முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடுகள் தோரும் காய்கனித் தோட்டம் மத்திய அரசின் திட்டம்

ஊட்டச்சத்து காய்கறிகளையும் பழங்களையும் முறையாகப் பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டின் பின்தளத்திலும் சமையலுக்கான தோட்டத்தை அமைக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. செப்டம்பர் மாதம் ஊட்ட சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது கே. தேவி பத்மநாபன் – கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி கொவிட் 19 தொற்றுநோயால் ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழலில், பொருட்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி 'உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்” என அழைப்பு விடுத்ததுடன், ”சுயசார்ப்பு பாரதம்” திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளுடன் தன்னம்பிக்கை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள - SAM குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கூடுதல் சத்தான உணவை அளிக்க, ஊட்டச்சத்து - தோட்டங்கள் / சமையலறை தோட்டங்களை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். உலக சுகாதார அமைப்பு- WHO தரத்தின்படி, கடுமையான ஊட்டசத்து குறைபாடு கொண்ட (SAM) குழந்தைகளின் எடை-உயர  விகித வித்தியாசம் 3-க்கும் குறைவாக இருக்கும்.  போஷன் மா - ஊட்டச்சத்து மாதத்தில், அங்கன்வாடி தொழிலாளர்களால் சிறப்பு செயலி மூலம் கடுமையான ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஒட்டுமொத்த கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு / SAM நிர்வாகத்தை உள்ளடக்கிய அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான விரிவான திறன் மேம்பாட்டு செயலிகள் இயக்கப்படும். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள / SAM குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண சமூக அடிப்படையிலான உணர்திறன் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஊட்டசத்து குறைபாடுடைய  குழந்தைகளை அடையாளம் காண்பதுடன், வீட்டு கொல்லைப்புறம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மட்டத்திலும் சத்தான சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆரோக்கியமான குழந்தைக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மத்தியில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கப்படுகிறது. அரியலூரில், ஊட்டச்சத்து மாத கண்காட்சியைத் திறந்து வைக்கும் போது மாவட்ட ஆட்சியர் திருமதி டி ரத்னா, கர்ப்பிணிப் பெண்கள் குறைந்தது 10 கிலோ எடை அதிகரிப்பதுடன், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். அரியலூர் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில் 774 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களைச் சேர்ந்த அங்கன்வாடி தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு சமையலறை தோட்டம் அமைக்க கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பட்டாணி, சுரைக்காய் விதைகள் மற்றும் கரிம உரம் ஆகியன வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டத்தின், திருச்சி அதிகாரிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் ஊட்டச்சத்து / சமையலறை தோட்டங்களை அமைக்க ஊக்குவிப்பதாக திட்ட அலுவலர் திருமதி டி புவனேஸ்வரி தெரிவித்தார். திருச்சியில் 1850 அங்கன்வாடி மையங்கள் உள்ளன என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்ட தொழிலாளர்களின் உதவியுடன் வீடுகளில் 1314 க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து தோட்டங்களும், அங்கன்வாடி மையங்களில் 735 ஊட்டச்சத்து தோட்டங்களும், சமூக மட்டத்தில் 155 ஊட்டச்சத்து தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். மொட்டை மாடி தோட்டம் மற்றும் கொல்லைப்புறத்தில் பல வகையான காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக திருமதி பத்மஸ்ரீ கூறினார். அவர் சுரைக்காய், சுண்டைக்காய், புடலங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், சாலட் வெள்ளரி, காலிஃபிளவர், வெண்டைக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றை வளர்த்து வருவதாக தெரிவித்தார். மாட்டு சாணம் உள்ளிட்ட கரிம உரம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய் காரணமாக ஊரடங்க்கு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் உள்நாட்டில் வளர்க்கப்படும் முருங்கை கீரை, பசலைக்கீரை - கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்று அவர் கூறினார். மேலும் அவர், இது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் மூலம் எளிதில் கிடைக்கும் சத்தான உணவை உறுதி செய்கிறது, என்று கூறினார். ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் தோட்டக்கலைகளிலும் ஈடுபடுகிறார்கள். தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு சுய-நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து முக்கியமானது. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு தேவை. சமையலறை தோட்டங்கள் அனைவருக்கும் மலிவு விலையில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய உதவும், மேலும் மக்கள் எந்தவொரு நோய் தொற்றையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள், அதே நேரத்தில் தன்னிறைவு வளரும்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...