புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நில அளவைக்கு லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடவடிக்கை..
திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நில அளவை பிரிவில் நில அளவை செய்ய
14000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர். புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினக்கு ஏற்கனவே பலமுறை ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளனர். திருமயம் வட்டம் மலுக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் ஊனையூர் அருகே உள்ள வளையன்வயல் பகுதியில் அவரது தாயார் பெயரில் இரண்டு மனையிடம் வாங்கிய நிலையில் அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்
கிராம நிர்வாக அலுவலர் நில அளவையர் செல்வராஜ் என்பவரை சந்தித்து கவனிக்குமாறு அவரிடம் தெரிவித்துள்ளார். நில அளவையரை சந்தித்த பாலமுருகன் தனது இடத்தை உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அளவை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நில அளவையர் செல்வராஜ் பாலமுருகனிடம் ஒரு சர்வே எண்ணுக்கு ரூபாய் 7000 வீதம் இரண்டு சர்வே எண்ணுக்கு ரூபாய் 14000 லஞ்சமாகக் கொடுத்தால் இடத்தை அளவீடு செய்து தருவதாகக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலமுருகன் புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைருக்கு தகவல் தெரிவித்து நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அரசு சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய தான் கொண்டு வந்த 14 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாலமுருகனிடம் கொடுத்து சாட்சியுடன் அனுப்பினர். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாலமுருகன் சர்வேயர் செல்வராஜிடம் கொடுத்து அதை அந்த நபர் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் பீட்டர் குழுவினர் சர்வேயர் செல்வராஜை பணம் பெற்ற கையுடன் மடக்கிப் பிடித்தனர்.லஞ்சம் பெற்ற சர்வேயர் செல்வராஜை விசரணைக்குப் பின் புதுக்கோட்டை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர். லஞ்சம் பெற்ற சர்வேயர் செல்வராஜ் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிக்குச் சேர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது..பல ஊழல் பெருச்சாளிகளுக்கு மத்தியில் திருமயத்தில் பிடிபட்ட ஒரு சிறிய ஊழல் எலி எனபதே உண்மை நிலை.






கருத்துகள்