நீதித்துறையில் ஏ.ஐ.யின் தாக்கம் தொடங்கியுள்ளது. சில நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்புகளில் ஏ.ஐ. வழங்கிய மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மேற்கோள்கள் எந்த நீதிமன்றமும் பிறப்பிக்காத உத்தரவுகளைத் தெரிவிக்கின்றன. இது அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. ஏனென்றால் நான் ஏ.ஐ. உதவியை நாடியதே இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்காக கணினியில் ஏ.ஐ. உள்பட நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையுமுள்ளது. தற்போதைய காலத்தில் மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது இயலாத காரியமாகிறது. ஒரு விஷயத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தினா ல்தான் வெற்றி பெற இயலும்.
பல ஆண்டுகளாக வக்கீலாகப் பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றுகிறேன். ஏராளமான வழக்குகளை கையாண்டுள்ளேன். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க இந்த செல்போன்கள் தான் முக்கியக் காரணம். செல்போன்களால் தான் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது இப்போதைக்கு அவசியமாகிறது". எனத் தெரிவித்தார்.


கருத்துகள்