முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்வேறு துறை சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அமைச்சரவையில் முடிவு

பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. கால்நடை வளர்ப்புக்கான ரூ.15,000 கோடி கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குஷிநகர் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு – சுற்றுலாவை மேம்படுத்தி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். மியான்மரில் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின் மேம்பாட்டிற்குக் கூடுதல் முதலீடு – அண்டை நாடுகளுடனான எரிசக்திப் பிணைப்புகளை வலுப்படுத்தும் . பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில், 24 ஜுன், 2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த முடிவுகள்,  கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில்,  பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1. கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைப்பு பின்னணி : அண்மையில் அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்ட  ஊக்குவிப்புத் தொகுப்பின் தொடர்ச்சியாக,  ரூ.15,000கோடி மதிப்பில், கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கூட்டுறவுத்துறை முதலீடுகளுக்கு உதவும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான  பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அரசு, ஏற்கனவே அளித்துள்ளது.   எனினும், குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு உதவியளித்து, கால்நடை வளர்ப்புத் தொழிலில் மதிப்புக் கூட்டப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது.  இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,  பால்வளம், இறைச்சி பதப்படுத்துதல், கால்நடைத் தீவனத் தாவர வளர்ப்புக் கட்டமைப்பு முதலீட்டிற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.  10 சதவீத  விளிம்புநிலைப் பணப்பங்களிப்புடைய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்,  பிரிவு-8இல் உள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த பயனாளிகள்,  இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.   இவர்களுக்கு எஞ்சிய 90 சதவீத நிதி, வர்த்தக வங்கிகளால் கடனாக வழங்கப்படும்.  வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, மத்திய அரசு 4 சதவீத வட்டித் தள்ளுபடியும்,  எஞ்சிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டித் தள்ளுபடியும் அளிக்கும்.  கடன் பெற்றதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.  அதற்கடுத்த 6 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.   இது தவிர, நபார்டு வங்கிக் கட்டுப்பாட்டில்,  ரூ.750கோடி கடன் உத்தரவாத நிதியம் ஒன்றையும் மத்திய அரசு அமைக்கவுள்ளது.  இந்த நிதியத்திலிருந்து, குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு வரையிலான திட்டங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.   கடன்தாரர் பெறும் கடன் தொகையில் 25 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் கிடைக்கும்.  பலன்கள் : கால்நடை வளர்ப்புத் தொழிலில் தனியார் துறை முதலீடு செய்வதற்கான பெரும் வாய்ப்புகள் உள்ளன.  கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்,  தனியார் முதலீட்டாளர்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படுவதுடன்,  இந்தத் திட்டங்களுக்குத் தேவையான வெளிப்படையான முதலீட்டிற்குத் தேவையான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, முதலீட்டாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்கவும்/கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவும்.   பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள்,  தகுதிவாய்ந்த பயனாளிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.   இந்தியாவில் உற்பத்தியாகும் பால்வளப் பொருள்களின் இறுதி மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை விவசாயிகளுக்குக் கிடைப்பதோடு,  இத்துறையில் ஏற்படும் வளர்ச்சி, விவசாயிகளின் வருமானத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும்.  பால் விற்பனை மூலம்,  பால்பொருள்கள் சந்தையின் அளவு மற்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாவதும், கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் அளவு அதிகரிப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.   எனவே, கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.15,000 கோடி முதலீடு, தனியார் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அளவுக்கு இடுபொருள் முதலீடு செய்ய  விவசாயிகளை  ஊக்குவிப்பதாகவும் அமையும்.   இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், சுமார் 35லட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் உதவும்.  2.  குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு பின்னணி  :  கவுதம புத்தர் இயற்கை எய்திய பிறகு மகாபரி நிர்வானம் அடைந்த முக்கிய யாத்திரைத் தலம்  குஷிநகர்.  பவுத்த மதத்தினரின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலமாக கருதப்படும் இங்கு, உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர்.     குஷிநகரைச் சுற்றி ஸ்ரவாஸ்தி(238கி.மீ), கபிலவஸ்து(190கி.மீ.) மற்றும் லும்பினி (195கி.மீ.)  உள்ளிட்ட வேறு சில புத்தமதத் தலங்களும் உள்ளதால்,  புத்தமதத்தினர் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாகவும் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள புத்தமத யாத்திரைத் தலங்களில் முக்கியமானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...