முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹரியும் சிவனும் ஒன்றே என்பது போல தமிழும் இணைந்து சமஸ்கிருதமும் ஒன்றே

பேரரசர் இராஜ இராஜ சோழர் என்பதற்கும் இராசராசசோழன் என்பதற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டுன்னு சில புதுமை மண்டுகள் அறியவில்லை,


சமஸ்கிருதப் பெயர் தான் அவர் விரும்பி கல்வெட்டுகளில் சூட்டிக் கொண்ட பெயர். கல்வெட்டுகள் பலவும் இன்னும் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கின்றன. அவர் காலம் மட்டுமல்ல அவரது மகன் இராஜேந்திர சோழன் காலமும் தமிழ் கலந்த சமஸ்கிருத மொழிக்கு சிறந்த காலமாகவே இருந்தது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது, ஜாதி என்பது 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் தான் அதன்பின் தான் பலர் அதை உச்சரிப்பு பிழையாக சாதி என்றனர்,  அது அவர்கள் அறிந்த அறிவு,  நாம் கடைசிவரை தமிழ் எழுத்தாகவே  ஜா, ஸ்ரீ, ஸ்,ஷ், ஹா,எனத்தான் படிப்போம் லக்ஷ்மி என்று தான் எழுதுவோம் இதுவே காலகாலமாக நாம் நமது வழிவழி மூதாதையர் கற்றது அதுவே உண்மையான,  மக்களுக்கு நீதியும் நிதியும் வழங்கிய ஊழல் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத மன்னர்கள் காலம் தொட்டு வரும் ஆட்சி முறை தொன்மையான தமிழ் மொழி, திருக்குறள் கூறுவதும் சமஸ்கிரதம் கலந்த தமிழ் தானே, பிரம்மி மற்றும் 
கிரந்த எழுத்தில்,



வட்டெழுத்தில் சமஸ்கிருத மொழியில் உள்ள ஸ்லோகத்தில் மன்னனைப் பாராட்டி மெய்கீர்த்திக் கல்வெட்டு மற்றும் செப்புப்பட்டயங்களில் எழுதினார்கள் 

“ராஜந்ய மகுடச் ரோணி ரத்நேஷீசாசநம்

ஏத்த் ராஜேந்த்” ரசோளஸ்ய பரகேஸரி வர்ம்மண” 

இதன் பொருள் இது மாற்று அரசர்களின் மணிமுடிகள் பாதத்தை அணி செய்கின்ற அளவு சிறப்புடைய பரகேசரிவர்மனாக இராஜேந்திர சோழனுடைய சாசனம் என்பதை குறிக்கிறது

இதெல்லாம் தெரியாமல் சில மாங்காய் மடையர்கள் கூற்று தவறு,  அது விஷமத்தனமான செயல், மன்னர் மன்னன் என சிலர் உளரிக் கொண்டிருக்கிறார்கள் அது அவர்கள் அறியாமை,இலங்கை சிங்களவர் எனும் பௌத்தத்திற்குத் தமிழர்களை 

மாற்றிட தமிழ் மன்னர்களை எல்லாம் 

தாக்குகிறார் தந்தை பெயரை மாற்றம் செய்து அரசிதழ் பதித்த திருமாவளவன் எனபதை விட அதைத்தான் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனின்    கருத்து.   வி சி கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தீக்குளித்து தற்கொலை செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு 29.ஜனவரி 2026 ஆம் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் பேசும் போது, "தமிழ்நாட்டில் பிராமண ஆதிக்கமும் சமஷ்கிருத ஆதிக்கமும் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தான் ஏற்பட்டன. எந்தத் தமிழ் மன்னர் மீதும் எனக்கு மரியாதை கிடையாது. இராஜராஜன் என்பது தமிழ்ப் பெயரா? இல்லை! இராஜராஜன் தான் அதிகமாகத் தமிழை வெளியேற்றி கோயில்களில் சமஸ்கிருதத்தைத் திணித்தவன்; பிராமண ஆதிக்கத்தை வளர்த்தவன். சமஸ்கிருத்த்தில் இராஜராஜன் என்று பெயர் வைத்துக் கொண்டான்” என்றார்.

முதலில், தமிழ்நாட்டில் நிலவும் பிராமண ஆதிக்கத்தையும் சமஸ்கிருத ஆக்கிரமிப்பையும் எதிர்த்துத் திருமாவளவன் நடத்திய போராட்டங்கள் இதுவரை யாவை? விரல்விட வேண்டும். விரல்விட வழி இல்லை என்றால், தமிழின மன்னர்களை இழிவுபடுத்தக் கூடாது. 

