பல சின்னம்,பல கட்சி அதோடு பலமுள்ள, பலமில்லாத சுயேட்சைகள் குழப்பத்தில் மக்கள். திறவு கோல், சீப்பு, கட்டில், கார், சங்கு, பெயிண்ட் பிரஷ், வானொலி பெட்டி, அஞ்சல் பெட்டி, ஸ்கூட்டர், தொலைபேசி, அன்னாசிப்பழம், நாற்காலி, கோப்பை, ரயில் எஞ்சின், பந்து, தலைகவசம், வாளி, கண்ணாடி குடுவை, பட்டம், கத்தி, சாக்லெட், குடிசை, சைக்கிள் ரிக்?ஷா, மக்காச்சோளம், மாவரைக்கும் திரிகை, படகு, சாப்பாட்டு தூக்கு, சிம்னி விளக்கு, மரம், வண்டி' என, 30 சின்னங்கள் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.இதில் சீப்பு உள்ளிட்ட சிறிய பொருள்களை வாக்காளர்களுக்கு வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களால் பிளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடைகளில் சீப்புக் கிடைக்கவில்லைஉள்ளாட்சித் தேர்தலில் 200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தவர்கள்
இன்று 50 முதல் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள்..
பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிறகு ஆதரவு கூடுமா? குறையுமா?
நடிகர் வடிவேல் பாணியில் பேசினா எடை குறைகிறது என்பதுபோல பிரச்சாரம் செய்தா ஓட்டு குறையுமோ..ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன் கிடைப்பது தகவல். நடந்த பின் வருவது செய்தி.முடிவு வரும்போது தெரிந்துவிடும்...யார் ஜாம்பவான்கள் என...வியாபாரக் கடை போல அரசியல் மாறிவிட்டது பொதுத் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கும் மாணவனுக்கும் பொதுத் தேர்தலில்விழுந்து விழுந்து வாக்கு கேட்கும் வேட்பாளருக்கும் பெரிய வித்தியாசமில்லை!மாணவன் வெற்றி பெற்றால், 'காலேஜ்'
'வேட்பாளர் வெற்றி பெற்றால், 'எங்கேஜ்!' நாம் ராமாவரத்தை பார்த்திருக்கோம்
கோபாலபுரத்தை பார்த்திருக்கோம் தைலாபுரத்தை பார்த்திருக்கோம்
போயஸ் தோட்டத்தை பார்த்திருக்கோம்நெல்லுக்கு ஆசைப்பட்டு சொல்லுக்குச் சீட்டெடுக்கும் பரிதாபத்திற்குரிய பொது ஜனக் கிளியை யாராவது
பார்த்திருக்கிறீர்களா?மாற்றமே மானிட தத்துவம் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து வாக்குகள் கடன் வாங்குவது இருக்கட்டும்…வாக்களித்த மக்களுக்கு
நன்றியோடு பணியாற்றுவோருக்கு வாக்களிப்போம்!உங்கள் ஓட்டுகள்உள்ளாட்சியில் நல்லாட்சி தருபவராக இருக்கட்டும். நல்லமனிதர்களை தேர்வு செய்து அனுப்பட்டும்!அதுவே உண்மையான வெற்றி கடந்த காலங்களில் தேர்வாகி ஊழல் இலஞ்ச லாவன்யத்தில் மிதந்த பலர் மீண்டும் வருவது தடுப்பதற்கு மக்கள் தயாரா.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்