முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செறிவூட்டல் அரிசித் திட்டம் அக்டோபர் முதல் திருச்சியில் அமலாகிறது

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் பயனாளிகளுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு தோட்டத்தில் வளர்ப்பது ஆகியவை இந்த மாதத்தில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. வைட்டமின்கள், இரும்புச் சத்து ஆகியவற்றுடன் செறிவூட்டிய அரிசி, பிரதானமான உணவான அரிசியுடன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும்.       செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் திருச்சி மாவட்டத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அக்டோபர் 1-ம்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை பொது விநியோக முறையின் கீழ் தொடங்கியுள்ளது. ரூ.174.64 கோடி செலவில், 2019-20 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  வடகிழக்கு பிராந்தியம், மலைப்பகுதி மற்றும் தீவு மாநிலங்களில் இத்திட்டத்துக்கு மத்திய அரசால் 90;10 என்ற விகிதத்திலும், மற்ற மாநிலங்களில் 75;25 என்ற விகிதத்திலும் நிதி அளிக்கப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் வீதம் 15 மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   இத்திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், ஆலையில் செறிவூட்டப்பட்டு வழங்கப்படும். மாவட்டங்களை தேர்வு செய்தல், முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம், தெலங்கானா, பஞ்சாப், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 15 மாநிலங்கள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் 2020 பிப்ரவரி முதல் இந்த முன்னோடி திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில், ரத்த சோகை குறைபாட்டைப் போக்கும் வகையில், தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ( போஷன் அபியான்) செறிவூட்டிய உணவாக அரிசியை மத்திய அரசு சேர்த்துள்ளது. இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் பி12 ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து செறிவூட்டி ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றி, திருச்சி மாவட்டத்தில் 1224 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும். தமிழக குடிமைப்பொருள் வழங்கு நிறுவனம், திருச்சியில் 12,000 டன் அரிசியை நுண்சத்துக்களை சேர்த்து, ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில், சுமார் 7.5 லட்சம் அட்டைதாரர்கள் இந்த முன்னோடி திட்டத்தின் கீழ், பயன் பெறுவார்கள். அரிசி செறிவூட்டலுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 கோடியை, மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை அரிசி, ஊட்டச்சத்து கலப்பு, கடைகளுக்கு கொண்டு செல்லுதலுக்கு பயன்படுத்தப்படும்.   கோவிட்-19 பெருந்தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை ரேசன் கடைகள் மூலம், ஊட்டச்சத்து மிக்க உணவை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு செயல்படுத்தி வருவதில் வியப்பேதுமில்லை.    ​


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...