முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக அரசின் சடடப்படியான முதல் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை அறநிலையத்துறையில் துவங்கியது

ஆளுநர் உரையின் போது, ​​கோயில் நிதி கோயில் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தவெகவின் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் ஆன அரசு தெளிவாகக் கூறியிருந்தது.


அந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடித்து, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு கோயில் நிதியைப் பயன்படுத்துவதற்கு முந்தைய திமுக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசு தற்போது ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.




நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஹிந்து சமய அறநிலையத்துறை (HR & CE)  அதன் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதாகத் தோன்றுகிறது. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், முந்தைய நிர்வாகத்தின் கீழ், இந்த நிதி, நமது பார்வையில், கோவில் வளர்ச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டது. அதற்கு பல ஆதாரங்கள் உள்ளது 

அபரிமிதமான செல்வாக்கை அனுபவித்தவர்கள் மற்றும் அரசாங்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக அடிக்கடி காணப்பட்ட பி. கே.சேகர்பாபு,


கோயில்களின் வளர்ச்சி மற்றும் நலனுடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளுக்கு கோயில் நிதியைப் பயன்படுத்தினார். நீதிமன்றங்கள் கேள்விகளை எழுப்பியபோதும், இதுபோன்ற முடிவுகள் குறித்து பலமுறை கவலை தெரிவித்த போதும், இணை நிர்வாகத்தை நடத்தும் ஒருவரின் நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டார். இன்று அந்த யுகம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது துறையின் மூலம் தவறாக மாற்றப்பட்ட பணம் திரும்பப் பெறப்படும் என்று நாம் நம்பலாம் மேலும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு வழிவகுத்த அறநிலையத்துறை சில அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இதில் இவர்கள் வாங்கிய ஊழல் பணம் இவர்களுக்கு இழப்பு, ஆனால் கடவுள் பணம் கடவுளுக்கு மட்டுமே. என்பது தான் சிறப்பு,கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள், நிர்வாகத் தவறுகள், சட்டம்-ஒழுங்குச் சீர்கேடுகள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, மக்கள் நலத் திட்டங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் போன்ற பல்வேறு தவறுகள் நடந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, இன்று தங்களை மிகப்பெரிய ஜனநாயகக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்த போது ஏன் அமைதியாக இருந்தார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுகிறது. அவர்கள் அப்போதே இதைக் கண்டித்திருந்தால் இது நடந்திருகாமல் அவர்கள் பயந்து கைவிட்டிருக்கலாம்.

அப்போது மக்கள் பாதிக்கப்பட்டபோது எங்கே போனது இவர்களின் இந்தக் கோபம்?  எங்கே போனது இவர்களின் இந்த ரோஷம்? எங்கே போனது இவர்களின் இந்த ஜனநாயக அக்கறை? ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணியில் இருந்த இவர்கள் போல பல கட்சிகள் கண்மூடித்தனமாக ஆதரவளித்ததோடு மட்டுமல்லாமல், பல விவகாரங்களில் கண்டும் காணாமல் இருந்தன என்பது அரசியல் வரலாற்றில் மறுக்க முடியாத ஊழல், கொள்ளைகள் நடந்த உண்மை.

ஆனால் இன்று அரசியல் சூழ்நிலை மாறியதும், கூட்டணிகள் மாறியதும், நேற்று வரை அமைதியாக இருந்தவர்களே இவர்கள் திடீரென ஊழலுக்கு நீதியின் உருவமாகவும், கொள்கையின் காவலராகவும், மக்கள் நலனின் பிரதிநிதியாகவும் தங்களை காட்டிக் கொள்ள முயற்சிப்பது அரசியல் நேர்மைக்கு பொருந்தாத செயல். நேற்று நடந்தவற்றை மௌனமாக ஏற்றுக்கொண்டவர்கள், இன்று சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான எதிர்ப்பைக் காட்டுவது உண்மையான கொள்கைப் போராட்டமா அல்லது அரசியல் வசதிக்கேற்ப மாறும் இரட்டை நிலைப்பாடா என்ற கேள்வி எழுகிறது. தவெக மட்டுமே ஊழல் ஒழிப்பு நடவடிக்கை செய்கிறது அதற்கு பாராட்டுக்கள், ஆனால் இவர்கள் கடந்த ஆட்சியில் தவறுகளைக் கண்டும் காணாமல் மக்களை ஏமாற்றியவர்கள்.

மக்கள் இன்று கேட்பது மிகவும் எளிமையான கேள்வி. திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த காலத்தில் நீங்கள் ஏன் பேசவில்லை? அப்போது உங்களின் மனசாட்சி எங்கே சென்றது? இன்று இருக்கும் கோபம், ரோஷம், வெட்கம், ஜனநாயக அக்கறை ஆகியவை அன்றும் இருந்திருக்க வேண்டாமா?

