முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னதானத்தின் சிறப்பு

அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் திரௌபதிக்குப் பின்பாக கோவலன் மகள் மணிமேகலைக்கு மட்டுமே கிட்டியது ..அது போல் அன்னதானம் செய்வதில் மகுடவைசியர்களான. நகரத்தார்கள் செய்து வரும் சிறப்பே தனி.. தானத்தில் சிறந்தஅன்னதானத்தை அறிந்து கொள்வோமா.✒இன்று ஆலயங்களில்  ,மடங்களில் ,சிலசமுகத் நற்தொண்டு நிறுவனம்களில் இத்தானத்தை செய்து வருவதை  பார்க்கிறோம்.பொதுவாக தானம் என்பது என்ன என புரிந்துகொள்ள வேண்டும் …நம்மிடம் உள்ள ஒரு பொருளை பிறருக்கு எந்தபலனையும் எதிர்பாராதுதிருப்தியாக மன நிறைவோடு தருவதேதானம்...தர்மம் என்பது பரிகாரச் செயல்என்றுதான்சொல்லவேண்டும் ..தர்மம் செய்த பொருட்கள் பொருத்து பலன்ஏற்படும் என்று ஜோதிட நூல்கள்சொல்கிறது .இதை இப்படி விளக்கலாம் …ஒரு மெய்யன்பர் எண்ணிடம் ''நான்முறைப்படி சஷ்டி விரதம் இருக்கிறேன்,பிரதோஷத்தில் வழிபடுகிறேன்,பல நபர்களுக்கு கோவிலில் அன்னதானம்செய்கிறேன் இப்படி ஜனாதனதர்மம்படி நான் முறையாக வாழ்ந்தாலும்என்னை இந்த தீய கர்ம பலன்விட வில்லையே  என்ன செய்வது எனகுழப்பம் உள்ளது'' என்றார் மகான்கள் இவர்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்றால்ஒரு செயலை செய்த பின்பு மனதில்மமதையாக நான் இதை செய்தேன் என்றஎண்ணம் தோன்றி விட்டால் அந்த செயலுக்குஉண்டான பலன்இல்லாமல் போய்விடும் ..இதை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமம் தான்சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் …கோவில் கும்பாபிஷேகம் செய்து விட்டு நான்5 கோவில் செய்து உள்ளேன்,நான் 18 வருடம் மலைக்கு சென்றுள்ளேன் ,நான் 15 வருடமாக சுமங்கலி பூசை செய்துள்ளேன் ,நான் 20 வருடமாக அண்ண தானம் செய்கிறேன் …இப்படி மனதில் தோன்றும் மமதை தீமை செய்து விடும் …இந்த மமதை தான் தானத்தின் முழுமையானஎதிர் பலன் தரவல்லது.மமதை அடக்க மனதை அடக்க மகான்கள்,ஞானிகள் நமக்கு சொல்லிக் கொடுத்த முதல்பாடம் தான் இந்த அன்னதான முறை ….இதை முறையாக புரிந்து கொள்ள சிறு புராணவிளக்கம் அறிந்து கொள்வது நல்லது…கொடைஞன்கர்ணன் பல தர்மம் செய்து வாழ்ந்தான் ,யுத்த களத்தில் அர்ஜுனன் தொடுத்த அம்புஅவனது உயிரைப்பறிக்கவில்லை தர்ம தேவதை தடுத்துநின்றாள்.இதை புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவனிடம்முதியவர் கோலம் கொண்டு தர்மம் வேண்டும்என்று பிச்சை கேட்கிறார் .யுத்த களத்தில் உங்களுக்கு கொடுக்கஎன்னிடம் எதுவும் இல்லையே என்றுவருந்திப் புலம்புகிறான் ,அவர் சொல்கிறார் `உன்னிடம் உள்ள தர்மம்கள்அனைத்தையும் எனக்கு தரலாமே என்றுசொல்லி அவனைப் பார்க்கிறார் ,கர்ணன் அதை புரிந்து கொண்டு தன் ரத்தத்தில்கலந்து உள்ள மமதை என்னும் கர்வத்தைஅவரிடம் தானமாக தர அவர் அவனுக்குதேவலோக பதவி தருகிறார் ….