முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அரசு குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் பதிவுகள் இ-சம்பதா தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் அரசு குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் பதிவுகள் இ-சம்பதா தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பு இ-சம்பதா என்ற புதிய இணைதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் அரசுக் குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் முன்பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நிர்வாக நாளாகக் கொண்டாடப்படுகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசின் எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் இ-சம்பதா என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உருவாக்க முடிவு செய்தது. இவற்றின் மூலம் ஒற்றைச் சாளர முறையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள், அரசு அமைப்புகளுக்கு அலுவலக இடங்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற முறையை வழங்கும் முயற்சியாக மேற்கண்ட வசதிகளை வழங்கிய எஸ்டேட்ஸ் இயக்குநரகத்தின் 4 இணையதளங்கள் (gpra.nic.in, eawas.nic.i...

முன்னாள் பாரதப் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயின் 96 வது பிறந்தநாளில் பிரதமர்

முன்னாள் பாரதப் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயின் 96 வது  பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் டெல்லியில்  வாஜ்பாய் நினைவிடத்துக்கு நேற்று  காலை சென்ற பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் த லைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாாரமன் ஆகியோரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். வாஜ்பாயின் வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் அவரின் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய சிறப்பான உரைகள்,புகைப்படங்கள், ஆகியவை அடங்கிய நூலை பிரதமர் மோடி வெளியிட்டார் மக்களவைச் செயலாளர் சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றமைய மண்டபத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்12 ஆம் தேதி வாஜ்பாய் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு  மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாயின் பிறந்தநாளை சிறந்த நிர்வாக நாளாக மத்தியஅரசு கடைபிடிக்கிறது.ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந...

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமணையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

இரத்த அழுத்தத்தில் பெரிய மாறுபாடு காரணமாக   ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் பெரிய அளவுக்கு மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம்  தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மாலையில் அப்பல்லோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ்  அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த். குழுவைச் சேர்ந்த சுமார் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது காலை திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. இரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அசதி ஏற்பட்டுள்ளது. என அப்பல்லோ மருத்துவமனை  நிர்வாகம் மதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று காலை ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு உ...

மதுரை சுற்றுலாவிற்கு தனியார் வாடகை உலங்கு வானூர்தி

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்  தெற்குதெரு கிராமத்தில் தனியார் நிறுவனம்  சார்பில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை உலங்கு வானூர்தி  மூலம் சென்று பார்த்து ரசிக்க   ஒருவருக்கு ரூபாய். ஆறாயிரம் வீதம்‌ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார்  பொறியியல் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி  நிறுவனமும் இணைந்து இதற்கான தொழில்முறை சுற்றுலா வசதி  செய்து தருகின்றனர்.இந்தச் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆறு நபர்கள் பயணிக்கக்கலாம் உலங்கு வானூர்தியில் அழகர்கோவில், ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் , திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடியிலுள்ள தொல்லியல் புராதனச் சின்னங்களை 15 நிமிடப் பயணத்தில் கண்டு ரசிக்கும் படியுள்ளதாகவும், டிசம்பர் 29 ஆம் தேதி வரை மட்டுமே முதல்கட்டமாக இந்த தொழில் சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பயணிகளின் வருகையைப் பொறுத்து இந்த தொழில் சேவை நீட்டிக்கப்படும் என தனியார் நிறுவனத்தில் பணிசெய்யும்  நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்..நமக்கு சிறுவயதில் வாடகை சைக்கிள் கிடைப்பதே அபூர்வம் ஆனால...

வைகுண்ட ஏகாதசி பரமபதம் சொர்க்கவாசல் திறப்பு

மகாபாரதக் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு  இந்நாளில்  கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுமஹ மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் சைவ, வைணவ, இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்பிக்கை.மகாவிஷ்ணுவின் குணங்களை எல்லாம் உணர்ந்த அசுரர்கள்,  பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்ளவே ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தில் வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான்  மஹாவிஷ்னு, அதன் வழியாக அசுரர்களை பரமபதம் சேர்த்ததாக ஐதீகம்  வைகுண்ட ஏகாதசியன்று  தரிசிப்பவர்கள் அனைவருக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டுமென நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டவே, அதற்கு இறைவனும் ஒப்புதல் அளித்தாக இந்து வைணவப்பெருமக்களின் நம்பிக்கை

விளையாட்டு அமைச்சகம் சார்பில் 8 கேலோ மாநில உயர்திறன் மையங்கள் திறப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 8 கேலோ இந்தியா மாநில உயர்திறன் மையங்களை திரு கிரண் ரிஜிஜு திறந்து வைத்தார் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, எட்டு கேலோ இந்தியா மாநில உயர்திறன் மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், கேரளா, தெலங்கானா, நாகாலாந்து, கர்நாடகா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இம்மையங்கள் அமைந்துள்ளன. கர்நாடக முதல்வர் திரு எடியூரப்பா மற்றும் பல்வேறு மாநிலங்களின் விளையாட்டு துறை அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நகர் ஊரமைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சோதனையில் சிக்கியது ரூ ஒரு இலட்சம்

சிவகங்கை நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை  சோதனை  கணக்கில் வராத ரூபாய்.ஒரு லட்சம் பணம் பறிமுதல்  தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் நேற்று  மாலை இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  கருப்பையா தலைமையில் ஆய்வாளர்கள்குமாரவேல், சந்திரன், உதவி ஆய்வாளர்  ராஜாமுகமது உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். நகர் ஊரமைப்புத் துறை  அலுவலகத்திற்குள் இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  நுழைந்ததும், உள்ளே இருப்பவர்களை வெளியே செல்லவிடாமல் கதவு பூட்டப்பட்ட து பின் அவர்களிடமிருந்த மொபைல் தொலைபேசிகளையும் பறிக்கப்பட்டது. துணை இயக்குநர் மற்றும் ஊழியர்களின் இருக்கைகளில் சோதனையிட்டதில் துணை இயக்குநர் அறையில் இருந்து மட்டும்  கணக்கில் வராத ரூபாய் ஒரு இலட்சம்  பணத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் இரவு வரை விசாரணை நடத்தினர்.