குடியாத்தம் எம்.எல் ஏ காலமானார் திமுகவின்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ( தனி ) தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காத்தவராயன். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தனது சகோதரரின் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவருக்கு இதயநோய் இருந்து வேறு காரணங்களால் குணமாகாமல் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ காத்தவராயன் உடல் நலனை விசாரித்துவிட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருந்து வந்த நிலையில் மருத்துவ குழு, எம்.எல்.ஏவின் உறவினரை அழைத்து தகவல் கூறியுள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியாகியது அவரது சகோதரர் குடும்பம்.
இந்த தகவல் உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்றது. அவர் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டுவிட்டு வந்துள்ளார். இந்த தகவல் வேலூர் மாவட்ட கட்சியினருக்கு தெரியவந்து திமுகவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பிப்ரவரி 27ந்தேதி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போது எம்.எல்.ஏ வாக உள்ள கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததுள்ள நிலையில் மற்றொரு திமுக எம்.எல்.ஏ இன்று காலமாகி இருப்பது திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.இப்போது தி மு க வின் பலம் 98 ஆக உள்ளது.தமிழக சட்டப்பேரவையிலுள்ள உறுப்பினர்களின் விவரம்:
அதிமுக - 124
திமுக - 98
காங்கிரஸ் - 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
அ ம மு க(சுயே) தினகரன் -1
சபாநாயகர் -1
காலியிடம் - 2.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்