செய்தியாளர்: கீரவாணி அழகு இளையராஜா
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் வேகுப்பட்டி ஊராட்சியில் ஜமாத் கமிட்டியினர் சார்பில் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. பாண்டிமான் கோவில் பகுதியில் முதியோர் களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு 66 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருட்களை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன்,மற்றும் உதவி ஆய்வாளர் பிரபாகரனும் பயனாளிகளுக்கு வழங்கினர். உடன் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுணன், துணைத் தலைவர் முத்து, ஊராட்சி செயலாளர் சங்கர் இஸ்லாமிய உள்ளூர் ஜமாத் கமிட்டியினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், அழகி, தேன்மொழி, செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் பொன்னமராவதி வட்டம் சுந்தரம்(சுந்தரச்சோழபுரம்) ஊராட்சியில் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி பழனிச் சாமி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. ஊராட்சிப் பகுதி மக்கள் 240 நபர் களுக்கு தலா 5 கிலோ அரிசியும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வேலு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆலவயல் தனலெட்சுமி அழகப்பன் அம்பலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மீனாட்சி மணிகண்டன், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தாஸ், மேலத்தானியம் திலகவதி முருகேசன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரேகா, கிராம நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கிய பொருட்களை சமூக இடைவெளியுடன் மக்கள் பெற்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்