இப்படி தேவலோகம் சென்ற கர்ணன் அங்குஇருக்கும் பொழுது பசி எடுக்கிறது.தேவலோகத்தில் இருக்கும் தேவர்களுகோ,தேவலோக பதவி அடைந்தவர்களுகோ பசிதாகம் ஏற்படாது என்று நூல்கள் சொல்கிறது ..பசித்த கர்ணன் அங்கே இருக்கும் தேவர்களில்ஒருவரிடம் உணவு கேட்டு உண்கிறான் ,மீண்டும் பசி ,தாகம் எடுக்க மீண்டும்அவரிடம்கேட்கிறான் ,அவர் அவனிடம் பசி எடுக்கும் பொழுதுஉன்னுடைய ஆள்காட்டி விரலை வாயில்வைத்துக்கொள் என்றார் .அவர் சொல்லியபடி கர்ணன் வைத்துகொண்டான் பசி நின்று விட்டது .கர்ணனுக்கு அதிசயமாக இருந்தது எப்படி இதுசாத்தியம், குழப்பம் வரவே ,ஒருதேவரிடம் கர்ணன் தனது சந்தேகத்தைகேட்கிறான்மேலும் அவர்களை அவன் கவனித்த பொழுதுயாருமே பசி என்று சொல்லவில்லை..அவர் சொல்கிறார் கர்ணா நீ பூமியில் பலதர்மம்களைச் செய்தாய் ,சில தானமும் செய்தாய்,என்னை போல யாரும் தர்மம் செய்யவில்லைஎன்ற மமதையால் உன் மனம் நிரம்பி இருந்தது,ஒரு நாள் நீ கோட்டைக்கு வெளியே உலாவியபொழுது ஒரு பெரியவர் பசியால் வருந்தியபடி உன் அருகே வந்து இங்கே அண்ணதானக்கூடம் எங்கே உள்ளது என்று கேட்ட பொழுதுநீ அவரிடம் அந்த இடத்தின் எல்லையில் உள்ளஅண்ணதான சத்திரத்தை உன் ஆள்காட்டிவிரலால் காண்பித்து அங்கே உள்ளது என்று சுட்டிக் காட்டியதால் உன் விரலுக்குபசியை தீர்க்கும் சக்தி வந்தது ,நீஅண்ணதானம் செய்யாததால் உனக்கு பசிஎடுக்கிறது செய்யும் இடத்தை காண்பித்ததால்உன் விரலுக்கு பசியை போக்கும் சக்திஉண்டாணது என்றார் …..தானத்தில் பல வகை இருந்தாலும் அன்னதானம்மட்டுமே மிக மிக உயர்ந்த தானம் என்று நாம்அறிவோம் . இது எதனால் என்று ்கர்ணனின் பசியை பற்றிய செய்திநமக்கு புரிய வைத்தது …தாயின் கருவறையில் இருந்து இந்தப் பிரபஞ்சஎல்லைக்குள் நாம் வந்தவுடன் ஏற்படும் முதல் மூச்சுத் துளிஎண்ணிக்கை கொண்டு துவங்குகிறதுகோள்கள் கணக்கு ,இதை அவர்கள் கருவறையில் /கர்ப்பசெல் நீக்கி இருப்புப் போக என்று நாழிகைக்கணக்கை கூட்டி கழித்து கோள்களை 12கட்டத்தில் பிரித்து மனிதப் பிறப்பை ஒருமறைமுக நகல்அடையாளமாக தாளில் பதிக்கிறார்கள் ,இப்படி வரையறுக்க பட்ட கணக்கை வைத்துஅந்த உயிரின் பாப புண்ணிய ,பாக்கியும்,தர்மம் ,தண்டனை ,போன்ற அமைப்பையும்,பல பிறவியின் அமைப்புகளையும் பிரித்துச்சொல்கிறார்கள் ,இதில் மிக உயர்ந்த கணக்கு சித்தர்கள் வகுத்தகணக்கு மட்டுமே என்றுநாம் சில வித்தியாசமான பிரச்சனைகளைதீர்வு காணும் பொழுது புரிந்து கொள்ளலாம்..ஆதி காலத்தில் நம் நாட்டில் சத்திரங்களும் சாவடிகளும் பலஇருந்தது ஏன் என நாம் கவனித்தால்புரியும் ,இவைகள் எல்லாம் ஞானிகளைப்பின்பற்றுவோர்களால் உண்டாக்கபட்டது,சத் விவரங்களில் ஒரு மனிதன் ஈடு பட்டுஞானிகளைத் தேடிச் செல்வான் என்றால்அவர்கள் அவனுக்கு தரும் முதல் அறிவுரைபசித்தவருக்கு உணவை தானமாகக் கொடு என்பதே ,இப்படி அன்று அவர்களின் அருளாசியினால்ஏற்பட்டதே அன்னதான கூடம்.