முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு / உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம். மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சி குளோரோ குயின்,  செயல்திறன் மிக்க மருந்துப் பொருள்கள் மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்,  மருந்தியல் துறை, வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய, அமைச்சகங்களுக்கு இடையிலான உயரதிகாரமளிக்கப்பட்ட குழு  03.06.2020 அன்று நடத்திய ஆலோசனையின் அடிப்படையில்,  ஹைட்ராக்சி குளோரா குயின் (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்)  மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு, மருந்தியல் துறை பரிந்துரைத்திருந்தது.  அதன் பேரில்,  வெளி வர்த்தகத்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தடை நீக்கம் தொடர்பான முறையான அறிவிப்பை  நேற்று (18.06.2020)  வெளியிட்டுள்ளது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது,   மார்ச் – மே, 2020 காலகட்டத்தில் (கோவிட்-19 காலகட்டம்) ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2-லிருந்து 12-ஆக  அதிகரிக்கப்பட்டதுடன், நாட்டின் மொத்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தித் திறனும்,  மும்மடங்காக, அதாவது,  ஒரு மாதத்திற்கு  10கோடி ( சுமார்) மாத்திரைகளிலிருந்து 30 கோடி (சுமார்)  மாத்திரைகளாக உயர்த்தப்பட்டது.    தற்போது, இந்தியா, உள்நாட்டுத் தேவையை விட உபரியாக ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளது.  கோவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனத்திற்கு, 200 மில்லி கிராம் சக்திகொண்ட 12.22 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கியிருப்பதன் மூலம்,  மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்ப நலத்துறையின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.   தற்போது,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடம், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய தேவையான அளவை விட உபரியாகவே,  ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  இருப்பு உள்ளது.   இது தவிர,  200 மில்லி கிராம் சக்தி கொண்ட 7.58கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  மாநில அரசுகள்,  பிற நிறுவனங்கள் மற்றும்  மத்திய அரசின் மருந்துப்பொருள் தயாரிப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு / மக்கள் மருந்தகங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.   மேலும்,  உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, 200 மில்லி கிராம் திறன்கொண்ட 10.86 கோடி ஹைட் ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், உள்ளூர் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.  ஆக மொத்தம்,   30.66 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் (200மி.கி. திறன் கொண்டவவை) நாட்டின் உள்நாட்டு சந்தைத் தேவைக்கு வழங்கப்பட்டுள்ளன.   எனவே, உள்நாட்டு ஹைட்ராக்சி குளோரோ குயின்  மாத்திரைத் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.  அத்துடன்,  ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரிக்கும் பெரிய உற்பத்தியாளர்கள்,  2020 ஜுன் மாதத்தில் , உள்நாட்டுச் சந்தைக்கு 5 கோடி மாத்திரைகளை விநியோகிக்க உள்ளனர்.   இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியும், உள்நாட்டுச் சந்தையில், ஹைட்ராக்சி குளோரோ குயின் மற்றும் பிற மருந்துப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.    25 மற்றும் 26 மே,  2020-இல் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வில், கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மருந்துக் கடைகளில், 93.10 சதவீதம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் இருப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.  எனவே,   ஹைட்ராக்சி குளோரோ குயின்  (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்) மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனினும், அதே வேளையில்,  ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிரிவுகள் தவிர்த்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள்,   அவற்றின் மொத்த உற்பத்தியில் 20 சதவீத மாத்திரைகளை உள்ளூர் மருந்துக்கடைகள் மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு விநியோகிக்க வேண்டும்.   இது  2020 ஜுன் மாதத் தேவையைவிட அதிகம் ஆகும்.    மாநில அரசுகள்,  எச்.எல்.எல்.நிறுவனம் மற்றும் பிற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத்  தேவையான அளவை விட அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.  எனவே, அனைத்து உற்பத்தியாளர்களும்,  எச்.எல்.எல். நிறுவனம், மாநில அரசுகள் அல்லது அரசின் பிற நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மாத்திரைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.   இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு,  இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...