முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்கி வட்டி விகிதம் குறைப்பின் பலன் பகிரந்தளிப்பு குறித்து நிதியமைச்சர்

வங்கி வட்டி விகிதம் குறைப்பின் பலன் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் சொத்து உருவாக்குநர்களின் முயற்சிகளை அரசு அங்கீகரிக்கிறது: PHD வர்த்தக சபையினருடன் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் நிதியமைச்சர் கருத்து. PHD தொழில் வர்த்தக சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இன்று காணொளி மூலம் கலந்துரையாடிய மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், நாட்டுக்கு சொத்துகளை உருவாக்குபவர்களின் முயற்சிகளை அரசு எப்போதுமே அங்கீகரித்து வருகிறது என்று கூறினார். இந்தப் பிரிவினர் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள், கிடைக்கிற ஆதார வளங்களை அதிகபட்ச அளவுக்குப் பயன்படுத்தி நாட்டில் சமூக - பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.             பிரதமர் எப்போதும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரித்து வருகிறார் என்றும், எப்போதும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார் என்றும் நிதியமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அரசு அறிவித்த நிவாரண நடவடிக்கைகள், அடிப்படை நிலை வரையில் சிறப்பாக சென்றடைகிறதா என்பதை வங்கிகளின் ஆலோசனையுடன் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பின் பலன், நுகர்வோருக்கு வட்டிக் குறைப்பாகச் சென்றடைவதைக் கண்காணிக்கிறோம் என்று மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.             கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாகத் தொழில் வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கு, தொழில் நிறுவனங்களுக்கு சொத்து ஜாமீன் ஏதுமின்றி இயல்பாகவே கடன் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதன் கீழ், கடன்கள் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.             தொழில் துறை எதிர்கொண்டுள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதிலும், தொழில் செய்யும் நிலைமையை எளிதாக்குவதிலும், குறைந்தபட்ச அரசு நிர்வாகத் தலையீடு மற்றும் அதிகபட்ச நிர்வாகம் என்பதில் எப்போதுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.             தொழில்துறையில் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமின்றி அரசு எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது, குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவிக் கரம் நீட்டி வருகிறது என்றும் அவர் கூறினார்.             அரசு அறிவித்துள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை தனது வரவேற்பு உரையில் பாராட்டிய PHD தொழில் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர். டி.கே. அகர்வால், ரூ.20.97 லட்சம் கோடி அளவிலான உத்வேகம் அளிக்கும் தொகுப்பு மிகவும் விரிவானதாக உள்ளது என்றும், உலகில் மற்ற நாடுகள் அறிவித்ததை விட இது அதிகமான அளவு என்றும், கணிசமான தொகையாக இருக்கிறது என்றும் கூறினார்.             இந்தத் தொகுப்புத் திட்டங்கள் நிதி சார்ந்த உத்வேகங்களாக மட்டுமின்றி, இந்தியாவை அடுத்த கட்ட உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்ப பாதையை மாற்றக் கூடிய சீர்திருத்தங்களைக் கொண்டதாக இருக்கிறது என்றும் டாக்டர். டி.கே. அகர்வால் கூறினார்.             சுற்றுலா, விமானப்போக்குவரத்து, பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் உள்ளிட்ட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு, கடனின் வகைப்பாட்டை பாதிக்காமல், கடன்களை ஒரு முறை மட்டும் மறு வரையறை செய்து கொடுக்க வேண்டிய தேவை இப்போது உள்ளது என்று அவர் கூறினார்.             தொழில் வர்த்தகத் துறையினருக்கு வங்கி அதிகாரிகள் எந்த அச்சமும் இல்லாமல் கடன்களுக்கு அனுமதி அளித்து, பட்டுவாடா செய்ய உதவும் வகையில், அவர்களின் மனதில் அச்சங்களைப் போக்குவதற்கான முறைப்படியான கடிதங்களை அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால் யோசனை தெரிவித்தார்.             சில நியாயமான காரணங்களால் சில தொழில் நிறுவனங்களின் கடன் வாரா கடன் பட்டியலில் சேருமானால், அதற்கு கிரிமினில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தவிர்க்கலாம் என்றும் டாக்டர் அகர்வால் கேட்டுக் கொண்டார்.             அரசின் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடனடியாக மார்க்கெட்டில் தேவைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், தொழிலாளர், சட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதுடன் உள்நாட்டுத் தொழிற்சாலைகளின் போட்டியிடும் நிலைமையை உயர்த்த வேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.             PHDCCI உறுப்பினர்களின் கருத்துகளை நிதியமைச்சர் கனிவுடன் கேட்டுக் கொண்டார். பொருளாதாரம், தொழில், வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து  PHD சபை அளித்த ஆலோசனைகளை அவர் குறித்துக் கொண்டார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் (நிதி) திரு அஜய் பூஷண் பாண்டே, நிதியமைச்சகத்தின்  நிதிச்சேவைகள் துறையின் செயலாளர் திரு தேவசிஷ் பாண்டா,  கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. ராஜேஷ் வர்மா, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், PHD சபையின் மூத்த துணைத் தலைவர் திரு சஞ்சய் அகர்வால், PHD சபையின் செயலாளர் திரு பிரதீப் முல்தானி, PHD சபையின் செகரெட்டரி ஜெனரல் திரு சௌரவ் சன்யால், PHD சபையின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...