சென்னையில்
கோயம்பேடு சந்தையை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் ஆலோசித்து பதிலளிக்க வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்:
நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவிப்பு. கோயம்பேடு சந்தையை மூன்றாகப் பிரித்து புறநகரில் அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் பிரித்து அமைப்பது குறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு சந்தையை புறநகரில் பிரித்து அமைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என கார்த்திகேயன் தெரிவித்தார்.
கோயம்பேடு சந்தையில் ஏற்கெனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதாகவும், மேலும் 4 பேருக்கு உறுதியானால் சந்தையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வியாபாரிகள் சங்கத்தினர், கோயம்பேடு சந்தையை அரசு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், வியாபாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு சங்க பிரதிநிதிகளை அறிவுறுத்தியதோடு மீண்டும் நாளை காலை ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்