முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கத்துக்குட்டி பட விளம்பரம் ஒரு கத்துக்குட்டித்தனமான பேச்சாகி பின் விவாதமாகியது  

கத்துக்குட்டி பட விளம்பரம் ஒரு கத்துக்குட்டித்தனமான பேச்சு        நடிகை ஜேதிகா பேச்சு பல விவாதமானது மும்பையின்             நந்திதா மொராஜி (எ) நர்மதா சாதனாவாகவோ இல்லாமல்   நக்மா என்ற பெயரில் அறிமுக மாகி தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாக 1993 -1997 க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்பட முக்கிய கதாநாயகியாக இருந்தவர் இவரது தங்கை ஜோதிகாவும் நடிகை இருவரின் தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவர்களா வார்கள். இதில் நக்மா காங்கிரஸ் கட்சியில் ஒரு பலம் வாய்ந்த நபர் ஆதரவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல முன்னணியில் இருந்த நபர்களை பின் தள்ளிய கதை அரசியலில் பெரிது அந்தக் கதை தொடர்ச்சியாக கொங்குப் பகுதியில் கொடுமுடியைச் சேர்ந்த  நடிகர் சிவக்குமார் வீட்டிலும் தன் தங்கையை செல்வாக்கு காரணமாக நடிகர் சூரியாவுக்கும் ஒருவழியாகத் திருமணம் செய்தது பழைய செய்தி அதில் பலர் அறிந்த அறியாத நிகழ்வுகள் உண்டு என்பது பலரது கருத்தாகும்.இந்த நிலையில் தஞ்சாவூரின் கதை சார்ந்து  வெளிவர உள்ள ஒரு படவிழாவில் நடிகை ஜோதிகா பேசியது சமூக வைரலாகி பின் விவாதங்கள் வளரும் நிலை. அப்படி என்ன பேசினார் என்பதைப் பார்த்தால், ''தஞ்சாவூரில் அரசு மருத்துவ மனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.அந்த மருத்துவமனையை மிக மேசமாகப் பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது.
எல்லோரும் கோயில் உண்டியல்ல காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவ மனயைப் பராமரிக்கவும் உதவுங்க'' எனத் தனியார் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அது பல விவாதங்களைக் கிளபியிருக் கிறது. படத்தின் இயக்குநர் சரவணனும், பேசிய ஜோதிகா வுக்கு ஆதரவாக  விளக்கம் கொடுத்துள்ளார்.இதன் பின்பு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று  ஆய்வு செய்தார்.''கொரானா பிரச்னைக்கே மருத்துவமனை  வராத ஆட்சியர் இப்போது வந்து ஆய்வு செய்கிறார் அது  ஜோதிகா பேசியதன் விளைவுதான் எனச் ஆதரவாகச் சிலரும் இதுஜோதிகா தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்தை மனதில் வைத்து இப்படிப் பேசியதாக எதிர்ப்பாகச் சிலரும் பேசக் காரணம். ஜோதிகாவும் சூரியாவும் திருமணத்திற்குப் பின் இந்துவாக வா அல்லது இஸ்லாமியராகவா என்ற காரணமாகவே இது விவாதாமாக மாறியது. இவர்கள் நடத்திவரும் அகரம் அறக்கட்டளையின் மூலம் மருத்துவமோ, பொறியியலோ படித்து, வெற்றிகண்ட மாணவர் களை ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி கௌரவிக்கிறார். சமீபத்தில் இதுபோன்ற ஒரு மேடையில், தன்னால் படித்து முடித்த மாணவியின் பேச்சைக் கேட்டு, மேடையில் கண்கலங்கி நெகிழ்ந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடந்த அகரம் அறக்கட்டளையை நடத்த சூர்யாவுக்கு,  தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தி, ஓய்வுபெற்ற சிவகங்கை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் மகன் ராஜசேகரன் உறுதுணையாக இருக்க,அறம் சார்ந்த நோக்கத்தில் அகரம் பவுண்டேஷன் இயங்க. தற்போது  2 டி எண்டெர்டெய்ன் மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல படங்களை சூர்யா தயாரித்து வருகிறார். குறிப்பாக 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் உள்ளிட்ட ஹீரோ யினுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில், தனது மனைவி ஜோதிகாவை ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க வைத்திருக் கிறார். அதேபோல சமீபத்தில்  சசிகுமார், ஜோதிகா மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் "கத்துக்குட்டி'  இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கி
