முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் கிஷான் திட்ட விவசாயிகள் பணத்தில் முறைகேடு சிக்கும் புரோக்கர்கள் சிக்காத அதிகாரிகள்

பாரதப் பிரதமரின் கிஷான் திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் குத்தகை இல்லாத, நேரடி விவசாயிகளுக்குப் பயிர் செய்வதற்கு உதவும் வகையில் ஒரு தவணைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் சுமார் 6,5000கோடி வங்கிக் கணக்கிற்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட திட்டத்தில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 1500 போலி பயனாளிகள். இரண்டு தவணைகளில் ரூ. 60 லட்சம் வரை மோசடி. விழுப்புரம் மாவட்டத்தில் 11,200 போலி விவசாயிகள். மோசடியாக சேர்ந்த 11,200 பேரிடம் இருந்து ரூ.4 கோடி மட்டுமே பறிமுதல். திருவாரூர் மாவட்டத்தில் 375 போலி விவசாயிகள்.ரூ.15.40 லட்சம் வரை மோசடி.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடாகச் செலுத்தப்பட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். அதன்பின் கொரானா பாதிப்பு காலத்தில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகின்றது.. கரூர் மாவட்டத்தில் 85 பேர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்பு. பெரம்பலூர் 1,700 பேர், 2 தவணைகளில் ரூபாய்.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி இதுவரை ரூபாய்.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக இரண்டு லட்சம் பேர் மோசடி. இதனால் கிசான் திட்டத்தின் கீழ் அவர்கள் பெற்ற பணம் திருப்பி வசூலிக்கப்படுகிறது. ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலை இந்தத் திட்டத்தில் நடந்த ஊழலில் இதுவரை பல கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை போலியான விவசாயிகள் கணக்கில் இருந்து மத்தியரசு அதிரடியாக கைப்பற்றியுள்ளது. மத்திய அரசு திட்ட பணம் என்று கூறி இடைத்தரகர்கள் இடத்தில் பார்கோடுகளை கொடுத்து ஆவணங்களை பெற்று கிசான் திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடாக இணைந்துள்ளனர். இதில் சம்மந்தபட்ட அனைவரும் கண்டறியபட்டு முறைகேடாக வெளியே சென்ற பணம் அத்தனையும் அரசு மீட்க வேண்டும்.. சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்வது மட்டுமல்லாமல் போலி விவசாயிகளாக இணைந்து பலன் பெற்ற நபர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை வேண்டும்.. விவசாய துறையில் முதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தம். உண்மையான விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களின் வங்கி கணக்கு நில உடமை மற்றும் உரிமை ஆவணம் + ஆதார் விவரங்களை இணைத்து.. ஒவ்வொரு உண்மையான விவசாயிக்கும் தனியாக அடையாள எண்ணுடன் கூடிய முழுமையான database .என நாடு தழுவிய அளவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் என உருவாக்க வேண்டும் அரசியல்வாதிகள் உட்பட விவசாயத்திற்குச் சம்பந்தமேயில்லாத பலரும் ஆளாளுக்கு தானும் விவசாயி என்று போலியாக அடுத்தவர் நிலத்தைக் காண்பித்து. ஊழல் செய்வதை. அப்போதுதான் தடுக்க இயலும். இது புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களில் பார்வை திரும்பினால் பல போலி விவசாயிகள் சிக்கும் வாய்ப்பு உண்டு விவசாயிகளிண் கௌரவ நிதியில் ஊழல் செய்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் மற்றும் போலிப் பயனாளிகள் மீது தமிழக அரசு சி பி சி ஐ டி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போல், ஏழை மக்கள் கழிப்பறை கட்டுவதற்கும் வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்திலும் மத்திய அரசு ரூபாய் 8000/- வீதம் வழங்கிய பல்லாயிரக்கணக்கானோரின் பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகள் கௌரவ நிதி விவகாரம். இது வரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான போலி கணக்குகள்.110 கோடி ரூபாய் ஊழல். இடைத்தரகர்கள் மட்டுமே காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது திட்டமிடப்பட்ட கொள்ளை. பல மாவட்டங்களில் நடந்துள்ளது. காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டு மொத்த அமைப்பே இலஞ்சம் மற்றும் ஊழலில் சிக்கித் திளைக்கிறது என்பதற்கான அடையாளமாகவே இது அனைவராலும் பாரக்கப்படும் நிலையில் விவசாயிகள் கௌரவ நிதியில் நடைபெற்ற முறைகேடுகள். விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய நிதியில் பல முறைகேடு நடந்துள்ளது, நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலேயே லஞ்சம் மற்றும் ஊழல் ஊடுருவியுள்ளதை தெளிவாகக் குறிக்கிறது.உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை, 2018 ல் இந்தியாவிலேயே 'தமிழகம் தான் ஊழலில் முதலிடம் வகிக்கிறது' என்று சொன்னதை நிரூபித்துள்ளது. இந்தக் கேவலமான செயல். விவசாயிகளின் வயிற்றிலடித்து பிழைப்பு நடத்தும் அற்பப் பதர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். புரையோடிப்போயிருக்கிற இலஞ்ச ஊழலை ஒழிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் ஊழல் என்றாலே அரசியல் கட்சிகளை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை என்பதையும், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் விவசாய பயனாளிகளின் பெயரில் ஏமாற்றி பணம் பெற்ற பொதுமக்களில் சிலர் என அனைவருமே தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதையும் உணர்தல் வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...