ஆரியத்துவா  /எதிர்/ திராவிடத்துவா அரசியல் தலைமைகளுக்கு விசுவாசம் காட்ட விரும்பினால், நேரடியாகத் திருமாவளவன் அதைக் காட்டிக் கொள்ளட்டும். தமிழ் மொழியை  தமிழ் இனத்தை இழிவுபடுத்தினால் தமிழர்கள் கட்சி வேறுபாடின்றி  ஜாதி வேறுபாடின்றி எதிர்ப்போம்!

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றிய களப்பிரர் என்ற அயல் இனத்தார்தாம் முதல் முதலாக வரிஇல்லாத இலவச நிலங்களைப் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தவர்கள்! அதற்கான சான்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் உள்ளது. 




களப்பிரர்களுக்குப் பிறகு ஆந்திர மண்டலத்திலிருந்து வந்த பல்லவர்கள் ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் பிராகிருதமும், தெலுங்கும் கோலோச்சின. தமிழ் புறக்கணிக்கப்பட்டது. புத்தமதமும்,  பாலி மொழியும் தமிழ்நாட்டில் பரவின. வடநாட்டு மொழி வழிபாட்டைக் கொண்ட சமணம் (ஜைனம்) கோலோச்சியது. பல்லவ மன்ன

மகேந்திரவர்மன்  (கி.பி.590-630) தற்போதுள்ள தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்டபோது  சமணத்திலிருந்து சிவநெறிக்கு மாறினார். சமஸ்கிருத ஆன்மிகத்தை அதிகம் தமிழ் மோழி கலந்து திணித்தவர் அவர். 

பல்லவர் ஆட்சியில் ஏராளமான சமஸ்கிருதப் பாடசாலைகள் திறக்கப்பட்டன. தமிழ் பேசும் சோழப்பேரரசன் இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 985 – 1014) புதிதாக சமஸ்கிருதப் பள்ளிகள் பெருகாமல் கட்டுப்படுத்தினார். தமிழ்க் கல்விக்கு முதன்மை கொடுத்தார். தில்லையாகிய சிதம்பரத்தில் பிராமண தீட்சிதர்கள் மறைத்து வைத்திருந்த ஓலைச்சுவடி தேவாரப் பாடல்களை மீட்டார். தேவாரம் பாடி  அர்ச்சித்து இறைவனை வணங்கும் வழக்கத்தை விரிவுபடுத்திட பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.

கடந்த பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவந்த சமஸ்கிருதத்தை, 29 ஆண்டுகால ஆட்சிக்குள் இராஜராஜனால் முற்றிலும் நீக்க முடியாது. 

தமிழ் வழிபாட்டுரிமைக்கு  அனைத்து ஜாதியினரையும் அரச்சகர் ஆக்குவதற்கு எமது தமிழ்த்தேசியப் பேரியக்கமும், என்னை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தெய்வத் தமிழ்ப் பேரவையும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவ்வாறு தமிழைக் கருவறை வழிபாட்டு மொழியாக (அர்ச்சனை மொழியாக) ஆக்கிட, அனைத்து ஜாதியினரையும் அரச்சகராக்கிட திருமாவளவனின் வி சி கட்சி நடத்திய போராட்டங்கள் இதுவரை எத்தனை?

ஆளுங்கட்சியான தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியாய் உள்ள திருமாவளவன் கட்சி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தி அனைத்துச் ஜாதியினரையும் அரச்சகராக்கிட  ஏற்கனவே ஏழு ஜாதி பூஜகர்கள் பூர்வீகமாக இருக்க தமிழ்மொழியை அரச்சனை மொழியாக்கிட  ஏற்பாடு செய்ததுண்டா? இல்லை!  

தமிழ் மன்னர்களைத் தாக்குவதற்காக, சூழ்ச்சியாக தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்கள்,  சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துக் கொண்டார்கள் - என்று தந்திரமாகப் பேசுகிறார் திருமா. தமிழர்களே விழிப்போடிருங்கள்!

தமிழ் சோழப் பேரரசன் இராஜராஜன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் !  வர்மன் என்பது கேரள நம்பூதிரிகள் கொடுத்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டங்களின் எண்ணிக்கை 42 ஆகும் அவற்றுள் சில: உத்தம சோழன், உய்யக் கொண்டான், உலகளந்தான், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குல காலன், நிகரிலி சோழன், பெரிய பெருமாள், ஜனநாதன் (மக்கள் தலைவன்), பண்டித சோழன், ஜெயங்கொண்ட சோழன், இராஜகேசரி வர்மன் என்று பல! இவற்றுள் “இராஜராஜன்” என்ற பட்டம் நிலைத்தது. 

