முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிமக்களுக்குப் பயன்படும்படியான டிஜிட்டல் மாற்றம் அமைந்ததாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்திய குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது: ரவிசங்கர் பிரசாத் அதிகாரம் அளிப்பு, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்துவதாக டிஜிட்டல் பயணம் அமைந்துள்ளது. அதன் ஆக்கபூர்வமான தாக்கம் இந்தியக் குடிமக்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் உணரப்பட்டுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் சட்டம், நீதித் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி காணொளி மூலம் நடைபெற்ற மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், இப்போதைய நோய்த் தாக்குதல் சூழ்நிலையில், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற மூன்று வசதிகள் காரணமாக, மக்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற முடிகிறது, மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது, தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினிகள் மூலம் மாணவர்கள் கல்வி கற்க முடிகிறது, நோயாளிகள் தொலைவில் இருந்தே ஆலோசனை பெற முடிகிறது, இந்தியாவில் எளிதில் அணுக முடியாத தொலை தூரங்களில் இருக்கும் விவசாயிகளும் பிரதமரின்-கிசான் திட்டப் பயன்களை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெற முடிகிறது என்று கூறினார்.      டிஜிட்டல் பாரத் - தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் துறையின் அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே, சில மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், திரு. நந்தன் நில்கேணி, அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், அமைச்சகங்கள், தொழில்துறை மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் இருந்து இதில் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.      கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயணம், அதிகாரம் அளித்தல், உள்ளடங்கிய வளர்ச்சி, டிஜிட்டல் நிலைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முன்னேறி வந்துள்ளது. இந்தியக் குடிமக்களின் அடையாள மேலாண்மையில் ஆதார், நேரடி ஆதாயப் பரிமாற்றம், பொதுச் சேவை மையங்கள், டிஜிலாக்கர், செல்போன் அடிப்படையிலான உமாங் (UMANG) சேவைகள், MyGov, ஜீவன் பிரமான் முதல் UPI வரையிலான தளங்கள், ஆயுஷ்மான் பாரத், இ-ஹாஸ்பிடல், பிரதமரின்-கிசான், இணையவழி சந்தை (e-NAM), மண் வள அட்டைகள், ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய கல்வி உதவித் தொகை முனையம், இ-பாடசாலா மற்றும் பிற சேவைகள் மூலம் மக்களின் வாழ்வில் அனைத்து வகைகளிலும் ஆக்கபூர்வமான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. `தேசிய செயற்கை நுண்ணறிவு முனையம்'  மற்றும் `இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு தளங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. செயற்கைப் புலனறிதல் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்ட எதிர்காலத்தை உருவாக்கிட இவை தொடங்கப்பட்டன. கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் ஆரோக்கிய சேது, இ-சஞ்சீவனி, MyGov மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தகவல்களை அளித்தல் மூலமாக டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.      2014இல் இ-சேவைகளின் எண்ணிக்கை 2,463 ஆக இருந்த நிலையில் 2020 மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 3,858 ஆக உயர்ந்திருப்பதாகவும், தினசரி பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 2014இல் 66 லட்சமாக இருந்த நிலையில், 2020இல் 16.3 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 125.7 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், 4,216 கோடி அத்தாட்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ``56 அமைச்சகங்களின் மூலம் 426 திட்டங்களுக்கான பணப்பயன்கள் ரூ.11.1 லட்சம் கோடி அளவுக்கு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் ரூ.1.7 லட்சம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 38.73 கோடி பயனாளிகள் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் பயன் பெற்றுள்ளனர். இத் திட்டத்தில் பயனாளிகளின் கணக்கில் ரூ.1.33 லட்சம் கோடி உள்ளது என்றார் அவர். கைபேசி மற்றும் இணைய வசதிகளை முறையே 117 கோடி மற்றும் 68.8 கோடி பயனாளர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். 2015 ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட டிஜிலாக்கர் சேவையில் 378 கோடி ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய-யுக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த கைபேசிச் செயலி (UMANG) மூலம் 860க்கும் மேற்பட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதில் 3 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்பு நிலையை அளிக்க வசதியாக MyGov தளம் தொடங்கப்பட்டது. அதில் 1.17 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சிக்கு உதவியாக இது உள்ளது என்று அவர் கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...