ஏன் மகான்கள் உணவு தானத்தை செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று பலநாட்கள்சிந்தனை செய்தது உண்டு ,இவைகளை பற்றி அரிய நான் பல நூல்களைபடித்து பார்த்த பொழுது தகவல் சரியாகபிடிபடவில்லை ,கோள்களை அறிந்த மகான்கள் உணவுதானத்தை சொல்கிறார்கள் என்றால் கோள்களின்கோபத்தை குறைக்க இந்த தானம் எப்படியோமறைமுகமாக செயல் படுகிறது என்றுமட்டும் புரிந்தது .ராமதாசர் என்று வைணவ பக்தர் ஒருவர் ராமகோவிலை வீட்டின் அருகிலே கட்டி கொண்டுதினமும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்துவந்தார் ,இவர் கபீர் தாசரின் சீடர் சரித்திரத்தில் முன்று ராமதாசர்கள்உண்டுஒருவர் சத்திரபதி சிவாஜியின் குருஅடுத்தவர் பத்ராசலம் ராமதாசர்மற்ற ஒருவர் துவாரகை ராமதாசர் ..நாம் பார்க்க போவது பத்ராசலம் ராமதாசர்பற்றியதுபல பக்தர்கள் ராமதாசரின் வீட்டிற்க்கும்கோவிலுக்கும்வந்த படி இருந்தனர் ,அவர்களுக்கு ராமதாசர்உணவு தானம் செய்து வந்தார் ,ஒரு நாள் அவரின் மகன் குடிபதற்கு வைத்தஇருந்த வெந்நீர் பத்திரத்தில் விழுந்துஇறந்து விடுகிறான் ,அன்று ராம நவமி ,உணவுகளை பரிமாறிகொண்டு இருந்த அவர் மனைவியும்பக்தர்களை கவனித்த படி இருந்த ராமதசரும்இவனை கவனிக்க வில்லைஎல்லோரும் சென்ற பின்பு மகனை தேடியபொழுது அவனை கண்ட இவர்கள்துடித்தார்கள் ,ராமதாசர் மகனை ராமனின் பாதத்தில் கிடத்திஉள்ளம் உருகி “ராம எனக்கு என்று எதுவும்நான் இதுவரை உன்னிடம் கேட்டது இல்லைஎல்லாம் பக்தர்களுக்காக உன்னிடன் கேட்டேன்இப்பொழுது என் மகன் இறந்து விட்டான்எனக்கு என் மகனை திருப்பி தா என்று கதரியபொழுது ராமனால் மகன் உயிர் பெற்றுஎழுகிறான் …உண்மை எதுவெனில் அன்னதானம் செய்தவருக்கு உதவி செய்யதெய்வம் ஓடி வரும் கர்மத்தை கலைக்கும்சக்தி அன்னதான செயலுக்கு உண்டுகர்ம புத்திரன் அன்னதானத்தினால்கிடைத்தான் .ஒரு விவரம் எனக்கு புரிய ஆரம்பித்ததுகர்மபலன் அன்னதானத்தில் உள்ளே செல்கிறது,அன்னதானம் வம்ச விருத்யும் ,மாற்றாக மோட்ச பதவி கிடைக்க வாரிசுஇல்லாமலும் செய்கிறது …..அன்னதானம் நமது கர்மத்தைகலைக்கும் அமைப்பு படைத்தது என்றுபார்த்தோம் மேலும் இது வம்ச விருத்திக்குமற்றும் மோட்ச நிலைக்கு எப்படி உதவுகிறதுஎன்று பார்த்து வருகிறோம் ….கர்ணன் அன்ன தானம் செய்யாத பலனால்அவனுக்கு ஏற்பட்ட பசியையும் ,அன்னதானம்செய்த பலனால் பிள்ளையின் உயிரே திரும்பபெற்ற ராமதாசரையும் இதுவரைபார்த்தோம்,இனி சோதிடத்தில் அன்னதானம்எப்படி கர்மத்தைகலைக்கும் என்று பார்ப்போம் ..