நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மாரச் மாதம் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் கரார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றாமல் செய்த அரசு உயர் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
ஆனால், டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளில், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் தீபமேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், நீதியரசர் மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதிலைச் சொல்லியே ஆக வேண்டும்' என இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கூறினார். இந்த நிலையில்,
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு திங்கட்கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தனர். மேலும் அதில் நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மதுரை காவல்துறை ஆணையர் தரப்பிலும் இதே விவரங்கள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்யப்பட்டதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், "மதக் கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாகத் தகவல் வந்ததால், விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக அப்போதைய சூழலைக் கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சூழல் கடினமாக இருந்தது. சுமார் 1,500 பேர் மலையேற முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது, 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும்' என இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாக கூறினார்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டக் கூடாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்." உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு." என தமிழ்நாடு அரசு வாதம்
"அடுத்த விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும்" என்ற நீதியரசர்
எதிராக, அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடர்ந்தார். மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்கக் கேட்டு தமிழ்நாடு அரசு, மற்றும் டி.ஜி.பி.,சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு டி.ஜி.பி., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எக்ஸ் வலைதள பதிவுகள், முகநூல், யுடியூப், வாட்ஸ் அப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் போன்ற சமூக ஊடகங்களில் அவதூறான, இழிவான மற்றும் புண்படுத்தும் பதிவுகளை சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பரப்பி உள்ளனர் என்று மனுதாரர் வேண்டும் என்றே குற்றம்சாட்டி உள்ளார்.
மனுதாரரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சேபனை கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் சமூக ஊடகப்பதிவுகள், அதன் கணக்குகளின் விவரங்களை மனுதாரர் வழங்கவில்லை. இருப்பினும், சைபர் குற்றப் பிரிவானது, சமூக ஊடகங்களில் அந்த ஆட்சேபக் கருத்துகள், பதிவுகள், அதன் உள்ளடக்கங்களைத் தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எக்ஸ் வலைதளம், முகநூல், யுடியூப், மற்றும் பிற தளங்களில் 9 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட உள்ளடகத்தை அகற்ற, ஆள்மாறாட்டம் கணக்குகளை முடக்குமாறும், அசல் இணைய முகவரியையும், அதை பயன்படுத்தும் பயனர்களின்விவரங்களை அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.
ஆட்சேபனைக்குரிய முகநூல் பக்கத்தில் யுஆர்எல் எனப்படும் (URL) இணையத்தில் உள்ள இணைப்பு முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முகநூலில் 14 யுஆர்எல்களும், எக்ஸில் 16 யுஆர்எல்களும், அடையாளம் காணப்பட்டு அதன் உள்ளடக்கத்தை தடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டன. இவற்றில் முகநூலில் உள்ள 4 யுஆர்எல்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ளவை இன்னமும் முடக்கப்படவில்லை.
தடை செய்யப்பட்ட, மேலும் இழிவான உள்ளடக்கங்கள் பரவுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீறல்கள் கண்டறியப்படும் போதெல்லாம் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது அமைதியை பேண, சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்ய, நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க, காவல்துறையால் உடனடி மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதித்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கும்படி கெஞ்சுகிற நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத வகையில் 144 தடை உத்தரவை விதித்த மாவட்ட ஆடசியரைத் தவிர மற்ற உயர் அலுவலர்களின் மன்னிப்பு ஏற்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மட்டும் விசாரணையை மீண்டும் தொடரவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எப்படி முடிவெடுத்தார்? அப்படிச் செயல்பட அவருக்கு எங்கிருந்தாவது உத்தரவு வந்ததா? என்று அடுத்தகட்ட விசாரணையில் அவர் விசாரிக்கப்படலாம்.
ஆட்சி, அதிகாரம் எத்தனை இருந்தாலும் வளைந்து கொடுக்காமல், நீதி மட்டுமே வெல்லும் என்கிற உறுதி கொண்ட நீதிபதியின் முன் அவை பயனற்றவை என்று உணர்த்தி வரும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவராவார்.
இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோவில் செயலாளர் ஆகியோரை மன்னிக்கலாம். 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம்? என்பது திருப்பரங்குன்றம் வழக்கில் தர்கா நிர்வாகம், மற்ற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீடு சென்றது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கோவில் செயல் அலுவலர் மேல்முறையீடு சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.மேலும், "மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் ஆஜராகத் தேவையில்லை. மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆஜராக வேண்டும். மார்ச் மாதம் 2 ஆம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது" என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் நாளை இது சம்பந்தப்பட்ட சில வழக்கு விசாரணை நடக்கிறது.








கருத்துகள்