முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவது கட்டாயம் என உத்தரவு

மத்திய அரசு நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது



மத்திய அரசின் உத்தரவுக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளன.


வங்காள மொழிக் கவிஞர் பங்ஹிம் சந்திர சட்டர்ஜி 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி எழுதிய  ’வந்தே மாதரம்’பாடல், நாடு சுதந்திரமடைந்த பின், 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.





’வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல் உத்தரவுகளைக் கொண்டுவந்துள்ளதன்படி, அரசு விழாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவது அல்லது இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 'காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப்பூர்வமான முழுப் பாடல் பயன்பாட்டிலிருந்து வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட நான்கு சரணங்கள் உட்பட பாடலின் முழு ஆறு சரணப் பதிப்பும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இசைக்கப்பட வேண்டும். இந்தப் பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் இரண்டும் ஒரே நிகழ்வில் பாடப்பட்டால், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ச்ட்டத்தின் கீழ், தேசிய பாடலகளை சீர்குலைப்பவர்களுக்கோ அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் எனும் தேசியப் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  பாடலின் சில வரிகள் தாயகத்தை தெய்வமாகச் சித்தரிப்பது, அவர்கள் சாரந்த இஸ்லாமிய நம்பிக்கையான 'ஓரிறை கொள்கைக்கு' முரணானது என அந்த அமைப்புகள் கூறியுள்ளன. இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன. தேசப்பற்றுக்கும் இஸ்லாமிய தெய்வ நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் வேறுபாடு உண்டு தேசிய தேசம் சார்ந்த யாரும் இதை ஏற்க வேண்டும் முன்னதாக, வந்தே மாதரம் பாடலில் மொத்தமுள்ள 6 சரணங்களில், இரண்டு சரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 4 சரணங்கள், இந்துக் கடவுள்களைப் போற்றும் வகையில் இருந்ததால், முஸ்லிம் தலைவர்கள் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டும் எனக் கருதி அவற்றை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் வாழத் தகுதியோ, உரிமையோ இல்லை என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை குறை கூறியவர், சில அரசியல் கட்சிகள் இந்தியாவில் உண்டானதாகவும், ஆனால் வந்தே மாதரத்தை பாட மறுப்பதாகவும் விமர்சித்தார். மேலும் உத்தரப் பிரதேசம் கலவர பொருளாதாரத்திலிருந்து கோயில் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டதாகவும், யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.       




 (வந்தே மாதரம்! சுஜலம், ஸுபலம், மலையஜ ஶீதலம்,  ஷஸ்யாஷ்யாமலம், மாதரம்!

வந்தே மாதரம்!

ஶுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதாயாமிநீம்,

புல்லகுஸுமிதா த்ருமடல ஶோபிநீம்,

ஸுஹாசினீம் ஸுமதுர பாஷிணீம்,

சுகதாம் வரதாம், மாதரம்!

வந்தே மாதரம், வந்தே மாதரம்!) ........ இதுவரை  சமஸ்கிரதம்  இனி தமிழில் படல் வரிகள் :-

"வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுஜலாமு சுவலாம் மலயஜ சேத்தலாம்

சஸ்ய சியாமலாம் மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுப்ர ஜோத்ஸ்னா குலகி தயாமினிம்

துல்ல குசுமித த்ருமதள சோவினிம்

சுஹாசினிம் சுமதுர பாஷினிம்

சுகதாம் வரதாம் மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

நளிர் மணி நீரும் நயம் படு கனிகளும்

குளிர் பூஞ் சென்றலும் கொழும் கொளிர்ப்பா சுமையும்

வாய்ந்து நன்கில குவை வாழிய அன்னை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

திரு நிறைந்தனை தன் நிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை

நீர்வளம் சார்ந்தனை மர்பு செய்கனில் நற்பயன் மல்குவை

பழனின் வந்ததோ மைநிறம் வாய்ந்தனை பெருகும் இன்பம் உடையை

குறு நகை பெற்றொளிந்தனை மல்பணி பூண்டனை

இருநிலத்து வந்தென் உயிர் காங்குவை

எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம்"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...