முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கருத்துக்கேட்பு அழைப்பு மையம் துவக்கம்

கோவிட்-19 காலத்தில் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தைத் தொடங்கி வைத்து குடிமக்களுடன் நேரில் கலந்துரையாடினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங். பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்களைப் பெறுவதற்கான அழைப்பு மையத்தை மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மூலம், குறைகள் தீர்க்கப்பட்ட குடிமக்களுடன் மத்திய அமைச்சர் நேரில் கலந்துரையாடினார். இதுவரை கோவிட்-19 தொடர்பான பொதுமக்களின் ஒரு லட்சம் குறைகளுக்கு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தீர்வு கண்டுள்ளதற்கு டாக்டர்.ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். “சாதாரண மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அதிக அளவிலான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பிரதமர் மோடியின் தலைமை ஊக்குவித்து வருகிறது,” என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். கோவிட்-19 பரவல் காலத்தில் குறைகளைத் தெரிவித்த குடிமக்களுடன் மூத்த அமைச்சர் ஒருவர் உரையாடுவது இதுவே முதல் முறையாகும். இது பொது மக்களின் குறைகளை சிறப்பான முறையில் தீர்ப்பதுடன், மக்களிடம் கருத்துக்களைப் பெறும் வழிமுறையையும் செயல்படுத்த மற்ற மத்திய அமைச்சர்களுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக பிஎஸ்என்எல்-லுடன் இணைந்து அழைப்பு மையங்களை புவனேஷ்வர், குவஹாத்தி, ஜாம்ஷெத்பூர், வதோதரா, அகமதாபாத், லக்னோ, அஜ்மீர், குண்டூர், கோயம்புத்தூர், குண்டாகல் ஆகிய பகுதிகளில் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்படுத்துகிறது. இதில், 1,406 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த மையங்கள் மூலம், மார்ச் 30, 2020 முதல் மே 30, 2020 வரையான காலத்தில் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொடர்பான 1.28 லட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும். இந்த மையங்களில் பணியாற்றுவோர் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த தேவையான பயிற்சிகள், ஜூன் 9-10, 2020-இல் நிறைவடைந்தது. இந்த மையங்கள், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, கன்னடம், கொங்கனி, மலையாளம், தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காளி, அசாமி மற்றும் ராஜஸ்தானி மொழிகளில் செயல்படும். இந்த நிகழ்ச்சியில், கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையத்தில் மூன்று நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்பட்ட 4 பேருடன் டாக்டர். ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். டாக்டர். ஜிதேந்திர சிங்குடன் கலந்துரையாடியவர்களில் முதலாவதாக, கர்நாடகாவின் பிஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.ரேணுகா வி.பரசப்பாகோல், கனரா வங்கியிலிருந்து பணம் திரும்ப வரவேண்டும் என்று கோரியிருந்தார். இந்தக் குறையை நிதிச்சேவைகள் துறை தீர்த்து வைத்தது. இரண்டாவதாக, முதிர்ச்சியடைந்த மாதாந்திர வருவாய் திட்ட முதலீட்டுத் தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதிவாசி திரு.கோர்தன்பாய் ஜெதாபாய் விடுத்த கோரிக்கையை அஞ்சல்துறை தீர்த்து வைத்தது. மூன்றாவதாக, தனது மகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த திரு.லட்சுமிநாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை எய்ம்ஸ் மருத்துவமனை தீர்த்து வைத்தது. நான்காவதாக, சென்னையைச் சேர்ந்த திரு.மிரிதின் ஜெயன், சேமிப்புகளை மாதாந்திர தவணைகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனுவில் கொடுத்திருந்த கோரிக்கையை அஞ்சல்துறை ஏற்றுக் கொண்டது. பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான கோவிட்-19 தேசியக் கண்காணிப்பு மையம் குறித்து அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்டதாகவும், குறைகளை உரிய நேரத்தில் தீர்த்து வைத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் டாக்டர்.ஜிதேந்திர சிங்கிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங், இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பெருமளவில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆளுமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இந்தியாவில் குறைகளைத் தீர்ப்பதில் விரிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக அளவில் குறை தீர் மனுக்களைப் பெறும் 20 அமைச்சகங்கள்/துறைகளில் குறைகளைத் தீர்ப்பதற்கான கடைசி கட்ட அதிகாரிகளை நியமித்தது, மத்திய பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையத்துடன் மாநில/யூனியன் பிரதேசங்களின் குறை தீர் வலைதளங்களை ஒருங்கிணைத்தது மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான அழைப்பு மையங்கள் அமைத்தது உள்ளிட்ட மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய குடிமக்களை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலக வாய்ப்புகளை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை வரும் நாட்களிலும் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் குறைகளை வெற்றிகரமாக தீர்வு கண்டது குறித்த விவரங்களை தொகுத்து வெளியிட வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை டாக்டர்.ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். இதனை வெளியிடுவதன் மூலம், தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு ஆர்வமுடன் உள்ளது என்ற நம்பிக்கையை குடிமக்கள் மத்தியில் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...