மே 8 ம் நாள் உலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை தினம்.
உலக நாடுகளிடையே பணியாற்றிக் கொண்டுள்ள ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு செஞ்சிலுவை சங்கமாகும். அமைப்பை உருவாக்கிய ஹென்றி டுனான்ட்டின் அடிப்படை நோக்கமே “பக்கச்சார்பற்ற சேவையை இன மத பேதமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் என்பதே. இன்று வரை செஞ்சிலுவைச்சங்கம் தனது சேவையை அது போலவே செவ்வனே ஆற்றி வருகிறது.
சுவிஸ்சர்லாந்தைச் சேர்ந்த ஹென்றி டுனான்ட் எனும் பிரபல வர்த்தகர், 1859 ஆம் ஆண்டு பிரஞ்சு சக்கரவர்த்தியான 3 ஆம் நெப்போலியனுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சை மேற்கொள்வதற்காக சென்றார்.
எனினும், அப்போது ஃப்ரான்ஸிற்கும் ஒஸ்ரியாவிற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. போரில் காயமுற்ற இராணுவ வீரர்களின் துன்பத்தை நேரில் பார்வையிட்ட ஹென்றி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.
குறிப்பாக இது போல போரினால் காயமுற்று உயிருக்குப போராடி வரும் ராணுவ வீரர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை உடனடி யாகச் செய்யும் நோக்குடன் உலகளாவிய ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டுமென முடிவு செய்தார். அந்த முயற்சியின் பயனாய் உருவானதுதான் செஞ்சிலுவை சங்கம்.சில இஸ்லாமிய நாடுகள் சிலுவை என்ற பெயரை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்ததால் அந்த நாடுகளில் மட்டும் இவ்வமைப்பு செம்பிறை அமைப்பு என அழைக்கப் படுகிறது.1983 ஆம் ஆண்டு 9 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று 194 நாடுகளை அங்கத்துவர் களாகக் கொண்டு உலகம் முழுவதும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தனது அடிப்படை நோக்கத்தை விட்டு விலகாமல் சேவையாற்றிவருகிறது.
சுமார் 97 மில்லியன் தன்னார் வலர்கள் இவ் அமைப்புடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். இன்று செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தமிழக ஆளுநர் வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் செய்தி வெளியிட் டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்