இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா வைரசால் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்