மதுரை- பழனி, மற்றும் பழனி- கோயமுத்தூர் ஒரே இரயிலாக இயக்கம் மதுரையிலிருந்து பழனி வழியாக கோயம்புத்தூர் வரை சென்று கொண்டிருந்த பொதுப்பட்டிகளைக் கொண்ட இரயில் வண்டி கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் மதுரைக்கும் பழனிக்குமிடையே ஒரு இரயிலாகவும் பழனிக்கும் கோயம்புத்தூருக்குமிடையே மற்றொரு இரயிலாகவும் இயக்கப்பட்டது. இதனை ஒரே ரயிலாக இயக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து பழனி பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரே இரயிலாக இயக்க கால அட்டவணையையும் உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல கோயம்புத்தூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அளித்த ஐந்து கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிக்க குறிப்பிட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் கடிதம் மூலம் திருச்செந்தூர் விரைவு வண்டியை கிணத்துக்கடவு கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்க வேண்டுமென்றும் மதுரை கோயம்புத்தூர் இடையே ஓடிக்கொண்டிருந்த நகர இடை ...
RNI:TNTAM/2013/50347