தேர்தலுக்கு முதல்நாள் சரியாக பேருந்து கிடைக்காமல் மக்கள் தடுமாற்றம் நிர்வாகம் ஊழல் காரணமாக சமாளிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 ல் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர் செல்ல முயன்ற பயணிகள்
சென்னை, திருப்பூர், கோயம்பத்தூர், உள்ளிட்ட நகரங்களில் போதுமான பேருந்து வசதிகளின்றித் தவித்தனர். காரணம் ஆளும் கடசி வாக்குகள் எதிர் அலை காரணமாக உயர் மாநில அரசின் போக்குவரத்துத் துறை அலுவலரர்களின் லஞ்சம் லாவண்யம் காரணமாகவம் ரகசிய ஊழல் காரணமாகவும் பேருந்துகளின் இயக்கம் முடககப்பட்டதாக மற்ற கட்சிகள் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்த நிலையில்,
கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில், சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
போக்குவரத்து நெரிசல்: பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாலும், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலாலும், புதன்கிழமை இரவு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி மற்றும் வியாழக்கிழமை ஏப்ரல் 23 ஆம் தேதி காலை வரை பலர் பேரூந்து இனறி பயணத்தில் சிக்கித் தவித்தனர்.
பேருந்து பற்றாக்குறையால் வெளியூர் வசித்த வாக்காளர்கள் சிரமப்படுவதைக் குறிப்பிட்டு, வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பேருந்துகள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்துத் துறை காவதாமதமாக விளக்கம் அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கேள்வி: சரியான திட்டமிடல் இல்லாமை மற்றும் பேருந்து பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியிருந்தன. பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும், திடீரென பயணத்தை திட்டமிட்டவர்களும் முந்தைய நாளான 22-ஆம் தேதி இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால், அங்கிருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்பத்தூர் , திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மறுநாள் காலை 9 மணிக்குப் பிறகே நிலைமை சீரடைந்தது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆர்.மோகன்: கடந்த 21-ஆம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22-ஆம் தேதி முதல் 23-ம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த வகையில், 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி காலை 6 மணி வரை, மொத்தம் 10,637 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.25 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். எனவே, பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தவிர, சென்னையில் இருந்து மதியம், மாலை நேரத்தில் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவில் சென்னை திரும்பிவிடும். இந்த பேருந்துகள் இரவு மீண்டும் இயக்கப்படும். ஆனால், திட்டமிட்ட நேரத்துக்கு அந்தப் பேருந்துகள் செல்லாததால், சென்னை திரும்ப தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே இந்த தாமதத்துக்கு காரணம்". எனக் கூறினார்.


கருத்துகள்