மதுரையில் இயங்கும்
தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நலச் சங்கம் சார்பில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கோரிக்கை.
மத்திய, மாநில அரசு மற்றும் விமான துறை அமைச்சகத்திற்கு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது,
விமானங்கள் இயக்கப்படாததால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விமான நிறுவனங்கள் தங்களுடைய முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்த பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.
இதனால் விமான பயணிகள் தங்களுடைய ரத்து செய்த தொகையை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் தற்பொழுது புதிதாக ஒரு கொள்கையை ஏற்படுத்தி இருப்பது பயணிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரெடிட் ஷெல் ஆஃப்ஷன் எனும் புதிய கொள்கையின் படி கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் முன்பதிவு செய்த பணம் திரும்ப தரப்பட மாட்டாது.
யார் பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்ய பட்டதோ அவர் அந்த தடத்தில் அவர் மட்டுமே ஒரு வருடத்திற்குள் பயணம் செய்ய முடியும் 28.02.2021 க்குள்.
குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் செய்ய முடியாது.
தேதி மாற்றத்தின் போது Re-Schedule ஏற்படும் அன்றைய நிலவரப்படி ஏற்படும் வித்தியாச தொகையைச் செலுத்த வேண்டும். என்பது தான் நிபந்தனையாக இருக்க
இதற்கான தீர்வாக வைக்கும் கோரிக்கை
உடனடியாக எவ்வித காரணமும் இன்றி முன்பதிவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும்.
இல்லை எனில் அதற்குரிய ரத்து செய்த தொகையை எளிதாக பயன்படுத்தும் வகையில் PROMO CODE (OR) COUPAN ஆக வழங்கி அதே தொகையின் மதிப்பில் வேறு பயனாருக்கு திரும்ப பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் இதற்கு எவ்வித கால நிர்ணயமும் செய்ய கூடாது.
PROMO CODE OR COUPAN மூலமாக போட கூடிய டிக்கெட்களுக்கு வேறு விலை நிர்ணயம் செய்யக் கூடாது.
பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட Ctedit Shell Option முறையை உடனே நிறுத்த வேண்டும்.
இந்த புதிய கொள்கையை ரத்து செய்ய மத்திய அரசும் மற்றும் விமான அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தருவது இடிக்கெட் ஏஜெண்ட்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக ஆகிவிடும். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
இந்தப் புதிய கொள்கையின் படி உதாரணமாக டெல்லியில் இருந்து பத்து பேர் கொண்ட குடும்பம் திருப்பதிக்கு விமான டிக்கெட் எடுத்துள்ளது என்று வைத்து கொள்வோம் இந்த டிக்கெட்டை ஒரு வருடத்திற்குள் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று விமான நிறுவனம் சொல்கிறது நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது உதாரணமாக அந்த குடும்பத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அவரவர் மதத்தின் அடிப்படையில் மலை கோவில்களுக்கோ அல்லது கோவில்களுக்கே ஒரு வருடத்திற்கு செல்ல கூடாது என்பது விதி.
அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த விமான கட்டணம் யாருக்கு லாபம். பொது மக்களுக்கா இல்லை விமான நிறுவனத்திற்கா என்ற வினா உண்டு.
விமான நிறுவனங்கள் தங்களுடைய நஷ்டத்தை தங்களுடைய நிதி மற்றும் லாபத்தில் இருந்து ஈடுகட்டணுமே தவிர பொதுமக்களின் தலையில் கை வைக்க கூடாது.
தயவு செய்து இந்த கொள்கையை உடனே ரத்து செய்து விட்டு பயணியருக்கான தொகையை திரும்ப கொடுக்க மத்திய அரசு மற்றும் விமான அமைச்சகம் ஆவண செய்ய வேண்டுமென
தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நல சங்கம் இதனை வலியுறுத்துகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்