முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -அறிக்கை

           வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -அறிக்கை
 தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாறுதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது விந்தையாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடந்து வரும் நிகழ்வு ஆகும். இதற்கு உள்அர்த்தம் கற்பித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவ்வப்போது பணிமாற்றம் செய்தது நடக்காத நிகழ்வா என்ன?. இவற்றுக்கு எல்லாம் மேலாக, அப்போதைய அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய உமாசங்கரை அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் குடும்பம் நடத்திய தனியார் தொலைக் காட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தால் தற்காலிக பணிநீக்கம் செய்ததையும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் முடக்கப்பட்டதையும் அன்றைக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதனை மக்கள் இன்னும் மறக்கவில்லை, மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பாரத் நெட் உள் கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போதுதான் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இன்னும் நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியோ, விலைப்புள்ளியோ பெறப்படாத நிலையில், ஊழல், ஊழல் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தான் விந்தையாக உள்ளது. அவர் விரக்தியின் விளிம்பில் இருந்து பேசி வருகிறார். அ.தி.மு.க. அரசு கடுமையான உழைப்பினால் பல துறைகளில் சாதனை புரிந்து, எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், அதன் நல்லாட்சிக்கு அத்தாட்சியாக வேளாண்மை தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட 10 துறைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட 50 குறியீடுகளின் அடிப்படையில், 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு இதனை பாராட்ட மனமில்லாது போனாலும் பரவாயில்லை. குறை கூறியது மட்டுமல்லாமல், முதல் இடத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தவர்களை அடிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம், தேசிய குற்ற ஆவண காப்பகம், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு, மத்திய அரசின் புள்ளி விவரம் ஆண்டு புத்தகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு, இந்திய பொது நிதி புள்ளி விவரங்கள், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு போன்ற அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த மத்திய அரசுத்துறை புள்ளி விவரங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் ஆய்வறிக்கைகளில் உள்ள வளர்ச்சி குறியீடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின், இத்தகு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் புள்ளி விவரங்களையே தவறு என்கிறாரா?, அந்நிறுவனங்களை அடிக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அல்லது அந்நிறுவனங்களின் அதிகாரிகளையா? அல்லது இந்த புள்ளி விவரங்களை தொகுத்து வழங்கிய மத்திய அரசு அதிகாரிகளையா? இதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில்  கூறியுள்ளார் இதற்கிடையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளராகப் பதவி வகிப்பவர் டாக்டர் சந்தோஷ் பாபு. தமிழகத்தின் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இணைய வசதி அளிக்கும் 'தமிழ்நெட்' திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட `தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் அளிப்பதற்காக, டெண்டர் விதிகளைத் தளர்த்த ஆளும்கட்சியிலிருந்து அழுத்தம் கொடுக்க, தனது ஐ.ஏ.எஸ் பணியில், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.டாக்டர் சந்தோஷ்பாபு இ ஆ ப  சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கண்டதேவி ஆலய தேரோட்டப் பிரச்சினை காரணமாக ஒருமுறை வேறு பணிக்கு  மாற்றப்பட்டவராவார் எப்போதும் தனக்கு சரி என்பதைச் செய்வதில் யாரோடும் சமப்படுத்திக்கொள்ளாதவர் எனப் பெயரெடுத்தவராவார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...