முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20 இலட்சமாக உயர்வு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2020 அக்டோபர் 20 அன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி நிதி ஆண்டு 2021-இன் முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06 லட்சம் நிகர சந்தாதாரர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர் என்று ஈபிஎப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட்-19-இன் பாதிப்புக்கு இடையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அதிகளவில் சந்தாதாரர்கள் இணைந்துள்ளது, பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மெதுவாக விடுபட்டு கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி நிலைமை முன்னேறி வருவதை காட்டுகிறது. மாநிலங்களை பொருத்தவரை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகியவற்றில் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  2020-ஆம் ஆண்டின் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இணைந்துள்ள மொத்த உறுப்பினர்களில் 57 சதவீதம் மேற்கண்ட மாநிலங்களில் உள்ளனர். ஊழியர்களின் வருங்கால நிதி அமைப்பு (EPFO) ஆன்லைனில் வருங்கால வைப்பு நிதியின்(PF) கணக்கு விவரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. அதாவது விரல் நுனியில் இணையத்தில் வருங்கால வைப்பு நிதியின் நிலுவைத் தொகையை உட்பட பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் / முன்னேற்றங்கள் / உள்-பரிமாற்றங்கள்/ வெளி-பரிமாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் நிலுவை தொகையை சரிபார்க்க உதவும் செயல்முறை உங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் நிலுவைத் தொகையை அறிய இணைய இணைப்பை கிளிக் செய்திடுங்கள் * கணக்கை பராமரித்து வரும் இபிஎஃப்ஒ(EPFO) அலுவலகத்தை தேர்ந்தெடுத்து பிஎஃப் கணக்கு எண்ணை கொடுத்திடுங்கள். கணக்குக்கு விரிவாக்க துறை எண் இல்லையெனில் அதை காலியாக விடவும். பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுக்கவும். அவ்வாறு கொடுக்கப்பட்ட மொபைல் எண் பிஎஃப் கணக்கு எண்ணுடன் சேர்த்து பதிவு செய்யப்படும். உங்களுடைய சமர்ப்பிப்பு வெற்றி பெற்ற பின் உங்களூடைய விபரங்கள் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். உரிமை நிலையை தெரிந்து கொள்ளலாம் இந்த வசதி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் / சந்தாதாரர்கள் / ஓய்வூதியம் பெறுவோர் போன்றவர்கள் இந்தியா முழுவதும் உள்ள ஏதேனும் ஒரு இபிஎஃப்ஒ(EPFO) அலுவலகத்தில் சமர்ப்பித்த உரிமை நிலையைதெரிந்து கொள்ள உதவுகிறது. இந்த வசதி மூலம் ஒரு சமர்ப்பிக்கப்பட்ட உரிமை நிலையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த உதவியை பயன்படுத்த உங்களுடைய பிஎஃப் கணக்கு எண்ணை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் உரிமை நிலையை பற்றிய தகவல் பக்கத்தில், உங்களுடைய முதலாளி எந்த பிராந்திய வருங்கால நிதி அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கிறரோ அந்த அலுவலகத்தை தேர்ந்தெடுத்து பிஎஃப் கணக்கு எண்ணை தெரிவிக்கவும். உங்கள் உரிமை நிலையை அறிய இணைப்பை கிளிக் செய்திடுங்கள் * நீங்கள் உரிமை நிலையை தாக்கல் செய்துள்ள பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தைப் பற்றி தெரியும் என்றால், அதை தேர்வு பட்டியலில் இருந்து தேர்ந்து எடுங்கள் அலுவலகத்தை தேர்வு செய்த பின், அலுவலக பிராந்தியம் எண் மற்றும் அலுவலகம் எண் போன்றவை அந்தந்த பெட்டிகளில் தானாக உருவாகும் மூன்றாவது பெட்டியில் எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணை கொடுத்திடுங்கள். அந்த எண் அதிகபட்ச 7 இலக்குகள் வரை இருக்க முடியும். சில நேரங்களில் எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணிற்கு துணை அல்லது இணை எண்கள் இருக்கலாம். அவ்வாறெனில் அதையும் கொடுத்திடுங்கள். அது ஒரு எண்ணாகவோ அல்லது ஒரு எழுத்தாகவோ இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் 3 இலக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்டாபிளிஸ்மெண்ட் எண்ணிற்கு துணை அல்லது இணை எண்கள் இல்லை எனில் அந்த இடத்தை காலியாக விட்டு விடுங்கள். அதிகபட்சமாக 7 இலக்குகள் உடைய கணக்கு எண்ணை உள்ளிடவும். அதன் பின்னர் சமர்ப்பிக்கும் பட்டனை கிளிக் செய்யவும் இறுதியாக உங்கள் கணக்கு நிலை திரையில் தோன்றும். நீங்கள் நீண்ட நாட்கள் உங்களுடைய பிஎஃப்யிற்கு காத்திருக்கிறீர்கள் என்றால் அதை குறைகளுக்கான இணைப்பை கிளிக் செய்து உங்கள் குறைகளை பதிவு செய்யலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...