சோதிட நூல்களில் 10 ஆம் இடம் என்பது கர்மஸ்தானம் என்று சொல்ல படுகிறது ,இந்த அமைப்பை கொஞ்சம் சோதிட அறிவோடுதான் புரிந்து கொள்ள முடியும் ,எளிமையாக புரிந்து கொள்ள— ஒருமனிதனுக்கு வருமானத்தை ,பதவியைதரும் இடம் ,அதாவது தொழில், பட்டம் அதில் வரும்வருமானம் மேலும் கொள்ளி போடும் பிள்ளையின் தன்மை,அவர்கள் பிறப்பு,பிச்சை எடுப்பது ,தர்மம் செய்வது ,நல்லஉணவு போன்ற அமைப்புகளை அறிந்துகொள்ள உதவும் …இந்த கர்ம இடத்தை கிரக பார்வையும் அவர்கள்தரும் அமைப்பும் தான்நல்ல /தீய பலனை தருவது .இந்த இடத்தை பல சோதிட நூல்கள் பலவாரியாக சொல்கிறதுஎன்று அவைகளை படிக்கும் பொழுது புரிந்துகொண்டேன் ,ஆனால் சிவ நாடியில் அகத்தியர் அவர்கள்உரைக்கும் பொழுது தச கர்ம ஜீவனம் என்றுஉரைக்கிறார் ,அதாவது ஒரு மனிதனுக்கு 10 விதமான கர்மபலனும் 10 விதமான வருமானமும் உண்டுஎன்கிறார் ..தச கர்ம தர்மமும் அதனால் ஏற்படும்பலன்களும் உண்டு என்று சோதிடத்தைசொல்கிறார் .நான் இந்த கர்மத்தை ஆய்வு செய்த பொழுதுபலரின் வருமான முறையும் அவர்களின்உணவு பழக்கத்தையும் கவனித்து பார்த்துஆராய்ந்து பிறகுஇங்கு பதிகிறேன் ..இங்கே சில உதாரணத்தை நான் பதிகிறேன் …சிலர் ஒரே இடத்தில அமர்ந்து ,சிலர் சுற்றி திரிந்து ,சிலர் பலரின் பணத்தை பொருளை பெற்று ,சிலர் ஆயுதம் ஏந்தி ,சிலர் சேவை செய்வதுமுலம் ,சிலர் மருத்துவம் ,சோதிடம் என்று அறிவைகொண்டு ,இப்படி உழைத்து வருமானத்தை பெறுகிறார்கள்..இப்படி வருமானத்தை, பதவியை நமக்குதருவது நம்முடைய முன் ஜென்மதர்ம பலன் ..என் நண்பர்களில் ஒரு நண்பர் வீட்டிற்க்கு நான்ஒரு முறை சென்ற பொழுது அவர்கள் வீட்டில்உணவு அருந்தி கொண்டு இருந்தார்கள் ,என்னை கண்டவுடன் அவனின் அம்மா எனக்குஒரு இலையை போட்டு தங்களுடன் சேர்ந்துஉணவு உன்ன சொன்னார்கள் ,வேற வழி இல்லாமல் நான் அமர்ந்து விட்டேன்,என் நண்பன் எனக்கு உணவுகளை பரிமாறஉணவை எடுத்து வந்து எனக்கு சிறிது அளவுஅளித்து விட்டு போதுமா ?போதுமா ?என்றுசிறிது சிறிதாக பரிமாறினான் ,இதை கவனித்த அவன் அம்மா அவர்கள்அவனிடம் இருந்து உணவு பாத்திரத்தைவாங்கி அவர்கள் திருப்தியாக எனக்குஅளித்தார்கள் ..இங்கே அந்த நண்பரின் மனம் பிறர்க்கு உணவுஅளிக்க வருந்துவது எனக்கு புரிந்தது ..இவருக்கு உத்தியோகமும் வருமானமும் இது வரைஇல்லை ,இருந்த சொத்தும் கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து வருகிறது ,இவரை போல மற்ற ஒரு நண்பர் அவர்வீட்டிற்க்கு யார் விருந்தினர் வந்தாலும்அவர்களுக்கு உணவு அளித்த பின்பு அவர்கள்சென்ற பின்பு நண்பர் அவர்களை பற்றிதரக்குறைவாக அவர்கள் உண்ட உணவைபற்றியும் எவ்வுளவு உணவு அவர்கள்அருந்தினார்கள் என்று கடிந்து பேசுவார்,இவருக்கும் சரியான தொழில் அமையவில்லை ,,,மற்ற ஒருவர் சிறந்த உணவகம் நடத்தும் நபர்,இவருக்கு குழந்தை இல்லை ,இவர்உணவகத்திற்கு சென்றால் தன்னுடையபணியாளை திட்டி கொண்டு அவர்களைகண்காணித்து கொண்டே இருப்பார் ,இதை கவனித்த நான் இவரின் நெருங்கியநண்பரிடம் கேட்ட பொழுதுஅவர் சொன்னார் நீரை தவிர எந்த உணவுவகைகளையும் யாரும் உன்ன கூடாது என்றுதிட்டி கொண்டே இருப்பார் என்றார் ,மேலும்பசி என்று எந்த பிச்சை காரரும் வந்தால்அவர்களை திட்டி விரட்டுவார் என்றார் ..