தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தி அதைக் காரணமாக முன்னிறுத்தி மே மாதம் 2 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானம் நிறைவேற்றியது, பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது. எனவும்
தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு காண அமைப்பு ரீதியாக வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது. நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்ததில்லை,
இனியும் ஆதரிக்காது. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த சட்ட விதிகளில் இடமில்லை.ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை இறுதி செய்து ஒப்படைத்தும், இது நாள் வரை எந்த நகர்வும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்தப் புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்விதத் தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் மறுக்க இயலாது.
உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும், முதலீட்டையும் பிரதானமாக பாதிக்கக்கூடிய தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும். முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மே மாதம் 4 ஆம் தேதி வெளியான பிறகு, இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கலாம்.
இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாகப் பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழுத் தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து, சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது. அது தவறான தகவல் எனில் மறுத்து சந்திப்பிற்கு முன் திரும்பப் பெற வேண்டும்.என அந்த அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துகள்