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கூட்டணிகள் மாறலாம். ஆனால் கொள்கைகள் மாறக்கூடாது. தவறு தவறாக இருந்தால் அது யார் செய்தாலும் ஒரே அளவுகோலால் விமர்சிக்கப்பட வேண்டும். நேற்று மௌனமாக இருந்து இன்று மட்டும் வீர வசனம் பேசுவது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகவே பார்க்கப்படும்.


எனவே, நேற்று செய்த மௌனத்திற்கும் இன்று காட்டும் கோபத்திற்கும் இடையிலான முரண்பாட்டை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மக்களிடம் விளக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் வசதிக்காகவும், பதவி அல்லது பிற பலன்களுக்காகவும் அப்போது அமைதி காத்துவிட்டு, இன்று மட்டும் போராளிகளாக நடிப்பதாக மக்கள் கருதுவார்கள். மக்களின் நினைவாற்றலை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது; அரசியல் சந்தர்ப்பவாதத்தை மக்கள் நன்றாக அடையாளம் காண்கிறார்கள், இவர்கள் நிலை தற்போது திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான்.கோவில் நிதி ரூபாய்.246 கோடியில் மேற்கொள்ளவிருந்த 46 கட்டுமானப் பணிகளை இரத்து செய்தது தமிழ்நாடு அரசு, சென்னை 

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று , கோவில் நிதியில், பல்வேறு கோவில்களில், 246 கோடி ரூபாய் நிதியில், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் உத்தரவை இரத்து செய்து, உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில், ஹிந்து சமய அறநிலை யத்துறை வாயிலாக, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட் டப்பட்டன; ஏற்கனவே இருந்த குற்றாலம், மயிலாப்பூர் போல சில ஆலயக் கல்லூரிகள் அல்லாமல் பல பள்ளிகள், கல்லுாரிகள் தொடங்கப் பட்டன. இவற்றுக்கு கோவில் நிதிகள் பயன் படுத்தப்பட்டது.

அதில் புதிதாக, திண்டுக்கல், திருவண்ணாமலை, தேனி, பழனி உட்பட 27 முதல் நிலைக் கோவில்களில், 80 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபங்கள்,

வளாகங்கள் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கு, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப் பட்டது.

'கோவில் நிதியை, வணிக வளாகக் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம். எனவே, அந்த அரசாணைகளை இரத்து செய்யவேண்டும்' என, ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் இராம ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.




அப்போது  தமிழ்நாடு அரசு தரப்பில், கட்டுமான பணிக்கு, கோவில் நிதியை விடு விக்கவில்லை என நீதி மன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிமன் றம், வணிக வளாகம் உள்ளிட்ட பணிகளை, கோவில் நிதியில் மேற் கொள்ள பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை  இரத்து செய்து, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அதை அவர்கள் அமல்படுத்தாமல் ஊழல் செய்தனர்,

தற்போது 2026 ல் த.வெ.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், ஆளுநர் உரையில், கோவில் நிதி, பக்தி சார்ந்த புனிதமான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கான அரசாணைகளை ரத்து செய்து, புதிய அரசாணைகள் நேற்று வெளியிடப்பட்டன.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள ஆணையில்

ஹிந்து சமய அறநி லையத்துறையால், திரு மண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட் டுவதற்கு வெளியிடப் பட்ட அறிவிப்புகள், நீதிமன்றத் தடையாணை உத்தரவு காரணமாகவும், திருக் கோவில்களின் நிதிசுமை காரணமாகவும் தொடங் கப்படாமல் இருந்தன.

அவற்றில், 115.77 கோடி ரூபாய் மதிப்பிலான, 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணி; 130.08 கோடி ரூபாய் மதிப்பில், 17 வணிக வளாகங்கள் கட்டும் பணி என, மொத்தம் 245.85 கோடி ரூபாய் மதிப்பிலான 46 பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிதியை வைத்து, கோவில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது. 

அரசாணையின்படி, தஞ்சாவூர், தென்காசி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, திரு வள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கோயம்பத்தூர் , சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங் களில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 46 கட்டுமானப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பி. கே.சேகர்பாபு குழுவினர் வாங்கிய நாற்பது விழுக்காடு ஊழல் தொகை?அவர்களுக்கு இழப்பு,  சமீபத்தில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மருத்துவமனைக்கு சோதனைக்காக வந்திருந்த முன்னால் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை  பார்த்து உடல்நலத்தை விசாரித்துவிட்டு அப்படியே திமுகவின் அபிலாஷைகயும் சொல்லியிருக்கிறார் திமுக முன்னால் மத்திய அமைச்சர் ஆ ராசா!  ஆனால் திமுகவின் ஆதரவு பாஜக அரசுக்கு இனி தேவைப்படாது காரணம் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருபது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவசேனாவிலிருந்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்படி கிட்டத்தட்ட 30 முதல் 35 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் கூடுதலாக வைத்திருப்பதால் திமுகவை இப்போது தயவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆகவே இனி தவெக எடுக்கும் ஊழல் நடவடிக்கை காரணமாக திமுகவில் பாதிப்பு வரவே செய்யும் காரணம் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் நடத்திய ஊழல் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...