இதை போல உணவகம் நடத்தும் பலநபர்களுக்கு வம்ச விருத்தி அல்லது வாரிசுஇல்லாமல் போவதை கண்டேன் …என்னால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று ..என் நண்பருடன் சேர்ந்து ஒரு முறை சமயபுரம்சென்ற தரிசனம் செய்து விட்டு வாசலில்நின்று கண்கள் பனிக்க அம்பாளை வழிபட்டபொழுது மஞ்சள் புடவை உடுத்திய ஒரு தாய்எங்கள் அருகில் நின்ற வேறு ஒரு நபரைபார்த்து “உன்னை அந்த காமாட்சி தேவிமன்னிக்கலாம் ஆனால் நீ விதைத்தவினைக்கு இந்த மகமாயி மன்னிக்க மாட்டாள்,உன் தர்மம் இங்கு பலன் தராது என்றுகூறிவிட்டு எங்களை பார்த்து பசிக்கிறதுஎன்றார்கள் .நான் பணம் எடுத்து தருவதற்கு முன் நண்பர்50 ருபாய் அவரிடம் தந்தார் ,அதை அவர்கள் பெறாமல் அவரிடம் “உன் பாவகணக்கு தீர வில்லை சோறுபோட்டு அதைதீர்த்து விட அன்ன தர்மம் செய் என்றதும்நண்பரின் முகம் வாடியது நான் அவரிடம் இருந்த பணத்தை வாங்கி என்பணத்துடன் அவர்களிடம் சேர்த்து தந்தேன்பெற்று கொண்டு சென்று விட்டார்கள் ..நான் நன்பரிடம் அந்த பெண்மணி சபித்த அந்தநபர் யார் என்று கேட்டேன் .நண்பர் சொன்னார் இவர் பிரபல துணி கடைநிறுவனர் ,இவர்கள் கடையில் வேலைக்குபெண்பிள்ளைகள் கிடையாது ,ஏன் அந்தபெண்மணி சபித்தார் என்று தெரிய வில்லைஎன்றார் .பிறகு தன்னை ஏன் அந்த பெண் இப்படிசொன்னார் என்று குழம்பி வந்தார் ..எனக்கு புரிந்தது அன்னதானம் பலன் அருள்நிலையில் இருப்பவர்களுக்கு தெரிகிறது .உணவு தர்மம் மனம் விரும்பி செய்தவர்களைசெய்பவர்களை கண்டேன்அவர்கள் பிள்ளைகள் நல்ல நிலையில்இருப்பதை பார்கிறேன் ,மேலும் அவர்கள் கர்மத்தை இந்த தானம்மாற்றி விடுகிறது என்று புரிந்து கொண்டேன்.உங்களுக்கு நல்ல தொழில் அமைய,வருமானம் அமைய சோதிடர்கள் சிலவகையான உணவு தானம்களை சொல்வதுஇந்த கணக்குகளை வைத்து தான் என்றுபுரிந்து கொள்ளல் வேண்டும் .நம்முடைய கர்மத்தை இப்படி நாமே அழித்துகொள்வது ஒரு வகைமற்ற ஒரு வகை உண்டு அது சித்தர்கள்மகான்கள் நம்மிடம் பிச்சையாக உணவுகளைகேட்டு வாங்கி அருந்துவதுஇதுவும் முன் ஜென்ம கணக்குகளில் தான்துவங்கும் …குறிப்பாக அன்னதானம் எப்படி நம் கர்மாவைஅழிக்கிறது என்றும் நம்மை காக்கிறது என்றும்நமக்கு எப்படி இவைகள் தொழில் அமைப்பைஏற்படுத்திதருகிறது என்று சோதிட கிரகம் முலமும்பார்த்து வருகிறோம் ….நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைப்படிதான் நமக்கு பிறவி ,வாழ்க்கை ,வருமானம்அமைகிறது என்று சோதிட நூல்கள் வாயிலாகஅகத்தியர் பெருமான் சொல்கிறார் ..