முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பாமக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: பாமக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்! 


தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், ஜாதிவாரியான சமூகநீதியை உறுதிப்படுத்தவும், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  ஜூன் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கூட்டத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டத்தில்  பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கடசி தென்னிந்திய பார்வேடு பிளாக், நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமானது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் மிகவும் அவசியமானது எனப் பார்த்தால் 

1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தய கம்பெனி ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட கடைசி ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தியே இன்றும் தமிழ்நாடு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த  95 ஆண்டுகள் கடந்து பழமையான புள்ளி விபரங்கள் அடங்கிய தரவுகளை நீதிமன்றங்கள் ஏற்க மறுப்பதால், மாநிலத்தின் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையே சட்டப்பூர்வ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


இந்தப் பின்னணியில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படக் காரணங்கள்:

முதலில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தல்: தமிழ்நாட்டின் தனித்துவமான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை உச்ச நீதிமன்றத்தில் நிலைநிறுத்த, அறிவியல் பூர்வமான மற்றும் நடப்பு நிலையைப் பிரதிபலிக்கும் புதிய சமூக-பொருளாதாரத் தரவுகள் அவசியமாகும்.       அடுத்ததாக ஜாதிவாரி சமூக நீதியை மேம்படுத்துதல்: துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே உண்மையான சமூக நீதியை உறுதிப்படுத்த முடியும். தற்போதைய நிலையில், பல்வேறு சமூகங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடவும், அவற்றிற்கான திட்டங்களைச் சமமாக விநியோகிக்கவும் வாய்ப்புகள் இன்றி உள்ளது.

மூன்றாவதாக ஒட்டுமொத்த ஜாதி சமூகத்திற்கும் நன்மை:  ஒரு குறிப்பிட்ட ஜாதி சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து சமூகங்களின் சரியான மக்கள்தொகை கணக்கு விகிதம் மற்றும் சமூக-பொருளாதார நிலையை அறிவதன் மூலம், அனைவருக்கும் ஏற்றவாறு திட்டங்களை வகுக்க முடியும். மெஜாரிடடி சமூகங்கள் அரசியல் ரீதியாக வளம்பெறுவதைத் தடுத்து சிறிய சமூகங்கள் அதிகாரம் செலுத்தி வரும் நிலை தான் இந்த கணக்கெடுப்பு அரசியல் ரீதியாக தடுக்கப்படுகிறது,


தேர்தல் அரசியலுக்காகவே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை பாமக கையிலெடுத்துள்ளது என் விசிகவின் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தாலும் (விசிக  பாமகவின் எதிரியாக காட்டும் அணுகுமுறையைக் காட்டுகிறது), இந்தக் கோரிக்கையின் பின்னணியில் உள்ள சமூக நீதிச் சிக்கலைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.


பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பிற அரசியல் கட்சியினரின் வலியுறுத்தல்

"இந்தியாவிலேயே சமூகநீதியின் தொட்டில்" என்று போற்றப்பட்ட தமிழ்நாடு, இந்த விவகாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசாவது  இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.

பாமக வலியுறுத்தும் நிலைப்பாடு: "சுமார் 95 ஆண்டுகள் பழமையான இந்தத் தரவுகளை ஏற்க நீதிமன்றங்கள் மறுத்து வரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் அரசுக்கு மாற்றில்லை. இதுவரை போதுமான அக்கறை காட்டப்படாததால், புதிய அரசு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்".

பிற அரசியல் கட்சிகளின் பார்வையில் இதேபோல், சமூக நீதிக்கான இந்தக் கணக்கெடுப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ஒருமித்த குரலைப் பதிவு செய்தன.ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்க  அனைத்து கட்சி கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றதில் தென்மாவடட மெஜாரிட்டி சமூகத்தை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மற்றும் தேவர் தேசிய பேரவை சார்பாக நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி கலந்து கொண்டு பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் உடன் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கோரிக்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

கருத்துகள்