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. 1908 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில், 26 மைல் 385 கெஜம் அதாவது 42.195 கிலோ மீட்டர் தூரம் என்பது அதிகாரப்பூர்வமான தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.
மெசபடோமிய பாரசீகர்களுக்கு எதிரான போரில் வென்ற வேற்றிச் செய்தியைக் கூற, மாரத்தானில் இருந்து கிரேக்கத்தின் ஏதென்ஸுக்கு பைடிப்பிடிஸ் ஓடி வந்து, "நாங்கள் வென்றோம்" எனக் கூறி அங்கு உயிரிழந்ததாகவே நம்பப்படுகிறது.
1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்கில், ஃபைடிப்பிடிஸின் நினைவாக அறிமுகமான மாரத்தான் ஓட்டத்தில் வென்றவர் கிரேக்கத்தைச் சேர்ந்த ஸ்பைரிடான் லூயிஸ்
1908-ஆம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கின் போது, Windsor Castle-லிருந்து White City ஸ்டேடியம் உள்ள அரண்மனை வரை 26 மைல் 385 கெஜம் அதாவது 42.195 கிலோமீட்டர் தூரம் வரை நிலையான தூரமென முடிவானது .
1921-ஆம் ஆண்டில் இந்த 42.195 கிலோமீட்டர் தூரம் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது பாஸ்டன், லண்டன் போன்ற நகரங்களில் ஆண்டுதோறும் ஓட்டப் போட்டிகள் பிரம்மாண்டமாகவே நடைபெறுகின்றன. ஆனால் இந்தியர்கள் நடத்துவது உடற்பயிற்சிக்கு மட்டுமே, நம்மை அடிமைப் படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் ஆஙகிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பிடியிலிருந்து இன்னும் விடபடாத பலர் இந்தப் போட்டிகளின் வரலாறு அறியாமலேயே உடற்பயிற்சி என நடத்தும் நிலையில் இது தற்போது தமிழ்நாட்டில் அதிகமாகவே நடத்தப்படுகிறது,















கருத்துகள்