முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீஹாரில் 14000 கோடியில் நெடுஞ்சாலைகள் திட்டம் பிரதமர் துவங்கினார்

பிரதமர் அலுவலகம் பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் மாநிலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஆப்டிகல் பைபர் இன்டர்நெட் சேவைகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் வேளாண்மைத் துறை சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டில் எந்தப் பகுதியிலும் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் லாபகரமான விலைக்கு விற்க முடியும்: பிரதமர் முன்பிருந்ததைப் போல குறைந்தபட்சஆதரவுவிலை தொடரும்: பிரதமர் பயன்தரும் சீர்திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகளை சுயநலவாதிகள் தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கும் திட்டத்தையும் இன்று காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களால் பிகாரில் சாலைப் போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படும் என்று கூறினார். 3 பெரிய பாலங்கள் கட்டுதல், நெடுஞ்சாலைகளை 4 வழிப் பாதைகள் மற்றும் 6 வழிப்பாதைகளாக உயர்த்துதல் ஆகியவையும் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் அடங்கும்.21வது நூற்றாண்டு வரையறைகளுக்கு ஏற்ப பிகாரில் அனைத்து நதிகளிலும் பாலங்கள் கட்டப்படும். முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தி, பலப்படுத்தப்படும். இந்த நாள் பிகாருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியாவில் கிராமங்களுக்கு முக்கிய பங்கு அளிப்பதற்கு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பிகாரில் நடப்பது அதன் தொடக்கம் தான் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களுக்கு 1000 நாட்களில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிகாரில் 45,945 கிராமங்கள் இதில் அடங்கும். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் இன்டர்நெட் பயனாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாரும் நினைத்துகூட பார்த்திருக்க முடியாது என்று பிரதமர் கூறினார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யு.பி.ஐ. மூலம் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான  பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் தரமான, அதிக வேகமான இன்டர்நெட் வசதி கிடைக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் காரணமாக ஏற்கெனவே 1.5 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் தொடங்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வேகமான இணைப்பு மூலம் கிடைக்கக் கூடிய பயன்களைப் பட்டியலிட்ட பிரதமர், மாணவர்களுக்கான கல்வி வசதிகள் சிறப்பாகக் கிடைக்கும் என்றும் டெலி மருத்துவ வசதி கிடைக்கும் என்றும், விதைகள், தேசிய அளவிலான மார்க்கெட்களில் புதிய உத்திகள் பற்றி விவசாயிகள் அறிய முடியும் என்றும், வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் அறிய முடியும் என்றும் கூறினார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரைவாக நாடு முழுக்கவும், உலக நாடுகளுக்கும் அனுப்பி வைக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். நாட்டின் கிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதிகளை உருவாக்குவது தான் அரசின் நோக்கம் என்று பிரதமர் கூறினார். முன்னர் கட்டமைப்புகளுக்கான திட்டமிடல் ஒருசார்பாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த போதுதான் வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டது என்றார் அவர்.  அரசியலைவிட கட்டமைப்பு வசதிக்குதான் வாஜ்பாயி முன்னுரிமை அளித்தார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டார். பன்முகப் போக்குவரத்து நெட்வொர்க் உருவாக்குவது தான்  இப்போதைய அணுகுமுறையாக உள்ளது. இதில் ஒவ்வொரு வகையிலான போக்குவரத்து வசதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கும். கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான திட்டங்களில் இப்போது காட்டப்படும் வேகம், முன் எப்போதும் இல்லாத அளவில் உள்ளது. இன்றைக்கு 2014க்கு முன்பு இருந்ததைவிட இரட்டிப்பு வேகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 5 மடங்கு அதிகமாக செலவிடப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். வரக்கூடிய 4 - 5 ஆண்டுகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.110 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ரூ.19 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் இணைப்பு வசதி தொடர்பான கட்டமைப்பு விரிவாக்கத்துக்கான இந்த முயற்சிகளில் பிகார் மாநிலமும் பயன்பெறுகிறது என்று பிரதமர் கூறினார். 2015ல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் தொகுப்புத் திட்டங்களின் கீழ், 3000 கிலோமீட்டர் நீளத்துக்கான தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. கூடுதலாக பாரத்மாலா திட்டத்தில் ஆறரை கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப் படுகிறது. இன்றைக்கு பிகாரில், தேசிய நெடுஞ்சாலைத் தொகுப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு பிகாரை நான்கு வழிப்பாதை மூலம் இணைக்க 5 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்க 6 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். பெரிய நதிகள் இருப்பது தான் பிகாரில் இணைப்பு வசதியை உருவாக்குவதில் பெரிய தடையாக இருந்தது. இதனால் தான் பிரதமரின் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பாலங்கள் கட்டுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கங்கையின் மீது 17 பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றின் பணிகள் முடிந்துவிட்டன. அதேபோல, காண்டாக் மற்றும் கோசி நதிகளின் மீதும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாட்னா சுற்றுச்சாலை மற்றும் பாட்னா மற்றும் பகல்பூரில் மகாத்மா காந்தி பாலம் மற்றும் விக்ரம்ஷிலா பாலம் ஆகியவற்றுக்கு இணை போக்குவரத்தாக அமையும் பாலங்கள் கட்டுவதன் மூலம், இணைப்பு வசதி மேம்படும் என்றார் பிரதமர். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட வேளாண்மை மசோதாக்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகள் கிடைக்கும். தங்கள் விளைபொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது. முன்னர் சுயநலக்காரர்கள் பணம் சம்பாதிக்கும் வகையில் இருந்த நடைமுறையால், அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வந்தனர் என்று பிரதமர் தெரிவித்தார். வேளாண் சந்தைகள் தவிர, புதிய சீர்திருத்தங்களின்படி விவசாயிகளுக்கு நிறைய மாற்று வழிகள் கிடைக்கும் என்று திரு. மோடி கூறினார். அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும். பிகாரில் உருளைக்கிழங்கு வியாபாரிகள் பயன் பெற்றது பற்றிக் குறிப்பிட்ட அவர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் வித்து விளைவிக்கும் விவசாயி, புதிய திட்டத்தின் கீழ் 15 முதல் 30 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம் ஈட்டியதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் மில் உரிமையாளர்கள் நேரடியாக எண்ணெய்வித்துக்களை கொள்முதல் செய்து கொள்கிறார்கள். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பருப்பு வகைகள் உபரியாக இருக்கும். அந்த விவசாயிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 15 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் விலைகள் பெற்றிருக்கிறார்கள். பருப்பு மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததால் இந்தப் பயன் கிடைத்துள்ளது. வேளாண் சந்தைகள் மூடப்படாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார். முன்பிருந்ததைப் போல அவை தொடர்ந்து செயல்படும் என்றார் அவர். கடந்த 6 ஆண்டுகளில் வேளாண் சந்தைகளை நவீனமாக்குதல் மற்றும் கம்ப்யூட்டர்மயமாக்குவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை முன்பிருந்ததைப் போல தொடரும் என்று விவசாயிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியளித்தார். விவசாயிகளை தவறாக வழிநடத்தும் இதே சுயநலவாதிகள் தான், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தார்கள் என்று பிரதமர் கூறினார். எப்போதும் போல ஒவ்வொரு பருவத்திற்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நிலை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இடுபொருள் செலவு அதிகரிப்பு காரணமாகவும் குறைந்த விளைச்சல் காரணமாக குறைந்த லாபம் மட்டுமே கிடைப்பதாலும் 85 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் இன்னும் சிறிய அல்லது விளிம்புநிலை விவசாயிகளாகவே இருந்து வருகிறார்கள் என்று கூறினார். விவசாயிகள் யூனியனாக சேர்ந்தால் இடுபொருள் செலவுகளை குறைத்து, நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்று பிரதமர் கூறினார். கொள்முதல் செய்பவர்களுடன் இவர்கள் நல்ல பேரங்கள் பேசிட முடியும். இந்த சீர்திருத்தங்கள் காரணமாக வேளாண்மைத் துறையில் முதலீடு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தின் வசதிகள் கிடைக்கும், விவசாய விளைபொருட்கள் அதிக எளிதாக சர்வதேசச் சந்தைகளை அடைய முடியும் என்று திரு. மோடி கூறினார். பிகாரில் உள்ள ஐந்து விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்கள், மிகப் பிரபலமான அரிசி விற்பனை நிறுவனத்துடன் எப்படி அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன என்பது பற்றியும், திரு மோடி குறிப்பிட்டார்.  இந்த ஒப்பந்தத்தின்படி, விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்களிடமிருந்து நாலாயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதே போல, இந்த சீர்திருத்தங்களால், பால் உற்பத்தி நிறுவனங்களும் பலனடையும் என்று அவர் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின் சில விதிமுறைகள் விவசாயிகளின் சுதந்திரத்திற்குத் தடையாக இருந்தன. பருப்புகள், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் பெருமளவில் தங்கள் விளைபொருட்களை குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைக்க முடியும். நமது நாட்டில், சேமிப்பு தொடர்பான சட்டப்பூர்வ பிரச்சினைகளை நீக்கிவிட்டால், குளிர்பதனக் கிடங்குகள் வசதி இன்னும் பெருகும் என்று பிரதமர் கூறினார். வேளாண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் குறித்த விஷயங்களில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்த சில சுயநலவாதிகள் முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார். 2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் இருந்ததைவிட, கடந்த 5 ஆண்டுகளில் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகளை அரசு கொள்முதல் செய்யும் அளவு சுமார் 24 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில், ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது என்ற தகவலையும் பிரதமர் கூறினார். இந்த ஆண்டு ரபி பருவத்தில், விவசாயிகளுக்கு கோதுமை, தானியம், பருப்புகள் மற்றும் எண்ணெய்வித்துகள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1.13 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் அதிகம். அதாவது கொரோனா காலத்தில், அரசின் கொள்முதல் முந்தைய காலங்களைவிட அதிகமாக இருந்தது என்பதுடன், விவசாயிகளுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நவீன சிந்தனையுடன், புதிய நடைமுறைகளை உருவாக்கித் தருவது தான் 21வது நூற்றாண்டு இந்தியாவின் பொறுப்பாக இருக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த