முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அறிக்கை

தி மு க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அறிக்கை ஊரடங்கில் தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் நிவாரணப் பொருட்கள், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, “மக்கள் தி மு க விடம் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவரும் இவ்வேளையில், 1 லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி அவர்களை செயல்பட வைக்கப்போகிறோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் சென்று மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மே 13 ஆம் தேதி  மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்தனர். அப்போது, தி.மு.க எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்யும் விதமாக நடந்துகொண்டதாகவும் இதனால் தி.மு.க எம்.பி.க்கள் அதிருப்தியடைந்ததாகவும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தரமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டினார். தலைமைச் செயலாளரின் இந்த செயலுக்கு பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்தோம்.
அதாவது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” திட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் கொரானோ நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்துள்ளனர். இதனை அரசிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தித்தோம்.
நாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக்குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக் கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு “ஒன்றிணைவோம் வா” செயல் திட்டம் பற்றி விளக்கினோம்.
இதன் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்த விவரத்தை தெரிவித்தோம். அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
ஆனால், தலைமை செயலாளர் சண்முகம் உரிய கவனம் செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மேலும் கலாநிதி வீராசாமி வேண்டுகோளின் படி தொலைக்காட்சியின் இரைச்சல் ஒலியை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்துவிட்டார்.
இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம் பற்றி கேட்டோம். அதற்கு எப்போது நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சொல்ல முடியாது என்றார்.
மேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக "This is the problem with you people" என்று பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தயவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு “என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க்க போகிறீர்களா? அவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று இறுமாப்புடன் கூறினார்.
எங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதோடு வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தனது செயலுக்கு உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்னையை நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு எடுத்துச் சென்று தலைமை செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக, ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை போன்று அமைந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஜனநாயக கட்டமைப்பை கண்ணியம் காத்திடும் முறையில் பணியாற்றினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்பதன் சுருக்கம்  டி.ஆர்.பாலு  தஞ்சை மாவட்டதில் பலம் பொருந்தியவர் 1980 ல் சென்னை மாவட்டத் திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர் ஒரு தனி செல்வாக்குடன் கட்சியில் உள்ளவர்.திமுகவை சென்னையில் பலம் பொருந்திய அமைப்பாக மாற்றியவராவார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...