முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பு குறியீடுகளில் மேம்பாடு

பொருளாதார நடவடிக்கை அதிகரிப்பு - பொருளாதாரக் குறியீடுகளில் மேம்பாடு. 'உயிரோடு இருந்தால் உலகம் உங்கள் வசம்' என்னும் உயிர்களைக் காப்பாற்றும் அவசரத் தேவையால் வழிநடத்தப்பட்டு, நாட்டில் கொவிட்-19 பரவலை ஆரம்ப கட்டங்களிலேயே தடுப்பதற்காக 24 மார்ச், 2020 அன்று முதல் 21 நாட்களுக்கு கடுமையான பொதுமுடக்கத்தை இந்தியா அமல்படுத்தியது. நாட்டின் சுகாதார மற்றும் பரிசோதனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பொதுமுடக்கக் காலம் வாய்ப்பளித்தது. தடமறிதல், சிகிச்சை மற்றும் தகவல் தெரிவித்தல் ஆகியவை தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுவதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் ஆகும்.   அதே சமயம், கடுமையான பொதுமுடக்கமும், சமூக விலகல் நடவடிக்கைகளும் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. உயிர்களுடன் சேர்த்து வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கான உத்தியை நோக்கி படிப்படியாக முன்னேறியதின் மூலம், ஜூன் 1 முதல் 'அன்லாக் இந்தியா' என்னும் தளர்வுகளை அமல்படுத்தும் திட்டம் தொடங்கி சேவைகளும், தொழில்களும் நாட்டில் மீண்டும் தொடங்கின. குறைந்தபட்ச பாதிப்புடன் பொருளாதாரத்துக்கு கூடிய விரைவில் புத்துயிர் அளிக்க, குறுகிய கால மற்றும் நீண்ட காலத்துக்கு தேவையான சரியான கொள்கை நடவடிக்கைகளை அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் படிப்படியாக எடுத்தன.   இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக வேளாண் துறை இருப்பதாலும், பருவமழை இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும், நாட்டின் பொருளாதாரம் சீரவடைதற்கு அது ஆதரவளிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அந்தத் துறையின் பங்களிப்பு மிகவும் பெரிதாக இல்லாத பட்சத்திலும் (தொழில் மற்றும் சேவைத் துறைகளோடு ஒப்பிடும் போது), வேளாண்மையை நம்பியிருக்கும் அதிக அளவிலான மக்களிடத்தின் அதன் வளர்ச்சி நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், செயல்திறன் மிகுந்த மதிப்பு சங்கிலிகளைக் கட்டமைப்பதிலும், விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்வதிலும், வேளாண் துறைக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மிக்க சீர்திருத்தங்கள் பெரிதும் பங்காற்றும்.   தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கத் தொடங்கிய இரண்டே மாதங்களில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்ததில் இருந்து இந்திய உற்பத்தித் துறையின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு, மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து, மற்றும் சில்லறை நிதிப் பரிவர்த்தனைகள் ஆகிய உண்மையான செயல் குறீயீடுகள் வளர்ச்சியை சந்தித்ததன் மூலம், பொருளதாரப் புத்தாக்கத்தின் ஆரம்பப் பசுமை அறிகுறிகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் தெரியத் தொடங்கின.   பொருளாதார குறியீடுகளில் மேம்பாடு வேளாண்மை  * விவசாயிகளிடம் இருந்து அரசு முகமைகள் கோதுமையை வாங்குவதில் 2012-13-இல் செய்யப்பட்ட முந்தைய சாதனையான 381.48 லட்சம் மெட்ரிக் டன்களை முறியடித்து, 16 ஜூன், 2020 அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 382 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கொவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலங்களில் சமூக விலகல் கட்டுப்பாடுகளின் கீழ் இந்த சாதனை செய்யப்பட்டது. 42 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ 73,500 கோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.   * சிறு வன உற்பத்தி பொருள்களுக்கான (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ், 16 மாநிலங்களில் சிறு வன உற்பத்தி பொருள்களின் கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு ரூ 79.42 கோடியைத் தொட்டது. கொவிட்-19 பெருந்தொற்று பழங்குடிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள துன்பமான காலகட்டத்தில் மிகவும் தேவையான மருந்தாக இது அமைந்தது.   * கரீப் பயிர்களை 13.13 மில்லியன் ஹெக்டேர்களில் 19 ஜூன் நிலவரப்படி விவசாயிகள் விதைத்துள்ளனர். எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி ஆகியவற்றின் பரப்பளவில் கடந்த ஆண்டின் இதே பருவத்தோடு ஒப்பிடும் போது இது 39 சதவீதம் அதிகமாகும்.   * வலிமையான வேளாண் துறையைக் குறிக்கும் வகையில், மே 2020-இன் படி உரங்களின் விற்பனை ஒரு வருடத்தில் 98 சதவீதம் உயர்ந்துள்ளது (40.02 லட்சம் டன்கள்).   உற்பத்தி   * ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் மேலாளர் குறியீடு (PMI) மே மாதத்தில் முறையே 30.8 மற்றும் 12.6 (ஏப்ரலில் முறையே 27.4 மற்றும் 5.4) என்ற அளவில் இருந்தன.   * ஏப்ரலில் (-) 24 சதவீதமாக இருந்த மின்சார நுகர்வின் சுருங்கிய வளர்ச்சி விகிதம், மே மாதத்தில் (-) 15.2 சதவீதமாகவும், ஜூனில் (ஜூன் 21 வரை) (-) 12.5 சதவீதமாகவும் இருந்தன. மின்சார நுகர்வு ஜூன் மாதத்தில் தொடர்ந்து மேம்பட்டு முதல் வாரத்தில் (-) 19.8 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் (-) 11.2 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் (-) 6.2 சதவீதமாகவும் இருந்தது.   * கடந்த வருடம் மற்றும் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது குறைவெனும் போதிலும், மின்-வழி ரசீதுகளின் மொத்த மதிப்பீட்டு மதிப்பு ஏப்ரல், 2020-த்துடன் (ரூ 3.9 லட்சம் கோடி) ஒப்பிடும் போது மே, 2020-இல் 130 சதவீதம்  (ரூ 8.98 லட்சம் கோடி) உயர்ந்திருந்தது. மாதம் முடிவதற்கு 11 நாட்கள் இருந்த நிலையில், ஜூன் 1 முதல் 19 வரையிலான மின்-வழி ரசீதுகளின் மதிப்பு ரூ 7.7 லட்சம் கோடியாக இருந்தது.   * நாட்டின் நுகர்வு மற்றும் உற்பத்திச் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் முக்கியக் குறியீடான பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு, ஏப்ரலின் 99,37,000 மெட்ரிக் டன்களுடன் ஒப்பிடும் போது 47 சதவீதம் உயர்ந்து 1,46,46,000 மெட்ரிக் டன்களாக மே மாதத்தில் இருந்தது. தொடர்ந்து, பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு வளர்ச்சியின் குறைவு வருடாந்திர அளவில் ஏப்ரலின் (-) 45.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் மிகவும் குறைவாக (-) 23.2 ஆக இருந்தது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்லாக் 1.0-வின் ஒரு மாதத்துக்கு பிறகு, பெட்ரோலிய பொருள்களின் நுகர்வு ஜூன் மாதத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...