மளிகைக் கடைகளுக்கு வாரம் மூன்று நாள் நிபந்தனை விதித்த மாவட்ட நிர்வாகம் வங்கியைக் கண்டு கொள்ளாமல் விட்டது தான் ஜனத்திரள் கூடியதற்கான காரணம்.மக்களின் தேவையை அரசாங்கம் நிறைவேற்ற வில்லை எனில் மக்கள் தாங்களின் தேவை நிறைவேற்ற வெளியே வரும் நிலை ஏற்படுகிறது.புதுக்கோட்டை யில் மட்டுமே இந்த நிலை அல்ல மும்பையில் ரயில் பயணம் செய்ய சிறப்பு ரயில் என வதந்தி வேகமாகப் பரவியதும் மக்கள் குவிந்ததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது .அடையாளம் காண முடியாமல் அநியாயமாகச் சாவுகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதுபோல் தான் புதுக்கோட்டையில் சமூகப் பொது இடைவெளியை மறந்து வங்கி களில் குவிந்த கூட்டம்.
கரோனாவை விரட்ட முழு ஊரடங்கு தேவை என அரசாங்கம் அறிவித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் அத்யாவசியப் பொருட்கள் வாங்கும் இடங்களிலும் கூட்டமாகக் கூடக் கூடாது பொது இடைவெளி வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
வங்கிக் கடன் தவணை மூன்று மாதங்களுக்குப் பிறகு செலுத்தவும் சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சகமும் அரசும் உத்தரவுகளில் சொன்னாலும் அனைத்து வங்கிகளும் கடன் தவணைத் தொகையைப் பிடித்தம் செய்து கொண்டு விட்டனர் அரசு உத்தரவுகள் இங்கு பலன் தரவில்லை மற்றும் தனியார் வங்கிகளும் அப்படியே. அரசு உத்தரவும் வங்கிகளுக்கு ஏனோ எட்டவில்லையோ அல்லது அந்த உத்தரவு பெயரளவில் செயல்பாடில்லாமல் போனதால் தான் வங்கிகளில் விவசாய நகைக்கடன் வைத்துள்ளவர்களின் தேதிகள் முடிவடையும் நிலையில் உடனடியாக வங்கிக்கு வந்து வட்டியைக் கட்டி மறுபடியும் கடன் தேதியைப் புதுப்பித்துக் கொள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களை விரட்டி அழைத்துக் கொண்டே யிருந்தனர். அதனால் ஏப்ரல் 13 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூகப் பொது இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இப்படி தினசரி வங்கிகளில் கூட்டம் கூட்டினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை பரவியதை விட இனி கொரானா பரவல் கூடி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. அத்தியாவசி யமான கடைகளுக்கு நிபந்தனை விதித்த மாவட்ட நிர்வாகம் வங்கிகளைக் கண்டுகொள்ளாத நிலை. டிரேன் மூலம் வானில் கிருமி நாசினி தெளித்த அறிவாளிகள் செயல் போலவே என பலரும் விவாதிகும் நிலை காண்கிறோம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்