பத்திரிகையாளராக இருந்து இயக்குனரான இரா.சரவணன் தஞ்சாவூர்க்காரர். இந்தப் படமும் தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்துப் பேசுவதால், மருத்துவ மனைக்காக செட் எதுவும் அமைக்காமல், இயல்பாக இருக்கும்படி தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை யில்  அனுமதி பெற்று படப்பிடிப்பு தொடங்கியது. இது அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அதை நம்பியிருக்கும் மக்கள் சந்திக்கும் கொடுமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஜோதிகாவுக்கு ஏற்படுத்திய தாகவும் இதைத் தான் JFW.விருது வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ""நான் ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந் தேன். அப்போது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிர கதீஸ்வரர் கோவிலைப் பார்க்காமல் போகாதீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் அது என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே, அந்தக் கோவிலைப் பார்த்திருக் கிறேன். உதயப் பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல, அவ்வ ளவு அழகான கோவில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் இருந்தது. தஞ்சை கோவிலுக்கு நேரெதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டி ருந்தது. நான் பார்த்ததை எல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு. இதன்பிறகு, நான் அந்தக் கோவிலுக்கு செல்ல எனக்குத் தோன்றவில்லை.
இதை வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். கோவில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பராமரிக்கிறீர்கள். உண்டியலில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். தயவுசெய்து அதே பணத்தை பள்ளிக்கூடங்களுக்காகவும், மருத்துவ மனைகளுக்காகவும் கொடுத்து உதவுங்கள். கோவில்களைப் போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை'' என்று  வேண்டுகோள் விடுத்தார்.
ஜோதிகாவின் இந்தப் பேச்சு வைரலாகிய நிலையில்  ஜோதிகா இந்துக் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டார். அவரால் ஒரு தேவாலயத்தையோ, மசூதியையோ குறித்து இப்படியொரு கருத்தைச் சொல்ல முடியுமா எனக் கேள்வி வந்த பின்பு  “கோவில்களைக் குறித்து எந்த இடத்திலும் நான் குறைத்துப் பேசவில்லை. கோவில்களுக் குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை மருத்துவமனை களுக்கும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்'' என்று ஜோதிகாவுக்காக இயக்குனர் சரவணன் பதில் தந்திருக்கிறார். இந்தநிலை மதம் சார்ந்த விமர்சனம் வரக் காரணம் 
தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் சொத்துக்கள் 
விவசாய நிலங்கள் - 4 ,78,462 ஏக்கர்,கட்டிடங்கள் - 22600 
மனைகள் - 33627,மனைகளின் விஸ்தீரணம் 29 கோடி சதுர அடி .....
( அறநிலையத் துறையின் தகவல் படி ) சொத்துக்களின் சந்தை மதிப்பு 70000 கோடிகள்
இவற்றிலிருந்து அறநிலையத் துறைக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? 
வெறும் 64 கோடி .அதாவது ஆண்டிற்கு 7000 கோடிகள் வருமானம் மட்டுமே வரக் கூடிய சொத்துக்களிலிருந்து வெறும் 64 கோடி தான் வருகிறது ...
உண்டியலில் வரும் காசு ஒரு பக்கம் இருக்கட்டும் , நியாயமா கோவிலுக்கு வர வேண்டிய சந்தை மதிப்பு வரவுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒழுங்கா வந்தாலே தமிழகம் முழுவதும் எல்லா மதத்தினருக்கும் இலவச  மருத்துவ சேவைக்கு அதை வழங்கிட முடியும் முடிந்தால் அபகரிக்கப்பட்டுள்ள , ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க  முயற்சி தேவையானது. இதை பலரும் எதிர்பார்க்கும் நிலையில், நடிகை ஜோதிகா பேசியது விவாதமாகியது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...