தி.மு.க. இன்று நடத்திய பேரணிக்கு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி
அரசு சொத்துகள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை கேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
அமைதியான போராட்டங்களை தடுக்க முடியாது :சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தபடி நடந்தது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு காவல்துறை மூலம் செய்திருந்தனர்அதிகாலையில் இருந்தே தாளமுத்து நடராசன் மாளிகை அருகே திமுக தொண்டர்களுடன் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் என பவர தொடங்கினர்.. சிரிய பெரிய 98 அமைப்புகளும்
மக்கள் கூட்டம் சேரச்சேர, ஏதாவது ஒரு வகையில் சின்ன பூசலாவது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால், எங்கு பார்த்தாலும் போலீசாரின் கண்காணிப்புகள் இருந்து கொண்டே இருந்தது.. திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவுடனேயே பேரணி ஆரம்பித்துவிட்டது.
பேரணி துவங்குவதற்கு முன்பேயே பங்கேற்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ் பாரதி எம்பி., சைதை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவ்வப்போது தொண்டர்களுக்கு அட்வைஸ் தந்துகொண்டே இருந்தனர்.. பேரணியில் முழு கவனம் செலுத்தி கண்காணித்து கொண்டே இருந்தனர்.
அதேபோல, குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பான உத்தரவு போட்டுவிடவும், தொண்டர்களும் அதற்கு செவிசாய்த்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு வழியெல்லாம் இருந்தன.. துப்பாக்கி போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. கலவரம் ஏதாவது ஏற்பட்டால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் ஒரு பக்கம் நின்றிருந்தன.. அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டுவிடாமல் தடுக்க தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என அவர்களது தீவிரம் இந்த பேரணியில் அதிகமாகவே தென்பட்டது. ஆங்காங்கே ட்ரோன்கள் மூலம் பேரணி வீடியோ பதிவாகி கொண்டிருந்தது.. ராஜரத்தினம் ஸ்டேடிய மேடையில் ஏறி தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் மட்டுமே எழுப்பி தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் பதிவு செய்தனர்.
அத்துடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மதித்து இந்த பேரணி நடந்தது... எந்த அத்துமீறலும் இல்லை.. சிறு பூசலும் இல்லை.. மிக அமைதியாக சென்னையில் பேரணி நடத்தி முடித்துள்ளது திமுகவின் பக்குவ முதிர்ச்சி கலந்த திறமையா அல்லது நீதிமன்றம் வகுத்த வழிமுறைகள் தான் என்பதே பலரும் பேசும் தலைப்பாக....
கருத்துகள்