நாம் செய்த நல்ல காரியம்களில் அன்னதானம்செய்ததின் பலனால் தான் நமக்கு நல்லவருமானத்தை தரும் தொழில் ,மிகுந்தஅலைச்சல் இல்லாததொழில் ,மரியாதையை அல்லது மதிப்பு மிக்கதொழில் அமைகிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் .ரமணர் அணில்களுக்கு உணவு கொடுத்துவிட்டு தான் உண்பார்கள் ,வள்ளிமலை ஸ்வாமிகள் ஒரு கிரிபிள்ளை கஞ்சிஉணவு கொடுத்து விட்டு தான் உண்பார்கள்..இது ஒரு உணவு தான அமைப்பு .இதை போல ஒரு சீடனுக்கு குரு அருள் செய்யவேண்டும் என்ற அமைப்புஅவன் ஜாதகத்தில் இருந்தால் அதன் படி அவர்அவனிடம் உணவு தனக்கு வேண்டும் என்றுகேட்டு உணவு அருந்துவார்.இப்படி தான் திருசெங்கட்டன்குடியில் வாழ்ந்தஒரு பக்தன் தினமும் ஒரு சிவனடியாருக்குஉணவு கொடுத்துவிட்டு தான் உண்பேன் என்றகொள்கையுடன் வாழ்ந்தான் ,அவனிடம் பெருமான் பிள்ளையின் தலை கரிசமைத்து உணவு கொடு என்று அவரைசோதித்து அவரை ஆட்கொண்டார் என்றவிவரம் நம் அறிந்ததே .வாடிய பயிரை கண்ட பொது எல்லாம்வருந்தினார்வள்ளலார் பசித்தவருக்கு எல்லாம் உணவுதாருங்கள் என்பார் .மகான்கள் சொல்கிறார்கள் உணவு தானம்அளித்தவர்களை அந்த நல்வினை 7தலைமுறைக்கு பின் தொடர்ந்து வரும் ,அவைகள் அவன் குலத்தை காத்து நிற்கும்என்கிறார்கள் .உங்கள் தர்ம பலன் உங்களுடையவம்சத்தினருக்கு கிடைக்க நீங்க உங்கள்சந்ததினருக்கு உணவு தானதின் மகிமையைஎடுத்து சொல்லி பழக்கபடுத்துவதுதான் மிக உயர்ந்த வழி.உணவுகளை தானம் தருபவரிடம் நாராயணன்ஆசிகொடுத்து ஆட்கொள்கிறார் ,தன்னுடைய பார்வைக்கு தெரியும் சிவபெருமானையும் காண்பிகிறார் என்பதுஞானிகள் வாக்கு ..யவர் கண்களுக்கும் தெரியாத சிவ பெருமான்நாராயணின் ஆசியால் நம்மை ஆட்கொள்வார்நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசுஎது ?பசியோடு இருக்கும் உயிர்களுக்குஉணவிடுவது மிகப்பெரிய பரிசு. அன்னதானம்.ஏழை பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன்,முதலாளி, தொழிலாளி என்று எந்த பாரபட்சம்பாராமல் உணவிடுவது மிகப் பெரியபரிசாகும். அந்த பசி நீங்கியவுடன் அந்தபரிசின் நோக்கம் நிறைவு பெற்று விடுகிறது.இதே போல் தான் ஒருவனுக்கு காலத்தினால்செய்த உதவி இந்த உலகத்தை விட மிகப்பெரியது என்கிறார் வள்ளுவர் பெருமான்.எல்லா பொருளுதவிகளும் அதன் குறிக்கோளைஎட்டியவுடன் நிறைவடைந்து விடுகிறது.இவை யாவும் இந்த உலகின் வாழ்வியலுக்குதேவையானவற்றையே மையமாக வைத்துநிற்கிறது.ஆனால், பல பிறவிகளில் பாவம் செய்துமீண்டும் மீண்டும் பிறந்து உழன்றுகொண்டிருக்கும் ஒரு ஆன்மாவிற்கு சிவத்தைபற்றி அறிவித்து, சிவஞானத்தைஅறியப்படுத்துவது என்பது அந்தஆன்மாவிற்கு இறைவன் திருவடி நிழலைஅடைய செய்வதற்கு வழிகாட்டுவதாகும். நாம்  நம்மால்இயன்ற நல்ல செய்திகளை பிறருக்கும்சொல்வோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதுநம்மால் இயன்ற அத்தனை நல்ல செயல்களைசெய்வோம்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்