முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குனியமுத்தூரில் ஏழை மக்கள் பசிக்குச் சோறிடும் ஆட்டோ

குனியமுத்தூரில் ஐந்து பேரோடு வறுமையில் பிறந்த சிறுவனின் அப்பா குடிகாரர். அம்மாதான் கூலி வேலை  ஐந்து குழந்தைகள் பல நாள் உணவு  இல்லாமல் பச்சைத் தண்ணீர் குடித்துக் குழந்தைகள் படுத்தார்கள். அதில்  ஒருவனாக வளர்ந்த அந்த ராஜா சேது முரளி பசியின் கொடுமையை நன்றா கவே அறிந்தவர்  அனுபவித்தவர். 
`பசியாற சோறு!’ இப்படி ஒரு பெயரை தனது செயலுக்கு சூட்டிக்கொண்டார் ராஜா சேது முரளி.ஆதரவற்றோருக்காகப் பம்பரமாகச் சுழல ஆரம்பித்த இந்த கோயமுத்தூர் ஆட்டோ(தானி)க் காரர்  முதலில் கல்யாண வீடுகளி லும், விசேஷ வீடுகளிலும் மீதமாகும் உணவை வீணாக விடாமல் சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு வெளியூரி லிருந்து வந்து சிகிச்சைக்குத் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு வழங்க ஆரம்பித்தார். 
'பசியாற சோறு’ என்கிற பெயரில் விநியோகித்து வந்த ராஜாசேது முரளியின் சேவை கோவை மக்களுக்குப் பிடித்துப்போய்விட, அவரிடம் வீணாகும் உணவுகளை மட்டுமல்லாமல் பணமாகவும், பொருளாகவும் கொடுத்து ஏழைகளுக்கு உதவச் சொல்ல ஆரம்பித்தார்கள். யார் யார்.. எவ்வளவு கொடுத்தார்கள்? அதில் என்ன பொருள் வாங்கப்பட்டுள் ளது, அவை யாருக்குக் கொடுக்கப் படுகிறது என்கிற விவரங்களை யெல்லாம் தானே பேசி வீடியோ வாக எடுத்துச் சம்பந்தப்பட்டவர் களுக்கு அனுப்பிவிட்டு சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது  வெளியிடுகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவது, வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது, ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது என ராஜா சேதுமுரளி யின் சேவை விரிவடைந்து கொண்டே இருக்கிறது.  
நடுவில் திருமணம் நடந்தது. குடும்பத்தைக் கவனிக்காமல் சமூக சேவை செய்யும் கணவரிடம் கருத்துவேறுபாடு தோன்றவே திடீர் என மனைவி இவரை விட்டுப் பிரிந்து போய்விட்டார். கூடப் பிறந்தவர்களும் தனித்தனியாக வாழ்க்கைப் பாதையில் போக, வீட்டில் இவரும் அம்மாவும் தனித்து விடப்பட 
"மிச்ச வாழ்க்கையைப் பிறருக்குப் பயனுள்ளதா மாத்தணும்னு நினைச்சேன். கோவை அரசு மருத்துவமனையில் சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுவங்க ளைப் பார்க்கும் போது மனசு உருக கல்யாண வீடுகள்லயும், விசேஷ வீடுகள்லயும் எவ்வளவோ உணவு மிச்சமாகுது அதை வீண் பண்ணா ம இவங்களுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கும் லன்னு தோணுச்சு. என்கிட்ட ஆட்டோவும் இருக்கிறதால அது ரொம்ப சுலபமாக இருந்துச்சு. நான் போய்கேட்டா யாரும் இல்லை’ன்னு சொல்லாம மீதமாகுற உணவுகளைக் கொடுத்தாங்க... அதுல ஆரம்பிச்ச பயணம்தான் இந்தப் பசியாற சோறு. ஏழைகளின் வயிறு நிறைஞ்சா.என் மனசு நிறையும்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜா சேது முரளி.
'நான் கடவுள்' உட்பட பத்து திரைப்படங்களிலும் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ள இவர்
இப்போதய ஊரடங்கு நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறா ரென இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச பேசும் போது கூட பல ஏழைக் குடும்பங் களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறார். 25 கிலோ 10 மூட்டை அரிசியை ஆட்டோவில் ஏற்றி வந்து பிரித்துப் பல வறிய மக்களுக்கு கொடுத்துக் கொண்டி ருந்தவர் இதைவிட முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டிருக் கிறேன் என்ற தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நடிப்பில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர் ஆதலால் இப்போது கொரானா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கோவை மாநகரில் கிராமம் கிராமமாகச் சென்று வேடம் தரித்து ஊரடங்கின் அவசியத்தையும் சமூக விலகலை யும் வலியுறுத்துவதோடு தேவை யற்று யாரும் ஊர் சுற்றாதீர்கள் என்பதை பிரச்சாரம்  செய்கிறார்.
சமூகத்தில் இப்படித்தான் சிலபேர். தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். நாம் கவனிக்க மறந்தாலும் காலம் இவர்களைக் கவனித்து ஆவணப்படுத்தத் தவறுவதில்லை.ஆம். 'நம்ம ஊரு கோவை' என்ற அமைப்பு "கோவையின் கெத்து" என 12 பேரை பெருமைப்படுத்தியது. அவர்களில் ஒருவர் நம்ம ராஜா சேது முரளி. இவரோடு நீங்களும் பேசி உதவ: 93809 05800 நாம் தரும் செய்தி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...