காவிரியில் பெட்டவாய்த்தலையில் (வெட்டுவாய்த்தலையில்)  குளித்தலை அருகே கிளை ஆறு வெட்டி பாசனத்திற்கு கொண்டு வந்தார் சோழப் பேரரசர். பூதலூர் ஒன்றியம் ஆவாரம்பட்டியில் அது முடிவடைகிறது. அந்த ஆற்றுக்குத் தனது பட்டப் பெயரை வைத்து உய்யக் கொண்டான் ஆறு என அழைத்தார் இராஜராஜன். தனிநபர் நிலங்களை அளந்தும் (சர்வே செய்து), பொது நிலங்களை அளந்தும் உரிமைச்சான்றுகள் வழங்கினார் என்பதற்காக இராஜராஜனுக்கு உலகளந்தான் என்று பட்டம் கொடுத்தார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் ஒளித்து வைத்திருந்த தேவாரத்தை மீட்டும்  மற்ற சிவநெறி பாக்களை இணைத்தும் திருமுறைகள் உருவாக்கினார் என்பதற்காக “திருமுறை கண்ட சோழன்” என்றார்கள். தெலுங்கு நாட்டு சித்தூர், வாராங்கல் அரசர்களை அடக்கி அவர்களின் ஆக்கிரமிப்புகளை முறியடித்ததால் இராசராசனுக்கு தெலிங்கர் குல காலன் என பட்டம் கொடுத்தனர். இப்படிப்பட்ட காரணங்களோடு அவரின் பட்டங்கள் அமைந்தன. 

திருமாவளவன் அவர்களே, சிங்களர்கள் நடத்திய தமிழினப் படுகொலை முடிந்தவுடன் அதைப் பார்த்துவர, இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பினார் அன்றைய முதல்வர் கருணாநிதி! அதில் சென்ற நீங்கள் தமிழினப் படுகொலைக் குற்றவாளி அதிபர் இராசபக்சேவைப் பார்த்தவுடன் அவனுக்குக் கைகொடுத்து, புன்னகை பூத்து மகிழ்ச்சி தெரிவித்தீர்கள்.  

இப்போது நீங்கள் தமிழ்மன்னர்களை எதிர்ப்பதின் சூட்சுமம் பலருக்குப் புரிகிறது. நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு இரண்டகம் செய்கிறீர்கள்.

சிங்கள புத்தமதத்திற்குத் தமிழர்களை மாற்றிட வெளிப் படையாகவும் அந்தரங்கமாகவும் பல முயற்சிகளைச் செய்கிறீர்கள். உங்களின் பொதுச் செயலாளர்  விழுப்புரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் இரவிக்குமார்  நேரடியாகவே சிங்கள புத்தபிட்சுகளோடு நல்லுறவு வைத்து புத்தத்திற்குத் தமிழர்களை மதம் மாற்றும் வேலையைச் செய்து வருகிறார். தமிழீழத்தில் இலட்சக்கணக்கில் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த புத்தபிட்சுகளோடு நல்லுறவு கொண்டு, நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு இரண்டகம் செய்கிறீர்கள்!

இந்தத் தமிழினத் துரோகத்திற்கு உங்களுக்குத் தத்துவத் தந்தையாகக் கிடைத்தவர் ஈ.வெ.ரா! அதனால் ஈ.வெ.ரா. வை அண்மைக் காலங்களில் மிகையாகப் புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளீர்கள். 1969-ஆம் ஆண்டில் கூட தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், அதைப் படிக்காதீர்கள்  ஆங்கிலம் படியுங்கள்  ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றும் “பகுத்தறிவு” பகர்ந்தவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.!  

தமிழர்களே! சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே துடிப்புமிக்க தமிழின எழுச்சி மாணவராகக் கிளர்ந்தெழுந்து, தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்த திருமா தமிழின உரிமைகளை வலியுத்தியதால் “எழுச்சித் தமிழர்” சிறப்புப் பட்டம் பெற்றார் திருமா. இப்போது அவர் எங்கே நிற்கிறார் பாருங்கள்! 

தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை! “நேற்று புரட்சியாளனாக ஒருவன் இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் புரட்சியாளனாகவே தொடர்கிறான் என்று எடுத்துக் கொள்ளாமல் இன்று அவன் நடைமுறையில் புரட்சியாளனாகச் செயல்படுகிறானா என்று பாருங்கள்” என்றார் லெனின். தமிழர்கள் விழிப்புணர்வு கொள்வீர் என்கிறார் பெ.மணியரசன். அதேபோல் தொல்காப்பியம் தமிழ் சமஸ்கிருதம் கலந்த இலக்கண நூல் என்றாலும், சமஸ்கிரதம் தமிழ் கலாச்சாரக் கலப்பால் அதில் வடசொற்கள் (சமஸ்கிருதம்/பிராக்கிருதம்) இடம்பெற்றுள்ளன. சொல், பொருள் அதிகாரங்களில் வடமொழி எழுத்துக்களைத் தமிழில் கையாளுதல் (வடசொல் கிளவி) மற்றும் வடமொழி கலப்பு பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் இடம்பெறும் சில வடமொழி சார்ந்த குறிப்புகள்:

வண்ணமாலை (வர்ண மாலா): வடமொழி நெடுங்கணக்கு எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

வடுகர்: தமிழ்நாட்டு வட எல்லையில் வாழ்ந்த மக்கள்.

வடசொல் கிளவி: வடமொழிச் சொற்களைத் தமிழில் எவ்வாறு எழுத்துப்பெயர்ப்பு செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விதிகள் (எ.கா: ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துக்களைத் தமிழ்மயப்படுத்துதல்). சிலருக்கு நாக்கு சுத்தமா இருந்தால் மட்டுமே இதை உச்சரிக்க முடியும், 

இலக்கணக் குறிப்புகள்: காவியம், நாகம், ஆரியம், வர்ணம், ஆசாரம் போன்ற சொற்கள் பல அறிஞர்களால் வடமொழித் தொடர்புள்ளதாகக் கருதப்படுகின்றன. 

தொல்காப்பியத்தில் வரும் 'வடசொல்' என்பது சமஸ்கிருதத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்டாலும், அது பிராகிருதம் எனவும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.அதேபோல் திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் (247) அல்லாத, வடமொழிக்கு உரியதாகக் கருதப்படும் ச, ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், வடமொழி மூலத்தைக் கொண்ட (வடசொல்) சில சொற்கள், தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. எம்பார் கண்ணன் ரங்கராஜன் போன்றோர் இத்தகைய சொற்களை அடையாளம் கண்டுள்ளனர். 

திருக்குறளில் இடம்பெறும் சில வடமொழிச் சொற்கள் (வடசொற்கள்):

அக்கரம் (அக்ஷரம் - எழுத்து - குறள் 352: 'அகர முதல எழுத்தெல்லாம்')

விகாரம் (விகாரம் - மாற்றம்)

விசாரம் (விசாரம் - கவலை)

வஸ்து (வஸ்து - பொருள்)

அந்தம் (அந்தம் - முடிவு/இறுதி)

நாமம் (நாமம் - பெயர்)

அன்னம் (அன்னம் - உணவு) 

இந்தச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் ஒலிப்புக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளன (தற்பவம்). பெரும்பாலும், திருக்குறள் தூய தமிழில் அமைந்திருந்தாலும், அன்றாட புழக்கத்தில் இருந்த வடசொற்கள் சிலை இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில் 1980 வரை கல்விபயின்ற பலரும் உபயோகித்த தமிழ் சமஸ்கிருதம் கலந்தே நாம் உள்ளிட்ட பலரும் படித்த நிலையை திமுக ஆட்சியில் பெரியார் எனும் ஈ. வே. ராமசாமி பயன் படுத்திய எழுத்தை அங்கீகரித்து மாற்றியது. அதை பலரும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, மத்திய தொல்லியல் துறையும் அதை அங்கீகரிகவில்லை, உச்சரிப்பும் சரியாக வரவில்லை. ஆகவே, ஜெ.ஜெயலலிதா என்பதை முன்னால் முதல்வர் செயலலிதா எனவும் மூதறிஞர் இராஜாஜி என்பதை இராசாசி எனவும் முன்னால் ரஸ்யாவின் அதிபர் ஸ்டாலின் பெயரை  சுடாலின் எனவும்,  முன்னால் பிரதமர் வாஜ்பாய் பெயரை வாசுபாய் எனவும் அழைத்து வந்தால் அது உச்சரிப்பு பிழை என்பதை இங்கு பலரும் உணரவில்லை இது அரசியலுக்காக குழப்பும் பேச்சாகும். இது இது இக் காலகட்டத்தில் தேவையில்லாத ஒனறு. அரியும் சிவனும் ஒன்று என்பது போல இங்கு தமிழும் கலந்த சமஸ்கிருதமூம் ஒன்று தான். இங்கு நமஸ்காரம் துவங்கி அனைத்தும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...